வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தையை ஆஸ்திரேலிய தம்பதிகள் வாங்க மறுத்ததால் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என தாய்லாந்து பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தம்பதியினர் தாய்லாந்து நாட்டு பெண் ஒருவரை வாடகைத்தாயாக இருக்க ஒப்பந்தம் செய்திருந்தனர். அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரின் விந்தணுவை தாய்லாந்து பெண்ணின் கருமுட்டையில் செலுத்தி கரு ஏற்படுத்தப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வாடகைத்தாய் நல்ல முறையாக சுகப்பிரசவமாக குழந்தை பெற்று ஆஸ்திரேலிய தம்பதியிடம் ஒப்படைத்தார்.

ஆனால் குழந்தையை பரிசோதித்த ஆஸ்திரேலிய தம்பதியினர் குழந்தைக்கு குறைப்பாடு இருப்பதாக கூறி குழந்தையை வாங்க மறுத்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர்.

தற்போது அந்த குழந்தையை தாய்லாந்து தாயே வளர்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் இதனால் ஆஸ்திரேலிய தம்பதிகள் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் அந்த வாடகைத்தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு டென்சிண்ட்ரோம்’ என்ற அறிவுத்திறன் குறைவாக இருப்பதாகவும், குறையுள்ள குழந்தையை தாங்கள் வாங்க விரும்பாததால் மறுத்துவிட்டதாக ஆஸ்திரேலிய தம்பதிகள் விளக்கம் கூறியுள்ளனர்.

இதனால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத்தரும் மருத்துவமனைகளின் தரம் குறித்து தாய்லாந்து அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் இதுவரை 12 வாடகைத்தாய் மருத்துவமனைகள் சட்டப்படி பதிவு செய்யாமல் தகுந்த பாதுகாப்பு இன்றி செயல்படுவதாக கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதுபோன்ற சட்ட விரோத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply