இந்த வருடம் வெளியான படங்களின் டீஸர் மற்றும் டிரெய்லர்களில் யூடியூபில் தற்போதும் முதலிடத்தில் இருப்பது ரஜினி மூன்று வேடங்களில் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டிரெய்லர் தான்.

இதற்கு அடுத்த இடத்தில் இருந்த ‘ஜில்லா’ படத்தின் டிரெய்லரை தற்போது பின்னுக்கு தள்ளிவிட்டு சூர்யாவின் ‘அஞ்சான்’ டிரெய்லர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

சூர்யா, சமந்தா நடித்து லிங்குசாமி இயக்கத்தில் ஆகஸ்ட் 15ம் திகதி வெளியாக உள்ள ‘அஞ்சான்’ படத்தின் டீஸரை இதுவரை 30 (3,122,619 செய்தி பதிவேற்றப்படும் வரை) இலட்சங்களுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

தொடர்ந்து விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் டீஸர் 28 இலட்சங்களுடன் 3ஆம் இடத்திலும், தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ 25 இலட்சங்களுடன் 4ஆம் இடத்திலும், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் டீஸர் 19 இலட்சங்களுடன் 5ஆம் இடத்திலும் இருந்து வருகிறது.

‘கோச்சடையான்’ டிரெய்லர் 45 இலட்சம் பார்வையாளர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த சாதனையை சூர்யாவின் ‘அஞ்சான்’ பட டிரெய்லர் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply