மனநலம் பாதித்த இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக, அண்ணன்-தம்பி சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூர் கே.ஜி.ஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நாகவரா பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண் மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மன நலம் குன்றியவர்.

இதே வீட்டில் மும்தாஜ்யின் தந்தையின் சகோதரர் குடும்பமும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறது.  மும்தாஜ்யின் தந்தையின் சகோதரர் மகன்கள் முதாசீர் (20) மற்றும் முபாசீர் (14). அதாவது,  மும்தாஜ்யின் சகோதரர் முறை உள்ளவர்கள்.

ஆனால் மும்தாஜ் மீது காம எண்ணம் கொண்ட சகோதரர்கள் இருவரும், 2 ஆண்டுகளாக வீட்டில் யாருமில்லாத நேரத்தில்  மும்தாஜ்யுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு வந்துள்ளனர்.

மனநலம் குன்றியவர் என்பதால் இதுகுறித்து, மும்தாஜ் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. உடல் நலக்குறைவுக்காக  மும்தாஜ்யை மருத்துவமனையில் பரிசோதித்தபோது பலாத்காரத்துக்கு அவர் ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் மும்தாஜிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து கேட்டபோது நடந்த சம்பவத்துக்கு தனது சகோதரர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, தாத்தா கவுஸ்கான், கே.ஜி.ஹள்ளி காவல் நிலையத்தில், தனது பேரன்களுக்கு எதிராக புகார் அளித்தார். பலாத்காரம் வழக்குடன், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் (POSCO) கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். மனநலம் குன்றிய பெண்ணை 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே சகோதரர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply