ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»குடிநீரின்றி தவிக்கும் தீவுப்பகுதி மக்கள்!!
    உள்நாட்டு செய்திகள்

    குடிநீரின்றி தவிக்கும் தீவுப்பகுதி மக்கள்!!

    AdminBy AdminAugust 17, 2014No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    யாழ்ப்­பாணம் தீவுப்­ப­கு­தியில் வர­லாறு காணாத வகையில் ஏற்­பட்­டி­ருக்கும் வறட்சி கார ­ண­மாக குடி­நீ­ரின்றி தவிக்கும் மக்கள் அங்­கி­ருந்து யாழ்.நகர் நோக்கி இடம்­பெ­யர ஆரம்­பித்­துள்­ளனர்.

    ஊர்­கா­வற்­றுறை, புங்­கு­டு­தீவு, வேலணை, அல்­லைப்­பிட்டி, மண்­டை­தீவு ஆகிய தீவுப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்தே மக்கள் தற்­கா­லி­க­மாக இடம் பெயர ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் குறிப்­பாக ஊர்­கா­வற்­ றுறையில் நன்னீர் இன்­மை­யினால் மக்கள் வாழ முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

    குறித்த இந்த மக்­களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்­வ­தற்கு எவரும் எவ்­வித ஆக்­க­பூர்­வ­மான

    நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் இப்­பி­ர­தேச மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

    நாட­ளா­விய ரீதியில் ஏற்­பட்­டுள்ள கடும் வரட்சி யாழ். மாவட்­டத்தின் தீவுப் பகுதி மக்­க­ளையும் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டத்தை சேர்ந்த மக்­க­ளையும் மிகவும் கடு­மை­யாக பாதித்­துள்­ளது.

    இந்­நி­லையில் அந்த மக்­களின் குடிநீர்த் தேவையை மட்டும் பூர்த்தி செய்­வ­தற்­கான தற்­கா­லிக ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதே­வேளை, இதர நீர்த் தேர­வ­க­ளுக்­காக ஏனைய நீர்த்­தே­வையைப் பூர்த்தி செய்­வ­தற்கு இம்­மக்கள் நீண்­ட­தூரம் அலைந்து திரிய வேண்­டி­யுள்­ளனர்.

    குறிப்­பாக யாழ். மாவட்­டத்தின் தீவு­க­ளான ஊர்­கா­வற்­றுறை, நெடுந்­தீவு, புங்­கு­டு­தீவு, நயி­னா­தீவு, வேலணை, எழு­வை­தீவு, அன­லை­தீவு போன்ற தீவு­களில் நன்­னீ­ரின்­மையால் மக்கள் மிகவும் பாதிப்­ப­டைந்­துள்­ளனர்.

    இங்கு வசிக்­கின்ற மக்­க­ளுக்கு குடி­நீரை கூட வழங்­கு­வ­தற்­கான விசேட ஏற்­பா­டுகள் எவை­யுமே இன்­னமும் செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. தீவுப்­ப­கு­தி­களில் வசிக்கும் மக்கள் குளிப்­ப­தற்கும் உடை­களை கழு­வு­வ­தற்கும் யாழ். நகரை நோக்கி செல்­ல­வேண்­டிய நிர்க்­க­தி­யான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

    இந்த நிலைமை கடந்த மூன்று வாரங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள பொழு­திலும் இன்­னமும் மக்­களின் நீர்த்­தே­வையைப் பூர்த்தி செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

    ஊர்­கா­வற்­று­றையைப் பொறுத்­த­வ­ரையில் மக்கள் குடிப்­ப­தற்கு நீரின்றி அவ­திப்­ப­டு­கின்­றனர். இந்த மக்­க­ளுக்கு நீர் வழங்­கு­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட நன்னீர் கிண­று­களும் வற்­றி­யுள்­ளதால் நீர்­வி­நி­யோகம் பாதிப்­ப­டைந்­துள்­ளது.

