ilakkiyainfo

குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்? (பகுதி-2)

ealai

இழப்பும் இறப்பும் முடிவு அல்ல…தோல்­வியும் துய­ரமும் இறு­தி­யல்ல… ஏமாற்­றமும் எதிர்ப்பும் அழிவு அல்ல…வயதும் வியா­தியும் ஓய்வு அல்ல…மாறாக ஒவ்­வொன்றும் ஒரு மைல்கல்.

ஒரு புதிய துவக்கம் இந்த உயிரோட்டமுள்ள கருத்­துக்­களில் ஆழ்ந்த பல அர்த்­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால், இப்­பூமியில் உயி­ருடன் உயி­ரோடு உயிராக காணப்­பட்ட உற­வுகள் பிரிந்து சென்ற பின்னர் எஞ்­சு­வது வெறு­மையே.

மனை­வி­யாக… தாயாக… மாமி­யாக…சகோ­த­ரி­யாக… அவ­தா­ர­மெ­டுத்­தி­ருந்த ஒரு பெண் அனைத்து உற­வு­க­ளையும் கண்­முன்னே பறி­கொ­டுத்­து­விட்டு அபலைப் பெண்­ணாக தனது முது­மையில்  வறு­மை­யுடன்  வாழ்க்­கையில்   போரா­டு­கிறாள் எஞ்­சிய வாழ்வைக் கழிப்­ப­தற்­காக…

ஆம். அவர் வேறு­யா­ரு­மல்ல 57வய­து­டைய யோசப் யோகேஸ்­வரி…. ஒரு­நொ­டியில் வாழ்க்கையே புரட்­டிப்­போட்ட அந்தச் சம்­ப­வத்தை கண்­ணீர்த்­து­ளி­க­ளுடன் என்­னுடன் பகிர்ந்தார்.

“இடம்­பெ­யர்ந்து ஓடி வந்து எல்­லோரும் வீதியில் வரி­சை­யாக இருந்த போது தற்­கா­லிக குடிசை (கூடா­ரங்கள்) லொறி­யில கொண்டு வந்து குடுத்­தாங்கள் வெய்­யிலை மழையை தாங்க கூடா­ர­மா­வது கிடைத்து விட்­டதே என்று நினைச்சு வாங்­கிய போது கூடா­ரமே என் குடும்­பத்­திற்கு எம­னாகும் என்று நான் நினைக்­கவே இல்­லை­யம்மா…. நினைக்­கவே இல்லை.

கூடா­ரங்­களை வாங்­கின பிள்­ளைகள் இருள முன் ஒரு இடத்தைப் பிடிச்சு கூடா­ரத்தை அமைச்­சுப்­போ­டுவம் என்று நினைச்சு கடற்­க­ரையில் கூடாரம் போடும் போது ஷெல் விழுந்து போச்சு.

வெய்­யி­லையும் மழை­யையும் சமா­ளிக்க நினைச்ச எனக்கு கிடைத்த பரி­சுதான் ஒன்­பது பேரின் உயிரும் என் கண் முன்னால் போயிட்­டுது. எனக்கு தலையில் பலத்த காயம். அதோட உடம்­பெல்லாம் சின்னச் சின்ன காயம். உடனே என்னை மருத்­துவ உத­வி­யாளர் ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி விட்டார்.

என்ர 2 பிள்­ளை­களும் மனு­சனும் தம்பி குடும்பம் தங்­கச்சி குடும்பம் என எல்­லோ­ரு­மாக சேர்த்து 9 பேரும் இறந்து விட்­டனர். கடைசி மகளும் இடம்­பெ­யர்ந்து ஓடி வரும்­போது காயப்­பட்டு தவ­றுப்­பட்டு விட்டாள்.

அவளை நான் தேடாத இடமே இல்லை. இருக்­கி­றாளோ இல்­லையோ என்று கூட எனக்கு தெரி­யாது. அவளை நான் சாக முதல் கண்­டிட்டேன் என்றால் செத்­தாலும் பர­வா­யில்லை.

காயப்­பட்டு ஆஸ்­பத்­தி­ரிக்கு ஏத்­தின பிறகு அங்கு முழிச்­சுப்­பார்த்த போது உள்­ள­றிவு இருந்­தது. வெளியில ஆட்கள் எல்­லோரும் கதைக்­கி­றது அழு­கிற சத்தம் எல்லாம் கேட்­கி­றது.

உடம்­பெல்லாம் ரண­மாக வலிக்க எழும்ப முற்­பட்டேன். எழ முடி­ய­வில்லை கண்ணை திறக்க முற்­பட்டு திறந்து விட்டேன். கண் தெரி­ய­வில்லை. அப்­பதான் எனக்கு தெரியும். தலையில் பட்ட ஷெல்பீஸ் கண் நரம்­பையும் தாக்கி விட்­டது. காலைத் தூக்­கினேன் கீழே வைக்­கவும் முடி­யேல்ல.

இவற்­றுக்­கப்பால் பழைய நினைவு அற்­றி­ருந்­ததால் மனு­சனை தேடினேன். அவரும் பக்­கத்­தில இல்லை. மூத்த மகனை தம்பி…. தம்பி… என்று கூப்­பிட்டேன்.

அவனும் இல்லை. பிறகு மகளை பிள்ளை.. பிள்ளை… என்று கூப்­பிட்டேன். அவளும் இல்லை. என்ன நடந்­த­தென்று எனக்கே தெரி­யாது.

பக்­கத்­தில படுத்­தி­ருந்த ஆட்கள் எல்­லாரும் சொல்­லிச்­சினம் அவையல் எல்­லோரும் கடற்­க­ரை­யில அடிச்ச செல்­லோட போயிற்­றினம். நீங்கள் மட்டும் தான் காயக்­காறர் வந்த லொறியில் வந்­தி­ருக்­கி­றீங்கள் அம்மா என்­றனர்.

அவையல் செத்த போது எனக்கு தலை­யில இல்­லாம வேற எங்­கை­யா­வது பட்­டி­ருந்தா நான் கடல்ல குதித்து செத்­தி­ருப்பன். போர இடத்­தி­ல­யா­வது நிம்­ம­தி­யாக சேர்ந்து வாழுவம்.

ஏன் தான் கடவுள் இப்­ப­டி­யொரு தண்­ட­னை­யையும் தந்து விரக்­தியின் விளிம்பில் வாழ விட்­டாரோ தெரி­யாது. தண்­டித்த கட­வு­ளுக்கு என்னை வாழ வழி சமைத்து தர முடி­ய­வில்லை. நான் யாரை நோவது.

இப்ப எனக்கு 57 வயது எனக்­கென்று சொல்லிக் கொள்ள எது­வுமே இல்லை.

இருந்­தாலும் பதிவு, உதவி என்ற பெயரால் வந்த உத­வி­களும் பூர­ண­மா­கேல்ல. இப்ப திரு­வை­யா­றில என்ர தங்­கச்­சியின் குடும்­பத்­துடன் ஒட்­டாண்­டி­யாக இருக்­கிறன்.

உடம்பு முழுக்க ஷெல் பீஸ் இருப்­ப­த­னா­லையும் தலை­யி­லி­ருந்து கண்­ணுக்கு வரும் நரம்பு பகு­தியில் பீஸ் இருப்­ப­த­னால கண் பார்வை ஒப­ரேசன் செய்தும் பார்வை குறை­வா­கவே இருக்கு. இவ்­வா­றான நிலையில் எந்த ஒரு உதவியும் கிடைக்­காமல் மிகவும் கஷ்­டப்­ப­டு­கிறேன். ஆனாலும் எனக்கு வித­வை­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கிற அரிசி கிடைக்­குது.

1 மாதத்­திற்கு 5 கிலோ கிராம் கிடைக்கும். அதோட எங்­கட ஊரில இரா­சேந்­திரம் சேர் என்ற ஒரு அதிபர் இருக்­கிறார். அவர் ஒரு பரோ­ப­காரி என்னைப் போல எத்­த­னையோ பேருக்கு இல்லை என்று சொல்­லாது ஐஞ்சோ பத்தோ தருவார். அதில என்ர சீவியம் போகுது.

இப்ப நான் என்னை சுகப்­ப­டுத்தி கொஞ்சக் காலம் இருக்க வேண்டும் என்று நினைப்­ப­தற்கு காரணம் என்ர மூத்த மகன் ஷெல் விழுந்து இறப்­பதை நேரே பார்த்த என்ர மரு­மகள் (தற்­போது வயது 29) மன நோயாளி ஆகி விட்டார். அவ­வுக்கு 2 ஆண் பிள்­ளைகள்.

மூத்­த­வ­ருக்கு 10 வயது. கொலசிப் எழுதி விட்டார். அவ­ருக்கும் வயித்­தில காயம்­பட்டு ஒப்­ப­ரேசன் செய்த பிறகு சுகப்­பட்டு விட்­டது. மற்­றவர் வார வருஷம் கொலசிப் எடுக்­கிறார். மரு­ம­களின் தாய் தான் அவர்­களை பார்க்­கிறார். அவ­ருக்கும் வயசு போய்­விட்­டது.

இவை ஒரு புற­மி­ருக்க என்னை என்று பார்க்­கவும் எமது குடும்­பத்தில் எமக்கு அடுத்த தலை­முறை என்று சொல்லிக் கொள்­ளவும் உயி­ரோடு இருப்­பது என்ர பெறா­மகள் தான்.

பாவியார் போற இட­மெல்லாம் பள்­ளமும் திட்­டியும் என்­பது போல் என்ர பெறாமகளும் உடம்பு முழுக்க காயப்­பட்டு சாக கிடந்­த­வளை ஒரு­வாறு காப்­பாற்றி ஒரு வருடம் கழித்து இன்று பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்­டப்­ப­டிப்பை படித்து வரு­கிறாள்.. அவளை நம்பித் தான் நான் இருக்­கிறன்.

அவளின் குடும்­பமும் முற்­றாகப் பாதிக்­கப்­பட்டு விட்­டது. எனவே, அவளும் என்னை நம்பி இருக்­கிறாள். அவ­ளுக்­கா­க­வெண்­டாலும் நான் உயிர்­வாழ எனக்கு யாரா­வது உதவி செய்­யுங்கோ.

அரி­சியை மட்டும் நம்­பியே என்ர காலம் போகுது. மருந்­து­களை ஆஸ்­பத்­தி­ரி­யில இல­வ­சமா எடுத்துக் கொள்­கிறேன். ஆனால் நான் குடிக்கிற மருந்துக்கு ஒருவேளை சாப்பாட்டையாவது சாப்பிட முடியாத பாவியாக இன்று அபலைப் பெண்ணாக வாழ்ந்து வருகிறேன்.”

இது ஒரு யோகேஸ்வரியின் கதை… இப்படி பல யோகேஸ்வரிகள் இருக்கிறார்கள். ஒரு சிலர் தான் முன்வந்து தமது நிலையை பகிரங்கப்படுத்துகிறார்கள். அவ்வாறானவர்கள் எண்ணும் நாட்களையாவது மகிழ்ச்சியாக கழிக்காவிட்டாலும் மனப்பூர்வமாக கழிப்பதற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்???

சிந்துஜா பிரசாத்

 

குமுறல் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்?

 

Exit mobile version