உலகெங்கும் பிரபலமடைந்திரு க்கும் ‘ஐஸ்வாளி’ சவாலுக்கு பதில் காசா மக்களுக்கு ஆதரவாக இடி ந்த கட்டடங்களின் கற்;குவியல் சவால் சமூக இணையத்தளங்களில் பிரபலமடைந்துள்ளது.
ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்த ஆரம்பிக்கப்ப ட்ட ஐஸ்வாளி சவாலை ஏற்று உலகெங்கும் பல பிரபலங்களும் தனது தலையில் ஒரு வாளி அள வுக்கு குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர்.
ஆனால் காசா மக்கள் இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான கட்டடங்களின் கற்குவியலை வாளி அளவுக்கு தனது தலையில் கொட்டி இந்த சாவலை நிறைவேற்றி வருகி ன்றனர்.
இந்த சவாலை ஆரம்பித்து தனது தலையில் இடிபாட்டுக் கற்குவியலை கொட்டிய ஊடகவியலாளர் அய்மன் அலூலின் வீடியோ 3000 க்கும் அதிகமான முறை டுவீட் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ குறித்து அலூல் வெளியிட்டிருக்கும் கருத்தில் காசா வின் நிலைமையை விபரித்துள் ளார். அதில் அவர், “தலையில் கொட்டுவதை விடவும் தண்ணீரின் தேவை எமக்கு முக்கியமானதாக இருக்கிறது. அவ்வாறு தண்ணீர் கிடைத்தாலும் அதனை குளிரூட்டு வது கடினமான காரியமாகும்.
எனவே குளிர்வாளி சவாலை பல ஸ்தீனத்தில் நிறைவேற்ற நினைத்த போது, பார்க்கும் இடமெல்லாம் கிடைக்கும் கட்டட இடிபாடுகளின் குவியல்தான் இருந்தது. எனவே ஐஸ்வாளிக்கு பதில் நான் அந்த கற்குவியலை பயன்படுத்தினேன்” என்று விபரித்துள்ளார்.
இந்த பிரசாரத்தை அடுத்து உல கெங்கிலுமிருந்து பலரும் கற்;குவி யலை தனது தலையில் கொட்டி சமூக இணையதளங்களில் பதிவுசெ ய்து வருகின்றனர்.
Palestinian journalist Ayman al-Aloul and Jordanian comedian Mohammed Darwaza have spearheaded the movement, with both releasing videos of themselves pouring rubble on their heads