தூத்துக்குடியில், தனது கள்ளக்காதலி வீட்டுக்குப் போன கள்ளக்காதலன் அவரை உறவுக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே ஆத்திரமடைந்து கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீசுவரன். இவர் தூத்துக்குடியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 28 வயதில் காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். மேலும், 9 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். காளீஸ்வரி தினமும் காலையில், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவார்.

நேற்று காலையும் வழக்கம்போல் காளீஸ்வரி 3 குழந்தைகளையும் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். நேற்று சனிக்கிழமை என்பதால், பள்ளி வகுப்புகள் மதியத்துடன் முடிவடைந்தது. குழந்தைகள் 3 பேரும், தங்களை அழைத்துச் செல்ல தாய் வருவார் என எதிர்பார்த்து பள்ளியிலேயே காத்து இருந்தார்கள். ஆனால் வெகுநேரம் ஆகியும் குழந்தைகளை அழைத்துச் செல்ல காளீஸ்வரி பள்ளிக்கு செல்லவில்லை.

குழந்தைகள் 3 பேரும் நீண்டநேரமாக காத்து இருப்பதை ஆசிரியர்கள் கவனித்தனர். இதையடுத்து காளீஸ்வரிக்குப் போன் செய்து பார்த்தனர். ஆனால் ரிங் போனது, போன் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காளீஸ்வரின் தாயாரும், அவருக்குப் போன் செய்துள்ளார். ரிங் மட்டும் போனதால், பதட்டமடைந்த காளீஸ்வரியின் தாயார் மகள் வீட்டுக்கு வந்தார்.

அங்கு காளீஸ்வரி வீட்டில் படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து காளீஸவரியின் தாயார் அலறியடித்தபடி அழுது புலம்பினார். வெளியில் ஓடி வந்து சத்தம் போட்டார்.

தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். காளீஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்த அறையில் பீரோவில் இருந்த சேலைகள் அவர் மீது விழுந்து கிடந்தன. அவரது கழுத்தில் கிடந்த சுமார் நான்கரை பவுன் தங்க சங்கிலியையும் காணவில்லை.

எனவே நகைக்காக கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையின் இறுதியில் இது கள்ளக்காதலில் ஏற்பட்ட கொலை என்று தெரிய வந்தது. இந்தக் கொலையைச் செய்தது பிரையன்ட் நகரைச் சேர்ந்த ஜோசப்ராஜ் என்ற 24 வயது வாலிபர் என்றும் தெரிய வந்தது.

அவரைப் போலீஸார் கைது செய்தனர். போலீஸில் ஜோசப் ராஜ் கொடுத்த வாக்குமூலத்தில், நான் தூத்துக்குடியில் உள்ள கேஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறேன். சிலிண்டர் போடுவதற்காக காளீஸ்வரி வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

இதனால் நான் அவ்வப்போது காளீஸ்வரி வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருப்பேன். இதனிடையே எனக்கும் கார்த்திகா என்பவருக்கும் திருமணம் ஆகியது. எங்களுக்கு 9 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. திருமணமான பிறகும் காளீஸ்வரியுடனான பழக்கத்தை கைவிடவில்லை. இதையறிந்த எனது மனைவி என்னை சத்தம் போட்டார்.

மேலும் காளீஸ்வரியை சந்தித்து கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இந்த விவகாரத்தினால் எனது மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். எனது பெற்றோரும் என்னை பிரிந்து சென்று விட்டார். நான் மட்டும் தனியாக வசித்து வந்தேன். நேற்று காலை காளீஸ்வரியை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டில் யாரும் இல்லாததால் அவரை உல்லாசத்துக்கு அழைத்தேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

பல முறை அழைத்தும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் உன்னால்தான் எனது மனைவி, பெற்றோர் பிரிந்து சென்று விட்டனர். நான் இப்படி தன்னந்தனியாக இருப்பதற்கு நீதான் காரணம் என்று கூறி அவருடன் தகராறு செய்தேன்.

தகராறு முற்றவே ஆத்திரத்தில் வீட்டில் இருந்த வாளை எடுத்து காளீஸ்வரி கழுத்தை அறுத்தேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையை மறைப்பதற்காக அவர் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply