மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுத்தமான தங்கத்தினால் ஆன நூல் இழைகளால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த சட்டை ஒன்றை தயார் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பங்கஜ் பராக் என்பவர் 18 முதல் 22 கேரட் தங்கத்தினால் ஆன இழைகளால் நெய்யப்பட்ட துணி ஒன்றில் சட்டை தயார் செய்து அணிந்துள்ளார். இவர் அணிந்திருக்கும் சட்டையின் மதிப்பு $211,000 ஆகும். இந்த சட்டையின் இந்திய மதிப்பு ரூ.1கோடியே 30 லட்சம் ஆகும்.

thankamதனது 45 வது பிறந்தநாளின் போது இந்த சட்டையை பங்கஜ் பராக் அணிந்து கொண்டு வெளியே வந்த காட்சியை மும்பையை சேர்ந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

தொழிலதிபர் பங்கஜ் வெளியே வந்தபோது இவருக்கு பாதுகாப்பாக நான்கு செக்யூரிட்டிகள் இவருடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டைதான் உலகிலேயே மிக அதிக மதிப்புடைய சட்டை என்பதை கின்னஸ் சாதனை புத்தகம் ஏற்றுக்கொண்டு இந்த சட்டையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.

Share.
Leave A Reply