காஸா: பாலஸ்தீனத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அகதிகள் 15 பேர் பலியாகி உள்ளனர்.
காஸா பகுதிகள் மீது இஸ்ரேல் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
காஸாவின் ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்- பாலஸ்தீன அகதிகள் 15 பேர் பலி!! இஸ்ரேல் நடத்தி வரும் இந்த இனப்படுகொலையில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,500ஐ தொட்டது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டுகிறது. சுமார் 2 லட்சம் பாலஸ்தீனர்கள் தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர்.
அப்படி வெளியேறிய பாலஸ்தீனர்கள், வடக்கு காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்தனர். நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ஐ.நா. பள்ளியும் தப்பவில்லை.
அங்கு அகதிகளாக தஞ்சமடைந்திருந்த பாலஸ்தீனர்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 50 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.