Site icon ilakkiyainfo

புரட்சித் தலைவி அம்மாவின் கடிதம் கிடைத்தது’ புரட்சிகரமான பதில் மக்களவையில் ஒலித்தது!

இந்­தியச் சட்டத் திருத்தம்  120இன்­படி பாரா­ளு­மன்­றத்தில் ஒரு உறுப்­பி­னரால் இந்­தி அல்­லது ஆங்­கில மொழி­களில் போது­மான அளவு பேச முடியாதபோது, அவ­ரது தாய்­மொ­ழியைப் பயன்­ப­டுத்­தலாம் என்று அதில் சொல்­லப்­பட்­டுள்­ளது.

இதன்கீழ் தமி­ழக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பேசு­வ­தை­விட, அதைச் செயல்­பாட்­டுக்குக் கொண்­டு­வ­ரும்­போ­துதான் ஒரு நிறைவு வரும். இந்­திய மக்­க­ள­வையில் முதன்­முறை­யாகத் தமிழில் பதில் சொல்லி ஒரு புரட்­சியை ஏற்­ப­டுத்தி தமி­ழ­கத்தை சந்­தோஷ மழையில் நனைத்­தி­ருக்­கிறார் மத்­திய அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன்.

ஆங்­கிலம் மற்றும்   இந்தி மட்­டுமே பேசப்­படும் பாரா­ளு­மன்­றத்தில் அவ்­வப்­போது தங்கள்   மாநில மொழி­யிலும் பேசு­வார்கள் சில எம்.பி.க்கள். அவர்­களின் பேச்சு, மொழி பெயர்க்­கப்­பட்டு சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ருக்கு காது ஒலிப்பான் வழியே அனுப்பி வைக்­கப்­படும்.

அதன்பின் அவர் தன் பதிலை இந்தி அல்­லது ஆங்­கில மொழியில் சொல்­லுவார்.   இதுதான் இது­வரை இருந்­து­வந்த வழக்கம்.

சபா­நா­யகர் சுமித்ரா மகா­ஜனின் அனு­மதி பெற்று இந்த நடை­மு­றையை முதன்­மு­த­லாக மாற்­றி­யி­ருக்­கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்­திய நிதி மற்றும் வர்த்­த­கத்­துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடந்த வாரம், நலிந்­து­வரும் சிவ­காசி பட்­டாசுத் தொழில் பற்றி மக்­க­ள­வையில் கேள்­வி­யெ­ழுப்­பினார் விரு­து­நகர் அ.தி.மு.க. எம்.பி.யான டி.ராதாகிருஷ்ணன்.

சட்­ட­வி­ரோ­த­மாகக் கடத்தி வந்து இங்கு விற்­கப்­படும் சீனத் தயா­ரிப்­பு­களால் பாரம்­ப­ரி­ய­மான பட்­டாசுத் தொழில் பாதிக்­கப்­ப­டு­கி­றது. இது­பற்றி தமி­ழக முதல்வர் எழு­திய கடி­தத்­துக்கு மத்­திய அரசின் பதில் என்ன? என்று கேட்டார்.

வழக்­க­மாகத் தமிழ் அல்­லது மற்ற   மாநில மொழி­களில் கேட்­கப்­படும் கேள்­வி­க­ளுக்கு  ஆங்­கிலம் அல்­லது இந்­தியில் பதில் சொல்­வ­துதான் மத்­திய அமைச்­சர்­களின் வழக்கம். ஆனால் அதற்கு மாறாகத் தமி­ழி­லேயே பதி­ல­ளித்தார் நிர்­மலா.

புரட்­சித்­த­லைவி அம்மா அவர்­களின் கடிதம் கிடைத்­தது. விரைவில் மத்­திய அரசு தகுந்த நட­வ­டிக்கை எடுக்கும் என்று அவர் தமிழில் சொன்­ன­போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேசையைத் தட்டி மகிழ்ச்சி ஆர­வாரம் செய்­தனர்.