    இதே­வேளை விவ­சா­யி­களின் தொழில் நட­வ­டிக்­கை­களும் முற்­றாகப் பாதிப்­ப­டைந்­துள்­ளது. ஆனால் பாதிப்­புக்­களை அள­வீடு செய்து அந்த மக்களின்நீர்த்தே­வையைப் பூர்த்தி செய்­வ­தற்­கான முயற்­சி­களை யாழ். மாவட்ட செய­லகம் இன்­னமும் மேற்­கொள்­ளா­மை­யினால் பெரும் நெருக்கடிகளை எதிர்­நோக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    இந்­நி­லையில் தீவுப்­ப­கு­தி­க­ளுக்கு விஜயம் செய்­கின்ற அர­சியல் கட்­சி­களின் பிர­மு­கர்கள் நீர்த்­தே­வையைப் பூர்த்தி செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்ற பொழு­திலும் இன்­னமும் மக்­க­ளுக்கு சீரான முறையில் குடிநீர் கூட கிடைக்­க­வில்லை.

    தீவு­களில் குடிநீர்ப் பிரச்­சினை அதி­க­மாக இருப்­பதால் இந்த மக்­களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்­வ­தற்கு விசேட திட்­டங்­களை மேற்­கொள்ள வேண்டும் என புத்­தி­ஜீ­விகள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

    இதே­வேளை, இங்கு வாழும் மக்கள் குளிப்­ப­தற்கும், உடை­களைக் கழு­வு­வ­தற்கும் உவர்நீர் கூடக் கிடைக்­கா­மையால் ஒரு மனிதன் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய எந்­த­வொரு அடிப்­படை வச­தி­யு­மின்றி மிகவும் பாதிப்­ப­டைந்­துள்­ளனர்.

    இந்த குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்­வ­தற்­காக மக்கள் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து தமது சொந்தச் செலவில் நீரைக் கொண்டு செல்­வ­துடன் தனியார் நீர் வியா­பா­ரி­க­ளிடம் ஒரு லீற்றர் நீரை சுமார் 2 ரூபா பணம் கொடுத்து நீண்ட நேரம் வரி­சையில் காத்­தி­ருந்து பெற்று வரு­கின்­றனர்.

    இதே­வேளை, தீவுப்­ப­கு­தி­களில் உள்ள குளங்­களும் ஏனைய நீர்ப் படுக்­கை­களும் முற்­றாக வற்­றி­யுள்­ளதால் இவற்­றி­லி­ருந்து மக்­கியும் புழு­தியும் காற்றில் பறக்­கின்­றது. இந்த புழுதி இங்கே வாழு­கின்­ற­வர்­களின் உடம்பில் ஒட்டி சரு­ம­நோய்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

    இதே­வேளை, இந்த மக்­க­ளுக்­கான குடிநீர் விநி­யோ­கத்­திற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த நன்னீர் வில்­லை­யி­லி­ருந்து பெறப்­பட்ட நிலக்கீழ் நீர் வற்­றி­யுள்­ளதால் இக்­கி­ணற்­றி­லி­ருந்தும் நீரைப் பெற்­றுக்­கொள்ள துர்ப்­பாக்­கிய நிலை தற்­பொ­ழுது தோன்­றி­யுள்­ளது.

    வேலணை, சாட்டி, அல்­லைப்­பிட்டி ஊர்­கா­வற்­துறை போன்ற பகு­தி­களைச் சேர்ந்த மக்­களும் குடி­நீரைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் பாதிப்­ப­டைந்­துள்­ளனர். அத்­துடன் சிலர் இடம் பெயர்ந்து யாழ்ப்­பாணம் நோக்கி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

    தீவுப்­ப­கு­தி­க­ளுக்கு அங்­கு­செ­யற்­பட்டு வரு­கின்ற பிர­தேச சபை­களால் நீர்­வி­நி­யோ­கத்தை மேற்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளதால் குடா­நாட்டில் செயற்­ப­டு­கின்ற சகல பிர­தேச சபை­களும் உத­வ­வேண்டும் என கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இருந்­தாலும் ஏனைய பிர­தேச சபை­களின் பூர­ண­மான ஒத்­து­ழைப்­பின்­மையால் நீர்ப்­பி­ரச்­சினை தொடர்­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

    இதனால் மக்­களின் அன்­றாட வாழ்க்கை பாதிப்­ப­டைந்­துள்­ள­துடன் பல மாண­விகள் பாட­சா­லைக்கு செல்­வ­தில்லை எனவும் பொது­வாக இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    இதே­வேளை முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மாவட்­டங்­களில் வர­லாறு காணாத வரட்சி தற்­பொ­ழுது ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கிளி­நொச்சி மாவட்­டத்தில் பார­தி­புரம், கிருஸ்­ண­புரம், மலை­யா­ள­புரம், அறி­வி­யல்­நகர், செல்­வா­நகர், ஸ்கந்­த­புரம், முட்­கொம்பன், உருத்­தி­ர­புரம், வேராவில், வலைப்­பாடு, கிராஞ்சி, முழங்­காவில், உமை­யாள்­புரம், பரந்தன் போன்ற பகு­தி­களில் குடி­நீர்ப்­பி­ரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது.

