ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உலகம்

    பாகிஸ்தான், தான் வளர்த்த கடாக்­களைப் பலி­யெ­டுக்­கின்­றது – வேல் தர்மா

    AdminBy AdminJuly 13, 2014No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பாகிஸ்­தா­னியப் படை­யினர் ஆப்­கா­னிஸ்­தானின் எல்லைப் பிர­தே­ச­மான வஜி­ரிஸ்­தானில் பெரு வெட்டு (Zarb–-eAzb) என்னும் குறி­யீட்டுப் பெய­ருடன் ஒரு படை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளனர்.

    இப்­பி­ர­தே­சங்­களில் இருக்கும் இஸ்­லா­மியப் போரா­ளி­களை ஒழித்துக் கட்டும் நோக்­குடன் இந்தப் படை நட­வ­டிக்கை நடைபெறு­கின்­றது. அமெ­ரிக்­காவும் ஆப்­கா­னிஸ்­தானும் பல்­லாண்டு கால­மாக வேண்டு கோள் விடுத்துக் கொண்­டி­ருக்கும் இந்த வஜி­ரிஸ்­தானில் மறைந்து இருந்து செயற்­படும் போராளிகளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை வெற்­றி­ய­ளிக்­குமா?

    waziristan-pakistan-tribal

    பாகிஸ்­தா­னியப் படை­யினர் முதலில் பலத்த விமானக் குண்டு வீச்சுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு விட்டுப் பின்னர் தரை நகர்வை மேற்­கொண்­டனர். நானூற்­றிற்கு  மேற்­பட்ட போரா­ளி­களைக் கொன்றும் நூற்­றிற்கு மேற்­பட்ட   அவர்­க­ளது மறை­வி­டங்­களை அழித்தும்  விட்­ட­தாக ஜுலை மாதம் 9‍ஆம் திகதி பெருவாள் படை நட­வ­டிக்­கைக்குப் பொறுப்­பான படை­ய­தி­காரி தெரி­வித்தார். மிரான்ஸா நகரில் அல் கைதா போரா­ளி­களும் இருந்­த­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

    539dbada3c548போரா­ளி­களால் பாகிஸ்­தா­னிற்குப் பேரி­ழப்பு

    2001‍ஆம் ஆண்­டிற்கும் 2013‍ஆம் ஆண்­டிற்கும் இடையில் பாகிஸ்­தானில் 13,271 தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் நடந்­துள்­ளன. அவற்றில் ஐம்­ப­தா­யிரம் பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

    2007‍ஆம் ஆண்­டிற்கும் 2013‍‍ஆம் ஆண்­டிற்கும் இடையில் 358 தற்­கொலைத் தாக்­கு­தல்கள் நடந்­துள்­ளன. இதுவே உல­கி­லேயே அதிக அளவு எண்­ணிக்­கை­யாகும். கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களால் பாகிஸ்­தா­னிற்கு 78 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பெறு­ம­தி­யான சொத்­த­ழிவு ஏற்­பட்­டுள்­ளது.

    Adnan-Rasheed
    Key Takfiri Taliban
    பல அமைப்­புக்கள்.

    பாகிஸ்­தானில் பல­த­ரப்­பட்ட தீவி­ர­வாத அமைப்­புக்கள் செயற்­ப­டு­கின்­றன. தலிபான், அல்கைதா, ஹக்­கானி, லக்சர் இ தொய்பா ஆகி­யவை முக்­கி­ய­மான அமைப்­புக்­க­ளாகும். சில தீவி­ர­வாத அமைப்­புக்கள் பாகிஸ்­தா­னிய அரச படை­க­ளுக்கு மிகவும் வேண்­டப்­பட்­ட­வை­யாக இருக்­கின்­றன.

