Site icon ilakkiyainfo

காதலுக்கு கண்ணில்லை…

kathal-1

ஒரு பெண் திரு­மணம் முடித்­து­விட்டால் அவள் வேறொ­ரு­வ­னுக்குச் சொந்­த­மா­கி­வி­டு­கிறாள். அவ­ளுடன் முன்னர் அந்­நி­யோன்­னி­ய­மாக பழ­கிய அனை­வ­ருமே இதன் கார­ண­மாக தமது அந்­நி­யோன்­னி­யத்தை சற்றுத் தளர்த்திக் கொண்டு நடக்க வேண்­டிய சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றனர்.

அப்­பெண்­ணுடன் சக­ஜ­மாக ஒரு வரம்­பிற்­குட்­ப­டாமல் பேசிப்­ப­ழ­கிய நண்­பர்கள் ஏன் உடன்­பி­றப்­புக்கள் கூட, அவள் திரு­மணம் முடித்த பின்னர் அவ­ளு­ட­னான உறவை சற்றுத் தளர்த்திக் கொள்ள வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்கு ஆளா­கின்­றனர்.

திரு­ம­ணத்­துக்கு முன்பு வரை தனது தந்­தையின் பெயரை முத­லெ­ழுத்­துக்­க­ளாகப் பயன்­ப­டுத்­தி­யவள் பிறகு தனது கண­வனின் பெயரை முத­லெ­ழுத்­துக்­க­ளாகப் பயன்­ப­டுத்­து­கிறாள்.

இந்து மதத்தைப் பொறுத்த வரை ஒரு பெண்­ணா­னவள் திரு­மணம் முடித்­தவள் என்று அடை­யாளம் கண்­டு­கொள்ள சில குறி காட்­டிகள் இருப்­பது வழக்கம். நெற்­றியில் குங்­குமம், நெற்றி வகிட்டில் இலே­சாக குங்­குமத் தடவல், கழுத்தில் தாலி தரித்­தி­ருப்­பது, கால் விரலில் மெட்டி என அவை அமைந்­துள்­ளன.

இதனால் சில ஆட­வர்கள் இச்­சை­வ­யப்­பட்டு அவர்­களை நெருங்­கு­வது தவிர்க்­கப்­ப­டு­கி­றது. அவ்­வாறு நெருங்க முற்­ப­டு­ப­வர்­களும் அத்­த­கைய காரி­யத்தைச் செய்ய தயங்­கு­வார்கள்.

சிலர் அவற்­றை­யெல்லாம் பொருட்­ப­டுத்­தாது தேவையை நிறை­வேற்­றிக்­கொள்ள நினைத்­தாலும் அதற்கு மனம் இடம் தராது. ஆகவே சுதா­க­ரித்துக் கொண்டு தனது முயற்­சி­யி­லி­ருந்தும்  பிர­யத்­த­னத்­தி­லி­ருந்தும் விலகிக் கொள்­வார்கள்.

ஆனால் பௌத்தக் கலா­சாரம் சற்று வேறு­பட்­டது. அங்கே பெண்கள் தாலி தரிப்­ப­தில்லை. நெற்­றியில் குங்­குமம் இடு­வ­தில்லை. அத்­தோடு பொது­வா­கவே அப்­பெண்கள் மனதில் எந்த ஒளிவும் மறை­வு­மின்றி வெள்ளந்­தி­யாகப் பேசிப் பழகக் கூடிய தன்மை பெற்­ற­வர்கள்.

இயல்­பா­கவே புன்­மு­றுவல் பூத்து எந்த அந்­நி­ய­ரோடும் கதைக்கக் கூடி­ய­வர்கள். சோஷ­லிசத் தன்மை வாய்க்கப் பெற்­ற­வர்கள்.

ஆனால் இவற்றைப் பயன்­ப­டுத்திக் கொண்டு அவர்­க­ளிடம் தகாத முறையில் நடந்து இன்பம் நுகர நினைப்­ப­வர்­களும் இருக்­கவே செய்­கின்­றனர். அந்­தவகையில் ஒரு திரு­ம­ண­மான பெண்ணின் மீது ஒருவன் கொண்ட வெறித்­த­ன­மான ஆசையே இம்­முறை பதி­வா­கின்­றது.

ஆம். வெலி­கம, மிரிஸ்­ஸ­கம என்ற பிர­தே­சத்தில் குறித்த பெண் தனது இரண்டு குழந்­தை­க­ளுடன் மிகவும் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்­து ­வந்­துள்ளாள். தனது மூத்த பிள்­ளையைப் பாட­சா­லைக்கு அழைத்துச் செல்­வதும்   தனது கண­வனை கவ­னித்துக் கொள்­வ­தோடு இரண்­டரை வய­தே­யான பிறி­தொரு குழந்­தை­யையும் கவ­னித்து வந்­துள்ளாள்.

தனது கண­வ­னை­யன்றி வேறொரு ஆட­வனை மன­த­ள­விலும் நினைக்­காத அவள் தனது கண­வ­னுடன் மகிழ்ச்­சி­யா­ன­தொரு குடும்ப வாழ்க்­கையை நடத்திச் சென்­றுள்ளாள்.

ஆனால் இந்த மகிழ்­வான வாழ்க்­கையின் இனி­மை­யையும் சுகந்­தத்­தையும் நீண்ட நாள் அனு­ப­விக்க அப்­பெண்­ணுக்கு கொடுத்து வைக்­க­வில்லை. அவ­ளது இல்­லற வாழ்வின் இன்பம் வெகு­நாட்­க­ளுக்கு நீடிக்­க­வில்லை.

இப்­பெண்ணின் வீட்­டுக்கு அரு­கா­மையில் வசித்து வந்த ஒரு­வனின் கண்கள் இப்­பெண்ணைச் சுற்றி அடிக்­கடி வட்­ட­மிட்டு வந்­துள்­ளன. அவ­னது மனம் இவளை அடைய வெகு­நாட்­க­ளாக துடித்­துள்­ளது.

இத்­த­னைக்கும் இவள் ஒரு திரு­ம­ண­மான பெண். அதன் அடை­யா­ள­மாக அவ­ளுக்கு இரண்டு பிள்­ளைகள் இருக்­கின்­ற­ன­ரென்று கூட அவ­னது மனம் எண்ண­வில்லை.

அவன் எந்த விலைக் கொடுத்தும் அவளை அடைய வேண்டும் என்ற தீராத மோகங் கொண்டு அவளைப் பின்­தொ­டர்ந்­துள்ளான். ஆனாலும் இவ­னொரு இரா­ணுவ வீரன்.

இவன் மனதில் நினைத்துச் செய்யக் காத்­தி­ருக்கும் காரி­யத்­திற்கும் அவ­னது தொழி­லுக்கும் எவ்­விதப் பொருத்­தப்­பாடும் கிடை­யாது. அவன் இரா­ணு­வத்தை விட்டு விலகி வீட்­டோடு தாய் தந்­தை­ய­ருடன் இருந்­துள்ளான்.

அவர்­களும் கூட இவ­னது இச்­செய்­கைகள் பற்றி கண்டு கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. இவ­னது வீடும் குறித்த அப்­பெண்ணின் வீடும் அரு­க­ருகே இருந்­த­மையால் அடிக்­கடி அவ­ளிடம் சென்று அவள் மீதான தனது விருப்­பத்தைக் கூறி­யுள்ளான்.

அத்­தோடு தன்­னுடன் காதல் தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு பல தட­வைகள் அவளை தொந்­த­ரவு செய்­துள்ளான்.

ஆனாலும் அப்பெண் கட்­டிய கண­வ­னுக்கும் பெற்ற பிள்­ளை­க­ளுக்கும் மன­தார துரோ­க­மி­ழைக்க நினைக்­க­வில்லை. நல்ல கண­வனும் அன்பைப் பொழியும் முத்­தான இரு குழந்­தை­களும்   இருக்கும் போது அவ­ளுக்கு வேற்று ஆட­வ­னுடன் கள்ள உறவு வைத்துக் கொள்ளும் அவ­சியம் ஏற்­ப­ட­வில்லை. இத்­த­கைய இழி­வான எண்­ணமும் அவ­ளுக்கு இருக்­க­வில்லை.

அதனால் அவள் தொடர்ந்தும் அவ­னது விருப்­பத்தை நிரா­க­ரித்து வந்­துள்ளாள். ஆனாலும் அவன் அவளை விடு­வ­தாக இல்லை. மோக முள் அவனை வெகு­வாகத் தைத்­து­விட்­டது.

மது­வுக்கு அடி­மை­யா­னவன் கூட அதி­லி­ருந்து மீண்டு இயல்பு நிலையை அடைய வாய்ப்­புள்­ளது. ஆனால் மாது­வுக்கு அடி­மை­யா­னவன் ஒரு­போதும் அதி­லி­ருந்து மீட்சி பெற்றுத் திரும்­பவே முடி­யாது. அது திண்ணம்.