    இதனால் மக்கள் குடி­நீரைத் தேடி நீண்­ட­தூரம் அலைந்து திரி­கின்­றனர். இதேபோல் நீர்­வி­நி­யோ­கத்­திற்­கான வாய்க்கால் நீரும் வற்­றி­யுள்­ளதால் பொது­மக்கள் குளிக்க முடி­யாமல் அவஸ்­தைப்­ப­டு­கின்­றனர்.

    கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாத்­திரம் வறட்­சி­யினால் 21 ஆயிர்­த­துக்கும் மேற்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த 75 ஆயிரம் பேர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

    வட மாகா­ணத்தில் வறட்­சியின் கார­ண­மாக இரண்­டரை லட்சம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். நாடு முழு­வதும் சுமார் ஐந்து லட்சம் குடும்­பங்­களைச் சேர்ந்த 17 லட்சம் பேர் வறட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது

    இந்த மக்­களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்­தி­செய்­வ­தற்கும் விசேட வேலைத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய, மாகாண அர­சு­க­ளினால் இது­வரை சீரா­னதும் நிரந்­த­ர­மா­ன­து­மான செயற்­றிட்­டங்கள் எவையும் இன்­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் மக்கள் ஆதங்கம் வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

    இது இவ்­வா­றி­ருக்க முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் பல பிர­தே­சங்­களில் கிண­றுகள், குளங்கள், ஆறுகள் போன்­ற­வற்றில் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ளதால் இங்கும் வர­லாறு காணாத வரட்சி ஏற்­பட்­டுள்­ளது.

    குறிப்­பாக புதுக்­கு­டி­யி­ருப்பு, ஒட்­டு­சுட்டான், கரிப்­பட்ட முறிப்பு, மண­வா­ளப்­பட்­ட­மு­றிப்பு, மாங்­குளம், ஒலு­மடு, துணுக்காய், பாண்­டி­யன்­குளம், மல்­லாவி போன்ற பகு­தி­களில் விவ­சாய நட­வ­டிக்­கைகள் பாதிப்­ப­டைந்­துள்­ளன. ஒரு­சில பகு­தி­களில் குடி­நீ­ரைத்­தேடி மக்கள் நீண்­ட­தூரம் அலை­ய­வேண்­டிய நிலையும் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    இந்­நி­லையில் வரட்­சியால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் வரட்சி நிவாரணங்களை வழங்கவேண்டும் என்பதும் தீவுப்பகுதி மக்களின் குடிதண்ணீர் உள்ளிட்ட நீர்த்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்பதும் இம்மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

    யாழ். மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தீவுப்பகுதி மக்களும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில் தேசிய ரீதியில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் எதுவுமே சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

    எனவே, வடக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்டுகின்றவர்களுக்கு குடிதண்ணீரையும் வரட்சி நிவாரணங்களையும் வழங்குவதற்கும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து இவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் மாகாண முதலமைச்சரும் மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இந்த மக்களின் அவாவாக உள்ளது.

    நமது  புங்குடுதீவு விஜயத்தின் போது கண்டவை..

    DSCN0086
    புங்குடுதீவு  மடத்துவெளியில் உள்ள முருகன் கோயில்   அருகாமையில்  உள்ள கிணற்றில்  தண்ணீருக்காய் வருசையில்  காத்திருக்கும்  மக்களும், மாக்களும்.

    வெளிநாட்டில்  உள்ளவர்கள்….  காசுகொடுத்து    ஊரில்  உள்ள  கோயில்களை  மட்டும்   புதுப்பித்து அழகாக கட்டியுள்ளார்கள். கடவுளுக்கு அள்ளி அள்ளிக்கொடுக்கிறார்கள். அள்ளி அள்ளி செலவு  செய்கிறார்கள்.  ஆனால் கடவுள்கள்   யாருமே    இதுவரை   இவர்களுக்கு  (தமிழர்களுக்கு)   எதுவுமே  செய்ததாக  தெரியவில்லை.