    பாகிஸ்­தா­னிய அரச படை­க­ளி­ட­மி­ருந்து நிதி, படைக்­கலன், பயிற்சி ஆகி­யவை பெறும் போரா­ளிக்­கு­ழுக்­களும் இருப்­ப­தாகக் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது. ஆப்­கா­னிஸ்­தானில் இருக்கும் அமெ­ரிக்­கப்­ப­டை­க­ளுக்கு எதி­ராகச் செயற்­படும் அமைப்­புக்­க­ளிற்கு பாகிஸ்­தானில் பல­த­ரப்­பி­ன­ரி­டையும் ஆத­ரவு உண்டு.

    ஆனால், சீனாவின் உய்குர் இனப் போரா­ளிகள், உஸ்­பெக்­கிஸ்தான் அர­சுக்கு எதி­ராகப் போராடும் போரா­ளிகள், இந்­தி­யா­விற்கு எதி­ராகச் செயற்­படும் போரா­ளிகள் எனப் பல­த­ரப்­பினர் பா­கிஸ்­தானில் செயற்­ப­டு­கின்­றனர். இதனால் எல்லா அயல் நாடு­களின் நெருக்­கத்­திற்கும் பா­கிஸ்தான் உள்­ளா­கி­யுள்­ளது.

    கனடா குடி­வ­ரவு அமைச்சர் கிறிஸ் அலெக்­சாண்டர் பாகிஸ்­தா­னிய அரசு பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரித்து வளர்ப்­ப­தாக பகி­ரங்­க­மா­கவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

    மேலும் அவர் பாக். அரசின் குடிசார் நட­வ­டிக்­கை­களை படை­யி­னர்தான் மேற்­கொள்­கின்­றார்கள் என்­ற­துடன் எல்லா நாடு­களும் இணைந்து பா­கிஸ்­தா­னிற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேன்டும் என்றும் தெரி­வித்தார். இதுவே பா­கிஸ்­தா­னிற்­கான அபாயச் சங்­கா­னது.

    அமெ­ரிக்க –பாகிஸ்­தா­னிய உறவு

    அமெ­ரிக்­க–-பாக் உற­விற்கும் பாகிஸ்­தானில் உள்ள தீவி­ர­வா­தத்­திற்கும் நெருங்­கிய தொடர்பு உண்டு. அமெ­ரிக்­கா­விற்கும் பாகிஸ்­தா­னிற்கும் இடை­யி­லான உறவு 1954-ஆம் ஆண்டு கட்டி எழுப்­பப்­பட்­டது.

    இந்­தியா கூட்டுச் சேரக் கொள்கை என்னும் பெயரில் சோவியத் ஒன்­றி­யத்­துடன் நெருக்­க­மா­னதைச் சமா­ளிக்க பாகிஸ்தான் அமெ­ரிக்­கா­வுடன் அப்­போது இணைந்து கொண்­டது.

    பின்னர் 1971ஆம் ஆண்டு நடந்த பங்­க­ளா­தேசப் போரின் போது அமெ­ரிக்கா பாகிஸ்­தா­னிற்கு நிறையப் படைக்­க­லன்­களைக் கொடுத்து உத­வி­யது. 1989ஆம் ஆண்டு சோவியத் ஆப்­கா­னிஸ்­தானை ஆக்­கி­ர­மித்­ததைத் தொடர்ந்து அமெ­ரிக்க பாகிஸ்­தா­னிய உறவு நெருக்­க­ம­டைந்­தது.

    அமெ­ரிக்கா பல பில்­லியன் கணக்கில் செல­வ­ழித்து பாகிஸ்தான் உளவுத் துறை­யுடன் இணைந்து சோவியத் படை­க­ளுக்கு எதி­ராக மத­வாதப் போரா­ளி­களை பயிற்­று­வித்­தது.

    சோவியத் படைகள் பாகிஸ்­தானின் பாலுச்­சிஸ்தான் பிராந்­தி­யத்தை ஆக்­கி­ர­மிக்­கலாம் என்ற அச்சம் அப்­போது உரு­வாக்­கப்­பட்­டது. இதனால் பாக். அரசு ஆப்­கானில் தீவி­ர­வா­தத்தை வளர்க்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது.

