நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்னாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கர்னாடக மாநிலம் உயர்நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது.
மேலும் அவர் மீதான வழக்குகளை விசாரிக்க பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர் ஆகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 6-ம் தேதி அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தி, 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
குமரியில் பரபரப்பு மார்க்கெட்டில் உருண்டு புரண்டு கள்ளக்காதல் ஜோடி சண்டை
குலசேகரம் : குமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (37). ஏற்கனவே திருமணமான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளின் தாய் கமலாவுக்கும் (பெயர்கள் மாற்றம்) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
கமலாவின் கணவர் ஊரில் இல்லாத நேரத்தில் இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.இந்நிலையில், இந்த கள்ளக்காதல் விவகாரம் அருணின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் வீட்டில் பிரச்னை ஏற்பட்டது. 2 மாதங்களுக்கு முன் அருணை விட்டு மனைவி பிரிந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் காய்கறி வாங்குவதற்காக கமலா சந்தைக்கு சென்றார். அங்கு போதையில் நின்று கொண்டிருந்த கள்ளக்காதலன் அருண், காதலியை கண்டதும் அருகில் வந்தார். தன்னுடன் வருமாறு அழைத் தார். கணவர் ஊரில் இருப்பதாக கூறி கமலா வர மறுத்து விட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மக்கள் கூடினர். கமலாவின் கையை பிடித்து அருண் இழுத்தார். கையை தட்டி விட்டும் விடாப்படியாக இழுத்தார்.ஒரு கட்டத்தில் இருவரும் கீழே விழுந்து உருண்டு புரண்டு சண்டையிட்டனர்.இதற்கிடையில் அங்கு வந்த கமலாவின் உறவினர், அருணை தட்டி கேட்டு சண்டையை தடுக்க முயன்றார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையில் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடி தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கமலாவின் உறவினர் ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக 3 பேரும் தனித்தனியாக திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.