ஈராக்கில் குர்திஷ்தான் படையினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் வசமுள்ள நகரங்களை குர்திஷ் படைகள் மீட்டு வருகின்றன.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான சன்னி முஸ்லிம்கள் போர் இப்போது பிற மதத்தினர் மீதும் திரும்பியுள்ளது. சிஞ்சார் நகரில் யாஸிதி இனத்தவரை வெளியேற்றி அகதிகளாக விரட்டியடித்தனர்.
குர்து படையினருக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா! ஐ.எஸ்.ஐ.எஸ். வசமுள்ள நகரங்கள் மீட்பு!! இப்படி அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட யாஸிதிகள் சிஞ்சார் மலைகளில் செத்து மடிந்து கொண்டிருந்த நிலையில்தான், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மீது வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கினார்.
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனிடையே குர்திஷ்தான் மாகாண படையினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது.
ஒருபக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் வசமுள்ள ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டே மறுபக்கம், குர்திஷ் படையினருக்கு ஆயுதம் வழங்குகிறது.
இதனால் பலம் பெற்றுள்ள குர்திஷ் படையினர் மக்முர், கெர் ஆகிய இரு நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் இருந்து மீட்டுள்ளனர்.