சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல்பகுதிக் காணியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அலறியுள்ளார்.
சங்கானைப் பகுதியில் பெண் யுவதி ஒருவர் குளிப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்து கள் இறக்கும் தொழிலாளி கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது சைக்கிளும் அடித்து நொருக்கப் பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த வீட்டில் நின்ற உறவினர்கள் அந்நபரை கீழே இறக்கி கடுமையாகத் தாக்கி, கட்டி வைத்திருந்துள்ளனர்.
“தான் கள் இறக்கும் தொழிலாளி” என்றும் “தென்னைமரத்தில் ஏறி கள் இறக்கிக் கொண்டிருந்த போதே, பெண் கத்தியதாகவும்” இவர் தெரிவித்தும் அதைக் கேளாது குறித்த நபரைத் தாக்கியுள்ளனர். அத்துடன் அவரது சைக்கிளும் அடித்து நொருக்கப்பட்டது.
அதன் பின்னர் குறித்த நபரைப் பொலிசாரிடம் கொடுப்பதற்கு எத்தனித்த போது குறித்த பெண்ணின் அயல்வீட்டில் இருந்தவர்கள் அந்த நபர் வழமையாக அங்கு வந்து கள் இறக்குவதாகத் தெரிவித்தும், அவரது நடவடிக்கை தவறானதாக இவ்வளவு காலமும் இருந்ததில்லை எனத் தெரிவித்ததால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த கள் இறக்கும் தொழிலாளியின் சகோதரிகள் இருவர் அங்கு வந்து, வெளிநாட்டில் இருந்து வந்த குடும்பத்துடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதையும் அயலவர்கள் தடுத்து நிறுத்தி அடித்து நொருக்கப்பட்ட சைக்கிளுக்கு அதைத் திருத்துவதற்கான பணத்தையும் பெற்றுக் கொடுத்ததாகத் தெரிய வருகின்றது.
கோழிச்சண்டையால் இரண்டு பேரின் மண்டை உடைந்தது!
on 15 July 2014.
யாழ். உரும்பிராய்ப் பகுதியில் இடம் பெற்ற கிணற்றுச் சண்டையில் இருவா் தலையில் காயமடைந்துள்ளதுள்ளனா்.
5 வீடுகளுக்குச் சொந்தமான இருந்த கிணற்றில் நேற்று முந்தினம் கோழி ஒன்று வீழ்ந்து இறந்ததால் ஏற்பட்ட வாய்த்தா்க்கமே இந்தச் சண்டைக்குக் காரணமாகும். கோழி கிணற்றுக்குள் வீழ்ந்ததால்…
கோழிக்குரிய வீட்டுக்காரரை கிணற்றைக் கலக்கி இறைக்கச் சொன்ன போது அதனால் ஏற்பட்ட வாய்த்தா்க்கமே சண்டைக்கு காரணமாக இருந்ததாகவும் கோழிக்குரிய வீட்டுக்காரா் தாக்கியதால் ஓய்வு பெற்ற ஆசிரியா் காயம் அடைந்துள்ளார்.
அதன் பின்னா் ஆசிரியரின் மகன் தாக்கியதில் வீட்டுக்காரருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடா்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.