ரியோ டிஜெனீரோ: அர்ஜென்டைனா அணி உலகக் கோப்பையை வென்றால் தனது கணவரை ஒரு வாரத்துக்கு பிரபல பாடகி ரிஹானாவிடம் ஒரு வாரத்துக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் அர்ஜென்டைனா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமிரோவின் மனைவி.
ஆனால் அதற்கெல்லாம் வேலையே இல்லாமல் போய் விட்டது. கடைசியில் இந்த ரொமிரோவால்தான் அர்ஜென்டைனா தோல்வியைத் தழுவ நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் கை விட்டு விட்ட நிலையில் கடைசி சான்ஸாக அர்ஜென்டைனாவை மலை போல நம்பியிருந்தனர் தென் அமெரிக்க கால்பந்து ரசிகர்கள். பிரேசில் விட்டதை பக்கத்து நாடான அர்ஜென்டைனா பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அர்ஜென்டைனாவும் கைவிட்டு விட்டது.
அர்ஜென்டைனா அணியின் கோல் கீப்பர் ரொமிரோவின் மனைவி கூட தனது அணி வென்றால் தனது கணவரை ரிஹானாவிடம் ஒரு வாரத்துக்கு அனுப்பி வைப்பதாக கூட அதிரடியாக ஆஃபரும் அறிவித்திருந்தார். கடைசியில் எல்லாம் போண்டியாகி விட்டது.
வென்றால் இதுகுறித்து ரொமிரோவின் மனைவியான, 36 வயது எலியானா குயர்சியோ அல் அரேபியா டிவிக்கு அளித்த பேட்டியில், அர்ஜென்டைனா 3வது முறையாக கோப்பையை வென்றால் அதை விட எனக்கு மகிழ்ச்சி தருவது எதுவும் இருக்க முடியாது.

முன்னதாக தனக்கு ரொமிரோவை ரொம்பப் பிடிக்கும் என்று பாடகி ரிஹானவே கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இதை மனதில் வைத்துத்தான் இப்படி ஒரு பேட்டியை அளித்திருந்தார் எலியானா.

அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியின் கோல் முயற்சிகளை அழகாக தடுத்து தனது அணியை வெற்றி பெற வைத்தவர் ரொமிரோ என்பது நினைவிருக்கலாம்.