    இவர்களை  பற்றி  கடவுள்களுக்கு நல்லா  தெரியும்.   இவர்கள்    தங்களை   வைத்து பிழைப்பு  நடத்துகிறார்கள்  என்பது  கடவுளுக்கு தெரியாததா?

    madathuveli-1
    இதுதான் மடத்துவெளியில் உள்ள  பள்ளிக்கூடம்.
    இந்த பள்ளிக்கூடத்தை சுற்றியுள்ள  பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளை காணவில்லை. (இருந்தவர்கள், இல்லாமல்போனவர்கள், கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்) மாடுகளை மட்டும்தான் காணக்கூடியதாக இருக்கிறது.

    kamalampikaiஇந்த பள்ளி கூடத்துக்கு மின்சாரவசதி, குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, கணணி வகுப்பு கூடம் போன்ற வசதிகள் யாவும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன  என்பது குறிப்பிடதக்கது.

    puns
    மக்கள்  அற்ற பிரதேசமாக, வனாந்தரமாக காட்சியளிக்கும்  நாம்  வாழ்ந்த  புங்கையூர்.   இங்கிருந்த   மக்கள்  எல்லோரும்  வீடும் வேண்டாம், காணியும் வேண்டாம், அம்மாவும், அப்பாவும்  வேண்டாம், காதலியும்,  கட்டிய  மனைவியும்  வேண்டாம் , வளர்த்த நாயும் வேண்டாம்  என எல்லாவற்றையும்  அனாதவராக  விட்டு விட்டு   வெளிநாட்டுக்கு போனால் காணும் என  ஊரை  விட்டே ஓடிவந்தவர்கள்.

    இப்போ  வெளிநாட்டிலிருந்து  திரும்ப  ஊருக்கு  போய்  பார்த்துவிட்டு… தங்கட  காணிகள், வீடுகள் பறிபோய்விட்டதாம், அங்கு ஆமிக்காரன் குடிகொண்டிருக்கிறானாம்  எனச்சொல்லிக்  கொண்டு   வெளிநாடுகளிலிருந்து  தலையில்  அடித்து  அழுகிறார்கள்.

    punkudutivuபல  ஆயிரக்கணக்கான  வீடுகள்  யாருமின்றி  சும்மா தான் கிடக்கின்றது.  அந்த வீடுகளில்  சில ஆமிக்காரர்கள் குடிகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் அந்த வீடுகளுக்கு விளக்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    viduநான் பிறந்து தவழ்ந்த வீடு  (பூபதி இல்லம்)

    வெளிநாடுகளில்  உள்ளவர்கள்   தங்கள்    ஊருக்கு போய்  தங்கள்  தங்கள் வீடுகளை, காணிகளை துப்பரவாக்கிக்கொண்டு  வாழக்கூடிய  வசதிகள்  (மின்சாரம், தண்ணீர்,  போக்குவரத்து வசதி…) யாவும்  இப்போ  கிடை்திருக்கின்றது.   போய்  வாழலாம் .. ஆனால்  போய்  வாழமாட்டோம்.

    எதாவது  ஒரு காரணத்தை   சொல்லிக்கொண்டு   நாம்  வெளிநாட்டில்  வாழ்ந்து….  வெளிநாட்டிலேயே   மண்டையை போடுவோம்  என்பது தான் உண்மை.

    baskaran
    புங்கையூர் -கி.பாஸ்கரன்

    Post Views: 41

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    மனைவியின் கர்ப்பப்பை அகற்றல்: கணவன் முறைப்பாடு

    September 27, 2023

    யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13 பவுண் நகைகள், வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு

    September 27, 2023

    வகுப்பில் கசிப்பு விற்ற மாணவன் கைது

    September 27, 2023

    Leave A Reply Cancel Reply

    August 2014
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jul   Sep »
    Advertisement
    Latest News

    தாயின் ஐடியுயை காட்டி காதலனுடன் விடுதியில் தங்கிய மகள்

    September 28, 2023

    3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி

    September 28, 2023

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தாயின் ஐடியுயை காட்டி காதலனுடன் விடுதியில் தங்கிய மகள்
    • 3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version