இப்பிடித்தான்யா விளையாண்டுச்சு ஜெர்மனி!, ஆமா.. பிரேசில் அணி எங்கே?
லண்டன்: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவடைந்த பின்னரும் அதன் தாக்கம் ஓயவில்லை போலும்.. பிரேசில்- ஜெர்மனி இடையேயான போட்டியை மையமாக வைத்து நெட்டில் ஒரு விசித்திர வீடியோ உலவ விடப்பட்டுள்ளது. 20வது உலகக் கோப்பை போட்டிகள் பிரேசில் நாட்டில் நடைபெற்று முடிவடைந்தன. இதில் அரை இறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி ஜெர்மன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
எடிட் செய்துவிட்டு..
அதாவது பிரேசில் வீரர்கள், கோல்கீப்பர் என அனைவரையும் டிஜிட்டல் முறையில் எடிட் செய்துவிட்டு ஜெர்மனி வீரர்கள் மட்டுமே கோல் அடித்த காட்சிகளை இணைத்து வீடியோவாக்கி ஏற்றி விட்டிருக்கிறார்கள் குசும்பர்கள்.. இப்போது இணையத்தில் ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது இந்த ஒன்மேன் கேம் ஷோ… சொன்னாலும் சொல்லாட்டியும் அப்படித்தானே நடந்தது!