தமிழ்  நாட்டில்  ஒரு  வேலை  கிடைப்பதென்பது குதிரை கொம்பாகும். ஆனால்…  சீறும்  சீமான்  கட்சி  தொண்டர்களுக்கு   வருடம்  முழுவதும்  வேலை வாய்புகள்  இருக்கவே  செய்கின்றது.

இலங்கையில்    ராஜபக்ச  ஆட்சி  இருக்கும் வரையும்   சீறும்  சீமான்  தலைமையிலான  நாம்  தமிழர்  கட்சியினர்  மட்டுமல்லாது  ஏறக்குறைய  65   அமைப்புகளுக்கு  தமிழ்  நாட்டில்  வேலைவாய்புகள்   உண்டு.

இந்த  65   அமைப்புகளில்  ஒரு சில அமைப்புகளை  தவிர .., பெரும்பான்மையான  அமைப்புகள்  யாவும்   2009 ஆம்  ஆண்டு   மே மாதம்  18 ஆம் திகதிக்கு   பிறகு  தோன்றியவையாகும்.

அமைப்புகள்  சிலவற்றின்  பெயர்கள்..
(தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவையின் எம்.எல்.ஏ தனியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முன்னாள் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன், கூடங்குளம் அணு உலை இயக்க எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன்,   தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் பெ. மணியரசன்,   தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் தபசி குமரன், புதுச்சேரி மீனவர் வேங்கைகள் அமைப்பின் மங்கையர்செல்வன், தமிழ்ப் புலிகள் திருவள்ளுவன், திராவிட முன்னேற்ற மக்கள் கழகத்தின் ஞானசேகரன், மே 17 இயக்கத்தின் திருமுருகன், இளந்தமிழகம் இயக்கத்தின் செந்தில்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை  இயக்கம்…….)

இந்த  65   அமைப்புக்களால்   ஈழத்தமிழனுக்கு  எதாவது   ஒரு நல்ல  காரியம்  இதுவரை  நடந்திருக்கின்றதா அல்லது  நடக்குமா  என   நீங்கள்  சிந்தித்து  பார்த்தீர்களானால்….  இவர்களால்   இந்தியாவிலோ  அல்லது  தமிழ்  நாட்டிலோ  கூட   ஈழத்தமிழனுக்காக  ஒரு  துரும்பை  கூட  நகர்த்த முடியாது.

இவர்களால்  புலம்பெயர்  தமிழர்களின்  பொக்கற்றில்  இருக்கும்  பணத்தை தான்  நகர்த்தமுடியும்.

“யாணை  இருந்தாலும்  ஆயிரம்  பொன்…   இறந்தாலும்   ஆயிரம்   பொன்”  என்ற  பழமொழிக்கு  இணையாக..   ′புலிகள்  உயிருடன்  இருக்கும்   போது..   புலிகளுக்கு  ஆதரவு   அளிப்பதாக   சொல்லிக்கொண்டு… தமிழகத்தில்   உளள    சில   சில்லறை  அரசியல் கட்சிகள்,  சினிமாக்காரர்கள், பாவலர்கள்.., பாட்டுக்காரர்கள்… என  பல தரப்பட்டவர்களும்   புலிகளிடமிருந்து   பெருந்தொகையான பணத்தை  கறந்து கொண்டார்கள்.

அதேபோன்று   புலிகள்  இறந்த  பின்பும்….   புலியாதரவு  அல்லது   ஈழத்தமிழர்களுக்காக  போராடுகின்றோம்  என்ற  போர்வையில்… ஈழத்தமிழனை  ஏமாற்றி  பிழைக்கலாம்  என்கின்ற   ஒரே  நோக்கத்தில்..    தமிழகத்தில்   புதிது  புதிதாக  பல  அமைப்புகள்   தோன்றி   ஈழத்தமிழனை  சுறன்டிப்  பிழைப்பு  நடத்துகின்றார்கள்.

இந்த   65   அமைப்புகளில்  ஒரு  அமைப்பாவது  ஏன்  ஆயுதம்  தூக்கி  போராட  தயங்குகின்றார்கள்?

ஈழத்தமிழர்களின்  60வருட  அகிம்சை   போராட்த்திலும்,   30வருட ஆயுதபோராட்டத்திலும்…   யாராரோ  போராடினார்கள்…. யாராரோ  மடிந்தார்கள்…  யாராரோ  உயிர் தியாக செய்தார்கள்.  யாராரோ  காணாமல் போனார்கள்.  யாராரோ   தங்கள்  பிள்ளைகளை,  சொத்துகளை  இழந்தார்கள்.    யாராரோ  தங்கள்  உழைப்பை  தானம் செய்தார்கள்.

ஆனால்.. ஈழத்தமிழனுக்காக   எதையுமே செய்யாமல், எதையுமே  இழக்காமல்….   யாராரோ  பலன்களை அறுவடைசெய்கின்றார்கள்.  இந்த  போலிகளை  எப்பொழுது   புலம்பெயர்  தமிழர்கள்  கைகழுவி  விடுகின்றார்களோ  அன்றுதான்  ஈழத்தமிழனுக்கு  விடிவு  கிடைக்கும்.

ஈழத்தமிழனின்  இரத்தத்தை  உறிஞ்சி  குடித்துக்கொண்டு   ஈழத்தமிழன்  மீது  சவாரி  செய்யும்  ஒட்டுண்ணிகளை  அகற்றிவிடுங்கள். நல்லது நடக்கும் பாருங்கள்.

சரி விடயத்துக்கு வருகிறேன்...

சீறும் சீமான் கோஷ்டியினருக்கு புதிய வேலைவாய்பு கிடைத்துள்ள  சமாச்சாரம்  இதுதான்.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலை வாங்கியுள்ளது பிரபலமான சிங்கள நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்துக்குள் நேரடியாக வர முடியாத ராஜபக்சே, அரசியல், சினிமா, தொழில் முதலீடுகள் என சகல வகையிலும் இப்போது தன் பினாமிகள் மூலம் கால்பதிக்க ஆரம்பித்துள்ளதன் அடையாளம் இதெல்லாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது.

ஆனால் இன்று அதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலையின் முதன்மைக் குற்றவாளி ராஜபக்சே, தன் பினாமியை வைத்து நட்சத்திர ஓட்டலை நடத்தப் போகிறார்.

20-1408515432-rajapaksa356-600

எயிட்கென் ஸ்பென்ஸ்
எயிட்கென் ஸ்பென்ஸ் – இது நட்சத்திர அந்தஸ்து கொண்ட பிரபல பிராண்ட் சொகுசு ஓட்டல். பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரால் தொடங்கப்பட்டு, இலங்கை, இந்தியா, மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகளில் கிளைகளுடன் இயங்குகிறது. இந்த ஓட்டலை ஹாரி ஜெயவர்த்தனே என்பவருக்கு அந்த பிரிட்டன் தொழிலதிபர் விற்றுவிட்டார். அதாவது, ‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ ஓட்டலின் உரிமையாளர் மற்றும் தலைவர், ஹாரி ஜெயவர்த்தனே.20-1408515744-harry-jayawardena34-600

யார் இந்த ஹாரி ஜெயவர்த்தனே?
இலங்கையின் முக்கியமான வர்த்தக முதலாளி! ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர். லங்கா மில்க் ஃபுட்ஸ், லங்கா டிஸ்டில்லரீஸ் (மதுபான) நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர், இவர்தான்.இலங்கையின் மிகப் பெரிய வங்கியான ஹாட்டன் நேஷனல் வங்கியின் இயக்குநர். இவருக்கு சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் தலைவர் பதவியை அளித்து, நாட்டின் பெருந்தலைகளுள்   ஒருவராக இவரை வலம் வரவைத்தவர் யார் தெரியுமா… இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேதான்.

அந்த அளவு ராஜபக்சேவுக்கு நெருங்கிய நண்பர், வர்த்தகக் கூட்டாளி.

hotel

ரெசேடா தி ஃபெர்ன்
இந்த ஹாரி ஜெயவர்த்தனேதான் இப்போது சென்னையை குறிவைத்து முதலீடுகளை இறக்க ஆரம்பித்துள்ளார். ராயலா டெக்னோபார்க் கார்ப்பரேசன்’என்ற நிறுவனம் பெருங்குடி அருகில் கட்டி முடித்த ரெசேடா தி ஃபெர்ன் (Reseda-The Fern) என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலை கடந்த ஜூன் மாதம் வாங்கியிருக்கிறார் ஜெயவர்த்தனே. (எயிட்கென் ஸ்பென்ஸ் நிறுவனத்துக்கு ஏற்கனவே கோவையில் ஓட்டல் அதிதி மற்றும் புதுச்சேரியில் ஓட்டல் தமரா ஓட்டல்கள் சொந்தமாக உள்ளன).
20-1408515805-rajapaksa-partner-purchases-reseda-the-fern-for-rs-150-cr-in-chennai36-600

ரூ 150 கோடி
143 அறைகள் கொண்ட இந்த எட்டு மாடி ஓட்டல் 25 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூ 150 கோடி)க்கு கைமாறியுள்ளது. எயிட்கென் ஸ்பென்ஸ் என்ற பெயரிலேயே இயங்கவிருக்கும் இந்த ஓட்டலின் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.20-1408515885-rajapaksa-harry-jayawardena34-600

ராஜபக்சே கூட்டாளி
ராஜபக்சேவும் ஹாரி ஜெயவர்தனாவும் 60:40 என்ற சதவீத அடிப்படையில் இந்த ஓட்டலை நடத்தப் போவதாக பரபரப்பாக தகவல் பரவி வருகிறது. கொழும்புவில் ஈழத் தமிழர்கள் நடத்திய ஓட்டல் மற்றும் பிற தொழில் நிறுவனங்களைக் கையகப்படுத்தி பறித்துக்கொண்ட, அதே ராஜபக்சேதான் இப்போது தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல் தொழில் நடத்தப் போகிறார்.20-1408515735-rajapaksa23454-600

பொருளாதாரத் தடை
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கே தெரியாமல் நடந்திருக்கிறது இந்த ரூ 150 கோடி பேரம், அதுவும் ராஜபக்சேவை பின்னணியாகக் கொண்டு!20-1408516054-protest234-600

போராட்டம்
இந்த ஓட்டல் வாங்கப்பட்டது மற்றும் அதில் ராஜபக்சேவின் பின்னணி குறித்து தீவிரமாக தகவல் சேகரித்து வருகின்றன நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள். விரைவில் இந்த ஓட்டலை திறக்கத் தடை கோரி போராட்டத்தில் இறங்கவும் திட்டமிட்டுள்ளனர்.என  செய்தி  வெளியிட்டுள்ளது    இந்தியாவிலிருந்து வெளிவரும்  ஊடகமொன்று…

Share.
Leave A Reply