அர்ஜெண்டினா நாட்டில் 83 வயது முதிய பெண் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சியாளர்கள் கடத்திச் சென்ற தனது பேரனை தற்போது கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
அர்ஜெண்டினாவில் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டுவரை பெரும் புரட்சி நடந்தது. அந்த புரட்சியை ஒடுக்க ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
அந்த காலகட்டத்தில் ராணுவத்தினர் சுமார் 30,000 பேர்வரை கடத்தி செல்லப்பட்டதாகவும், அவர்களில் பலர் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களில் சுமார் 500 பேர் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தப்பட்ட குழந்தைகளின் இருப்பிடத்தை கண்டறிய கடந்த 1984 ஆம் ஆண்டுமுதல்முதல் ஒரு அமைப்பு இயங்கி வருகிறது.
ராணுவ ஆட்சியின் போது தொலைந்துபோன குழந்தைகளை மரபணு சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உரியவர்களிடம் ஒப்படைக்கும் இந்த அமைப்பின் தலைவியாக இருக்கும் எஸ்டெலா என்ற 83 வயது பெண், தன்னுடைய பேரனையும் தேடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1976ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்த தனது மகள் லாராவை ராணுவ வீரர்கள் கடத்தி சென்றதாகவும் குழந்தை பிறந்ததும் லாராவை கொன்றுவிட்டதாகவும், குழந்தையை மட்டும் உயிரோடு விட்டதாகவும் கூறும் எஸ்டெலா, கடந்த 35 ஆண்டுகளாக தனது பேரனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு கடைசியில் தனது பேரனை கண்டுபிடித்துவிட்டதாக மிகவும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.