அச­காய வல்­லமை படைத்த இரா­வ­ணேஸ்­வ­ரனே சீதை என்­ற­வளின் மீது கொண்ட தீராத மோகத்தால் தானே அழி­வுண்டான். இவன் மட்­டு­மென்ன விதிவி­லக்கா? இவன் தொடர்ந்து அப்­பெண்ணை தனது ஆசைக்கு இணங்கச் செய்ய அவளைத் துன்­பு­றுத்தி வந்­துள்ளான்.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் அவ­னது தொந்­த­ரவு எல்லை மீற ஆரம்­பிக்­கவே இது குறித்து அவள் தனது கண­வ­னிடம் கூறி­யுள்ளாள். அவ­ளது கணவன் இதனை சட்ட ரீதி­யாக அணுக தீர்­மா­னித்­துள்ளான்.

இவ­னது இந்த எல்லை மீறிய தொந்­த­ரவைப் பொறுத்துக் கொள்ள முடி­யா­மையால் கண­வனும் மனை­வியும் வெலி­கம பொலிஸ் நிலை­யத்தில் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி முறைப்­பா­டொன்றைப் பதி­வு­செய்­துள்­ளனர்.

அதன் விளை­வாக அவன் மே மாதம் 22 ஆம் திகதி பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு பதி­னான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்ளான். அதன் பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளான்.

கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி வெளியில் வந்­தவன் எந்த மாறு­தல்­களும் இல்­லா­ம­லேயே திரும்பி வந்­துள்ளான். அவ­னது உள்­ளத்­தி­லி­ருந்த தீராத மோகம் பழி­வாங்கும் உணர்ச்­சி­யாக பரி­மாற்­ற­ம­டைந்­துள்­ளது. அவன் முன்­யோ­ச­னை­யாக செயற்­ப­ட­வில்லை. மீண்டும் தனது எண்­ணத்தை அவ­ளிடம் வெளி­யிட்­டுள்ளான்.

தன்னை சிறைக்கு அனுப்­பி­யதை மனதில் வைத்துக் கொண்டு, அந்த ஒரே கார­ணத்­திற்­காக அவளைத் தொடர்ந்து பார்க்கும் போதெல்லாம் மிரட்டி அச்­சு­றுத்தல் விடுத்து வந்­துள்ளான்.

அவன் சென்ற மாதம் 30 ஆம் திக­தியும் அவளை தனது விருப்­பத்­துக்கு இணங்­கு­மாறு கூறி மிரட்டி நச்­ச­ரித்­துள்ளான். இதனை மென்­மேலும் அனு­ச­ரித்துப் பொறுக்க முடி­யா­த­வளாய் வெலி­கம பொலிஸ் நிலை­யத்தில் மீண்­டு­மொருமுறை முறை­யிட்­டுள்ளாள்.

இதனால் பொலிஸார் அவ­னது வீட்­டுக்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து சென்று அவனை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளனர். அது பல­ன­ளிக்­க­வில்லை.

ஆனாலும் இப்பெண் இரண்­டா­வது முறை பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்த போது பொலிஸார் ஒழுங்­காக தமது கட­மையை நிறை­வேற்­ற­வில்­லை­யென அப்­பெண்ணின் உற­வி­னர்கள் கூறி­யுள்­ளனர். நிலைமை இவ்­வா­றி­ருக்க, அப்பெண் வழக்கம் போல தனது இல்­லற வாழ்க்­கையை செவ்­வனே நடத்த ஆரம்­பித்­துள்ளாள்.

ஆனாலும் அவள் சிறிதும் எதிர்­பார்த்­தி­ராத சம­யத்தில் இய­மனின் பாசக்­க­யிறு அவளை நோக்கிப் பாய்­வ­தற்குத் தருணம் பார்த்துக் காத்­தி­ருந்­துள்­ளது.

இதனை அவள் அறி­ய­வில்லை. அவனை சிறைக்கு அனுப்­பி­யதன் விளைவு மோச­மான பலனைத் தரு­மென்று அவள் கன­விலும் நினைத்­தி­ருக்­க­வில்லை. ஆனால் நடக்க இருந்­தது நடந்து முடிந்­தது.

ஆம். அன்­றைய தினமும் வழமை போலவே குறித்த பெண்ணின் கணவன் அவ­ளி­ட­மி­ருந்தும் அவ­னது பிள்­ளை­க­ளி­ட­மி­ருந்தும் விடை­பெற்று தான் பணி­பு­ரியும் ஹோட்­ட­லுக்குச் சென்­றுள்ளான். அவனும் எந்த பார­தூர விளை­வு­களைப் பற்­றியும் சிந்­தித்­தி­ருக்­க­வில்லை.

