இரண்டு வயது குழந்தையை சித்ரவதை செய்து கொலை செய்த தந்தைக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கியுள்ளது சவுதி அரேபிய அரசு.
சவுதி அரேபியாவில் உள்ள ஜவ்ப் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த மக்புல் பின் மடி அல்-ஷராரி என்ற நபர் தனது குழந்தை மனைவியின் கள்ளக்காதலனுக்கு பிறந்ததாக சந்தேகப்பட்டு அந்த குழந்தையை சித்ரவதை செய்துள்ளார். இரண்டே வயதான அந்த சின்னஞ்சிறு குழந்தையை ஊசியால் தலைமுதல் கால் வரை குத்தி சித்ரவதை செய்துள்ளார். இதன் காரணமாக அந்த குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.
இதுகுறித்து மக்புல் பின் மடி அல்-ஷராரி அவர்களை கைது செய்து சவுதி அரேபிய போலீஸார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் குற்றம் நிரூபணமானதால், அவருக்கு தலையை வெட்டி கொலை செய்யும் மரண தண்டனை வழங்கி சவுதி நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பு வழங்கபட்டது. இந்த தீர்ப்பின்படி நேற்று பொதுமக்கள் முன்னிலையில் மக்புல் பின் மடி அல்-ஷராரி அவர்கள் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த மரண தண்டனையையும் சேர்த்து இதுவரை சவுதி அரேபியாவில் 18 மரண தண்டனைகள் இந்த வருடத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சவுதி அரேபியாவில் கடந்த 2011ஆம் 82 மரண தண்டனையும், 2012ஆம் ஆண்டு 79 மரண தண்டனையும், 2013ஆம் ஆண்டு 78 மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.