இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள்.
மயிலிட்டி வீரமாணிக்கந்தேவன்துறையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களில் அந்தப் பகுதி மக்கள் வழிபாடு செய்வதற்காக இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து, மயிலிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களை இராணுவத்தினர் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
‘காணவில்லை
நொறுங்கி விழும் நிலையில் ஒரு ஆலயத் தேர்
இவ்வாறு மயிலிட்டி பகுதிக்குச் சென்று திரும்பியுள்ள வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற, புனர்வாழ்வு சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் அந்தப் பகுதிகளில் முன்னர் இருந்த பல ஆலயங்களையும், பாடசாலைகளையும் காணவில்லை என கூறுகின்றார்.
அங்கு மயிலிட்டி எது பலாலி எது என்று அடையாளம் காண முடியாத வகையில் அந்தப் பிரதேசம் முழுவதுமே சிதைந்து உருமாறிப் போயிருப்பதாக அவர் பிபிசி தமிழோசையிடம் விபரித்தார்.
அந்தப் பிரதேசம் தற்போது இருக்கின்ற நிலையில் அங்கு மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா என சந்தேகம் எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எப்படியாவது தமது சொந்தக் காணிகளை மீட்டு.
அங்கு மீள்குடியேற வேண்டும் என்ற மன உறுதி அங்கு சென்று திரும்பிய மக்கள் மனங்களில் தோன்றியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
மட்டில் யானைகள் அட்டகாசம்: ஒருவர் பலி, மூவர் படுகாயம் – (வீடியோ)
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பலாச்சோலை மற்றும் சின்னவத்தை பகுதிகளில் இன்று (25) காலை கிராமத்துக்குள் யானைகள் புகுந்து மேற்கொண்ட தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவில் பலாச்சோலையில் உள்ள வீடு ஒன்றை தாக்கியதன் காரணமாக அங்கிருந்த கதிர்காமத்தம்பி நடராசா (வயது 61) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது அப்பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இருவர் யானைகளின் தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றை யானை தாக்கியதன் காரணமாக வீட்டில் இருந்த விசேட தேவையுடைய யுவதியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சின்னவத்தை வக்கியல்லையை சேர்ந்த சபாரத்தினம் குமாரி (18வயது) என்ற யுவதியே காயமடைந்துள்ளதாகவும் இவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நடைபெற்ற இந்த சம்பவத்தினையடுத்து இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் காலை 10.00மணிக்கு பின்பாகவே சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
இதனால், கோபமடைந்துள்ள கிராமவாசிகள், குறித்த அதிகாரிகளை சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் செல்லவிடாது தடுத்து வைத்தனர்.
இதனால், அப்பகுதிக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
யானைகள் தாக்குதல்களை கட்டு;ப்படுத்தும் வகையில் வனஜீவராசி திணைக்களத்தின் அலுவலகம் வெல்லாவெளி பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை இயங்காத நிலையே உள்ளது.
எவ்வாறாயினும், வன ஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் ஆளணிக்குறைவும் வாகனமின்மையுமே சம்பவ இடத்துக்கு வர தாமதமாவதாக அவ்வதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.