    அரபு ஆப்­கா­னிஸ்­தா­னியர் என்னும் பெயரில் உரு­வாக்­கப்­பட்ட போராளி அமைப்பில் பின்­லே­டனும் ஒரு­வ­ராவார். பின்­லே­ட­னுக்கு அமெ­ரிக்க உளவுத் துறை­யான சி.ஐ.ஏ. பயிற்சி வழங்­கி­ய­தாக நம்­பப்­ப­டு­கின்­றது.

    அல்கைய்­தாவின் தோற்றம்

    ben_ladenசோவியத் ஒன்­றியம் ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து வெளி­யே­றி­ய­பின்னர் சவூதி அரே­பிய செல்­வந்­தரும் பொறி­யி­ய­லா­ள­ரு­மான பின் லேடனும், எகிப்தில் வாழ்நாள் முழுக்கப் போரா­ளி­யாக இருந்த ஜவா­ஹிரி, பா­கிஸ்­தா­னியக் கல்­வி­மா­னு­மா­கிய ஃப்டல் ஆகியோர் இணைந்து அல் கைய்தா அமைப்பை 1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் திகதி உரு­வாக்­கி­னார்கள்.

    இவர்கள் தீவிர அமெ­ரிக்க எதிர்ப்­பா­ளர்­க­ளாக மாறி­னார்கள். இவர்­களின் அமெ­ரிக்க எதிர்ப்பின் உச்சக்கட்­ட­மாக 2001 செப்­டெம்பர் 11ஆ-ம் திகதி நிகழ்ந்த அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரத் தாக்­குதல் நடந்­தது.

    பாக். அணுகுண்டு

    1998ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணு­குண்டுப் பரி­சோ­தனை செய்­ததைத் தொடர்ந்து அமெ­ரிக்­கா­விற்கும் பாகிஸ்­தா­னிற்கும் இடை­யி­லான உறவு மிக மோச­ம­டைந்­தது. அமெ­ரிக்கா பாகிஸ்­தா­னிற்கு வழங்கி வந்த எல்லா உத­வி­களும் நிறுத்­தப்­பட்­டன.

    2001ஆம் ஆண்டு அமெ­ரிக்கா பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போரில் பாகிஸ்­தா­னையும் இணைக்க மீண்டும் அமெ­ரிக்­காவும் பாகிஸ்­தானும் தம் உறவை மேம்­ப­டுத்தி மீண்டும் பாகிஸ்­தா­னுக்­கான அமெ­ரிக்க உதவி வழங்­குதல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 2009ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆப்-பாக் கேந்­தி­ரோ­பாயம் ஒன்றை வகுத்தார்.

    அமெ­ரிக்கப் பாது­காப்புத் துறை­யிலும் இதற்கு என ஒரு தனிப் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டது. இதன் மூலம் இஸ்­லா­மியத் தீவிர வாதத்தை ஒழிக்­கலாம் என அமெ­ரிக்கா திட்­ட­மிட்­டி­ருந்­தது. அமெ­ரிக்கா பாகிஸ்­தா­னிற்கு 7.5 பில்­லியன் டொலர்கள் உத­வியை ஐந்து ஆண்­டு­க­ளுக்கு வழங்­கு­வ­தாக அறி­வித்­தது.

    பாக். ஊடகர் சலீம் சஹ்ஜாட் Asia Times Online இல் பாக். உளவுத் துறை­யி­ன­ருக்கும் தீவிர வாத அமைப்­புக்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­பு­களை அம்பலப்படுத்­தி­யதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு  மே மாதம்­அவர் கடத்­தப்­பட்டு கொடூ­ரமாகக் கொல்­லப்­பட்டார்.

    அமெ­ரிக்க கடற்­ப­டையின் அட்­மிரல் மைக் முல்லன் பாகிஸ்­தானின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை இக்­கொ­லைையச் செய்­த­தாக வெளிப்­ப­டை­யா­கவும் பகி­ரங்­க­மா­கவும் சுமத்­தி­யமை பாக். அரசை ஆத்­தி­ர­ம­டையச் செய்­தது.

    இதனால் இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு மோச­ம­டைந்­தது. பின்­லே­டனைக் கொல்ல வந்த அமெ­ரிக்க கடற்­ப­டையின் சீல் பிரி­வினர் பின் ேலடன் தங்கி இருந்த மாளி­கையில் இருந்து பல கணி­னி­க­ளையும் கைப்­பே­சி­க­ளையும் எடுத்துச் சென்­றனர்.

    அதி­லி­ருந்து பாக். படை­யினர் மற்றும் உளவுத் துறை­யி­ன­ருக்கும் தீவி­ர­வா­தி­க­ளுக்­கும்­ இ­டை­யி­லான தொடர்­புகள் பற்­றிய தக­வல்­களை அமெ­ரிக்கா பெற்றுக் கொண்­டது. அவற்றின் அடிப்­ப­டையில் பாகிஸ்தான் அரசு தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று அமெ­ரிக்கா வற்­பு­றுத்தி வந்­தது.

    ஹிலாரி கிளிண்­டனின் பாகிஸ்­தா­னிய ப­யணம்

    Hillary_Rodham_Clinton_in_Pakistan
    2011 மே 2ஆம் திகதி பின்­லேடன் கொல்­லப்­பட்­ட­வுடன் அமெ­ரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்­தா­னிற்கு திடீ­ரெனப் பய­ணித்தார்.பாகிஸ்­தானிலுள்ள இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­களின் பட்­டியல் பாகிஸ்­தா­னிடம் ஹில­ாரியால் கைய­ளிக்கப்பட்­டது.

    பின்­லே­டனின் உத­வி­யாளர் ஐமன் அல் ஜவ­கிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தள­பதி ஒமர் சிராஜ் ஹக்­கானி, லிபிய அல்கைய்தாத் தலைவர் அதியா அப்துல் ரஹ்மான் போன்­ற­வர்கள் அப்­பட்­டி­யலில் இருந்­தனர்.

    இப்­பட்­டியல் கைய­ளிக்கப் பட்­டதன் நோக்கம் இவர்­களை நீ பிடிக்­கி­றாயா அல்­லது நான் பிடிக்­கட்­டுமா என்று சொல்­லப்­பட்­டது. அமெ­ரிக்­காவின் பாகிஸ்­தா­னுக்­கான இரண்டு பில்­லியன் டொலர் உதவி பின்னர் இடை நிறுத்தப் பட்­டது.

    பாகிஸ்­தானின் எல்­லைக்குள் நுழைந்து அமெ­ரிக்கப் படை­யினர் இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­து­வ­தற்கு பாகிஸ்­த­ானிற்கு அமெ­ரிக்கா கொடுக்கும் கைக்­கூ­லியே பல­மில்­லியன் டொலர்கள் உத­வி­யாக இருந்­தது.

    எல்லாத் தீவி­ர­வா­தி­க­ளுக்கும் எதி­ரான கொள்கை வெற்றி தருமா?

    பாகிஸ்தான் அர­சையும் அதன் படை­யி­ன­ரையும் பொறுத்தவரை அங்­குள்ள தீவி­ர­வாத அமைப்­புக்கள் பல தேவை­யா­ன­வை­யா­கவே இருக்­கின்­றன. பாகிஸ்­தானின் வெளி­யு­றவில் இவை பெரும் பங்கு வகிக்­கின்­றன.