அத­னை­ய­டுத்து அப்பெண் தனது இரண்­டரை வய­துக் ­குழந்­தையை சுமந்து கொண்டு மூத்தப் பிள்­ளையை அற­நெறி வகுப்­புக்கு அழைத்துச் சென்­றுள்ளாள். அப்­போது தான் அவன் இவளை தீர்த்துக் கட்­டு­வ­தற்­காக இவளை பின்­தொ­டர்ந்து வந்­துள்­ள­தாக பொலி­ஸாரால் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

ஐம்­பது மீற்றர் தூரம் வரையில் நடந்து சென்று கொண்­டி­ருக்­கையில் தட்­டை­யான ஆயு­த­மொன்­றினால் அவ­ளது தலையை பின்­பு­ற­மாக வந்த குறித்த இரா­ணுவ வீரன் தாக்­கி­யுள்ளான்.

இத்­தாக்­கு­த­லினால் அவ­ளது தலையின் பின்­பு­றத்­திலும் கழுத்­திலும் பலத்தக் காயங்கள் ஏற்­பட்­டுள்­ளன. அவளை ஆயுதம் கொண்டு கொன்று வீழ்த்­திய கையோடு அதே­வே­கத்தில் தனது வீட்­டுக்குச் சென்று கழுத்தில் சுருக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளான்.

இச்­சம்­ப­வத்தில் பலி­யான பெண்ணின் கணவன் தனது மனை­வியைப் பிரிந்த ஆற்­றாமைத் துயரை வெளிப்­ப­டுத்திப் பேசு­கையில்,

“எனது மனை­விக்கு வெகு­நாட்­க­ளா­கவே அந்த இரா­ணுவ வீரன் அடிக்கடி தொந்­த­ரவு கொடுத்து வந்­தி­ருக்­கிறான். தன்­னோடு காதல் தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு எனது  மனை­வியை காணும் போதெல்லாம் கேட்டு நச்­ச­ரித்­துள்ளான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இறு­தியில் என்­னி­டமே இதைப் பற்றி என் மனைவி பகி­ரங்­க­மாகக் கூறினாள். அவளை நான் சமா­தா­னப்­ப­டுத்­தினேன்.

பிறகு அவ­ளுடன் வெலி­கம பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று முறைப்­பாடு செய்தேன். அப்­போது பொலிஸார் முதல் முறை அவனை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்­தனர்.

அவன் அங்­கி­ருந்து வெளியே வந்த பிறகு எனது மனை­வியை பழைய படி மீண்டும் தொந்­த­ரவு செய்­துள்ளான். அதன் பிறகு மீண்டும் பொலிஸில் சென்று இது குறித்து தக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று இன்­னு­மொரு முறைப்­பாட்டைப் பதி­வு­செய்தோம்.

ஆனால் பொலிஸார் அதற்கு தக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அத­னா­லேயே இன்று நான் எனது மனை­வி­யையும் எனது பிள்­ளை­கள் தங்கள் தாயையும் இழந்து நிர்க்­க­தி­யான நிலையில் தவிக்­கின்றோம்.

பொலிஸார் எனது மனைவி இரண்­டா­வது முறை முறைப்­பாடு செய்த போது அதனைக் கவ­னித்து தக்க நட­வ­டிக்கை எடுத்து செயற்­பட்­டி­ருந்தால் இன்று இந்த நிலை­மைக்கு நாங்கள் ஆளா­கி­யி­ருக்­க­மாட்­டோ­மல்­லவா? ” என்று தன் மன­தி­லி­ருந்த துயரை வெளிப்­ப­டுத்­தினார்.

இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட பிரேத பரி­சோ­த­னையின் போது குறித்த பெண்ணின் மரணம் தட்­டை­யான ஆயு­தத்­தினால் தாக்­கப்­பட்­ட­மை­யினால் மூளை­யிலும் மண்­டை­யோட்­டிலும்   ஏற்­பட்ட காயங்­க­ளி­னா­லேயே சம்­ப­வித்­துள்­ள­தென மாத்­தறை பொது வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி டீ.டீ.சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

மாத்­தறை நீதிவான் லலிதா வித்­தா­னாச்­சியின் உத்­த­ர­வுக்­க­மை­யவே இப்­பி­ரேத பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

தென் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­கி­ர­ம­ரத்­னவின் வழி­காட்­ட­லுக்­க­மை­வாக மாத்­தறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் தேச­பந்து தென்­னக்­கோனின் மேற்­பார்­வையில் விசேட பொலிஸ் குழுவொன்று இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

(கே.நிரோஷ்குமார்)

Exit mobile version