Site icon ilakkiyainfo

114 கிலோ எடையுள்ள உடலுடன் Pole Dance ஆடி அசத்தும் அமெரிக்க பெண்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் Pole Dance என்பது மிகவும் பிரபலம். இந்தவகையான டான்ஸ் ஆடும் பெண்கள் மற்றும் ஆண்கள் மிகவும் ஒல்லியாக, பம்பரம்போல் சுழன்றும், பல சாகசங்களை செய்து கொண்டும் தங்கள் நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் 114 கிலோ எடையுள்ள ஒரு பெண் ஒல்லிப்பெண்களுக்கு சரிசமமாக மிக அபாரமாக Pole Dance ஆடி வருகிறார்.

உலகின் மிகவும் குண்டான Pole Dance என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் மேரிலாண்ட் என்று அழைக்கப்படும் LuAyne Brown என்ற 29 வயது பெண், திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயானவர்.

முதல் குழந்தை பிறந்தவுடன் தனது உடல் தன்னை மீறிக்கொண்டு குண்டாக மாறிவிட்டதாகவும், ஆனால் தன்னுடைய Pole Dance பயிற்சியை அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்ததால் அவரால் தற்போது கூட ஒல்லிப்பெண்களுக்கு இணையாக Pole Danceஆட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்.

தலைகீழாக் கயிற்றை பிடித்துக்கொண்டு ஆடுவது உள்பட Pole Danceல் உள்ள அத்தனை ஸ்டெப்புகளையும் அவர் அசராமல் ஆடி பார்வையாளர்களை அசத்தி வருகிறார். மேலும் இவர் National Cheerleaders Association All-Star Cheerleader விருதை இரண்டு முறை பெற்றுள்ளார் என்பத் குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறையும் உடல் குண்டான பின்னர்தான் பெற்றுள்ளார். உடல் எடை அதிகமானாலும், இவருடைய நளினமான நடனத்தை பார்க்க பார்வையாளர்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. குண்டு உடலுடன் இவர் ஆடும் ஆட்டத்தை இங்கே உள்ள வீடியோ கண்டு ரசியுங்கள்

Exit mobile version