    ஆனால் இப்­போது அமெ­ரிக்கா, சீனா, இந்­தியா உட்­படப் பல தரப்பில் இருந்தும் நெருக்­கு­தல்கள் வரு­வதால் பாகிஸ்தான் தனது கொள்­கையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக வெளிப்­ப­டுத்­து­கி­றது.

    Haqqanis-Image-2பாகிஸ்­தானின் செல்லப் பிள்­ளை­யாகக் கரு­தப்­படும்  ஹக்­கானி அமைப்பு உட்­பட எல்லாத் தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளிற்கும் எதி­ராக படை­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தாகப் பாகிஸ்தான் சொல்­கின்­றது.

    பாக் படை­யி­னரின் நட­வ­டிக்­கை­களை அமெ­ரிக்கப் படை­நி­பு­ணர்கள் நெறிப்­ப­டுத்­து­வ­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது. ஹக்­கானி அமைப்பு பாகிஸ்­தானில் தாக்­குதல் நடாத்­து­வ­தில்லை.

    ஹக்­கானி அமைப்­பினர் பாக். அர­சுக்கும் மற்ற தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளுக்கும் அதிலும் முக்­கி­ய­மாக தலிபான் அமைப்­பி­ன­ருக்கும் இடையில் ஒரு இணைப்புப் பால­மாகச் செயற்­ப­டு­கின்­றனர்.

    ஆப்­கா­னிஸ்­தானில் இந்­தி­யர்­க­ளுக்கு எதி­ராகப் பல தாக்­கு­தல்­களை நடாத்­தி­யது. அல்கைய்தா இந்­தி­யா­விற்கு எதி­ராகச் செயற்­ப­டு­வ­தில்லை. லக்சர் இ தொய்பா அமைப்பு  இந்தியாவிற்கு  எதிராகச் செயற்படுவதையே  தலையாய பணியாய்க் கொண்டுள்ளது.

    பாகிஸ்தான் படை­யினர் போதிய முன்­ன­றி­வித்தல் கொடுத்­து­விட்டே தமது தாக்­கு­தல்­களைத் தொடுத்­துள்­ளனர். வடக்கு வஜி­ரிஸ்தான் பிர­தே­சத்தில் இருந்து பொது­மக்கள் வெளி­யேற வேண்டும் என்­ப­தற்­காக முன்­ன­றி­வித்தல் கொடுக்­கப்­பட்­டது. ஆனால் பல போரா­ளிகள் தமது தாடி­களை மழித்து விட்டுப் பொது­மக்­க­ளோடு தாமும் பாது­காப்­பாக வெளி­யே­றி­விட்­டனர்.

    வஜி­ரிஸ்தான் பகு­தியில் அண்­மைக்­கா­லங்­க­ளாக சலூன்­கா­ரர்­க­ளுக்கு நல்ல வரு­மானம் என்­கின்­றது பாகிஸ்­தா­னிய ஊடகம் ஒன்று. பாரபட்­ச­மின்றி எல்லா அமைப்­புக்­க­ளையும் ஒழிக்கப் போவ­தாக பாகிஸ்­தா­னியப் படைகள் சொல்­வது நம்­பத்­த­குந்­த­தாக இல்லை.

    ஹக்­கானி அமைப்பின் தலை­வ­ருக்கு ஏற்­க­னவே பாக். படை­யினர் தமது நட­வ­டிக்கை பற்றித் தெரி­வித்து விட்­டனர் எனச் சொல்­லப்­ப­டு­கின்­றது. 2009ஆம் ஆண்டும் பாக். படைகள் வஜி­ரிஸ்­தானில் இருந்த போரா­ளி­க­ளுக்கு எதி­ராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டன. அது தீவிரவாதத்தை ஒழிக்க வில்லை. அது போலவா இதுவும்?

    – வேல் தர்மா

    Post Views: 914

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி

    February 6, 2023

    Leave A Reply Cancel Reply

    July 2014
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
    « Jun   Aug »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version