இதற்குப் பல மாநில எம்.பி.க்­களும் மேசையைத் தட்­டி­யதை விட, ராகுல் காந்­தியும் மேசையைத் தட்­டி­யது எல்­லோ­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­தது.

இது­வரை தமி­ழ­கத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவ்­வப்­போது தமிழில் கேள்வி கேட்­பார்கள். ஆனால் சில நாட்­க­ளா­கவே தமி­ழக எம்.பி.க்கள் தொடர்ந்து தமி­ழில்தான் கேள்­வி­களை எழுப்­பினர்.

அதற்­கான  பதிலும் தமிழில் கிடைத்­தி­ருப்­பது வர­வேற்­கப்­பட வேண்டிய ஒன்று என்­ப­தா­கவே பெரும்­பா­லா­ன­வர்­களின் கருத்­தாக உள்­ளது. இணையத்தளங்­க­ளிலும்  இது­பற்றி விவா­திக்­கப்­ப­டு­கி­றது. இதற்­குமுன் யாரும் தமிழில் பேச­வில்­லையா? என்ற கேள்­வியும் முன்வைக்­கப்­ப­டு­கி­றது.

மத்­திய அமைச்­ச­ர­வையில் சிலர் தமிழில் திருக்­கு­றளைச் சொல்லி இருக்­கி­றார்­களே தவிர எம்.பி.க்­களின் கேள்­விக்கு பதில் சொல்­வது வழக்­க­மில்லை. மத்­திய அமைச்சர் தமிழில் பேச­லாமா? என்ற கேள்வி இதற்கு முன்பும் எழுந்­தி­ருக்­கி­றது. கடந்த காங்­கிரஸ் ஆட்­சியில் மத்­திய இர­சா­யன மற்றும் உரத்­துறை அமைச்­ச­ராக இருந்தார் மு.க. அழ­கிரி.

அப்­போது பாரா­ளு­மன்றப் பணி­க­ளின்­போது இந்தி, ஆங்­கிலம் என்று இரண்டு மொழி­க­ளிலும் பதில் சொல்­வ­தில்லை என்று அவர் மீது விமர்­சனம் முன்­வைக்­கப்­பட்­டது.

இதனால் மக்­க­ள­வையில் அவர் தமிழில் பேச அப்­போது சபா­நா­ய­க­ராக இருந்த மீரா­கு­மா­ரிடம் அனு­மதி கேட்­ட­தா­கவும் தகவல் வெளி­வந்­தது.

அது­பற்றி பத்­தி­ரி­கை­யா­ளர்கள் கேட்­ட­போது, அது பரி­சீ­ல­னையில் இருக்­கி­றது என்று மட்டும் சொன்னார் முன்னாள் சபா­நா­யகர் மீரா­குமார். ஆனால் கடந்த ஆட்­சியில் அப்­ப­டி­யொரு சம்­பவம் நடை­பெ­ற­வில்லை.

ஆட்சி மாறிய பின்பு இப்­போது அந்தக் காட்சி நடந்­தே­றி­யி­ருக்­கி­றது. தமிழில் கேட்ட கேள்­விக்குத் தமி­ழி­லேயே பதில் சொல்­லி­யி­ருக்­கிறார் மத்­திய அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன்.

ஆனால் இந்த விவாதம் அச்சில் ஏறும்­போது இந்தி அல்­லது ஆங்­கி­லத்தில் மொழி­பெ­யர்க்­கப்­படும். என்ன இருந்­தாலும் சபா­நா­யகர் சுமித்ரா மகாஜன் அனு­மதி கொடுத்­தது உண்­மையில் பாராட்­டப்­பட வேண்­டி­யது என்­கிறார் மூத்த பத்­தி­ரி­கை­யாளர் ஒருவர்.

இதற்கு முன்­னாலும் பல தலை­வர்கள் பாரா­ளு­மன்­றத்தில் தமிழ் பேசி­யி­ருக்­கி­றார்கள். ஆனால் இந்த வழக்­கமும் 1978க்குப் பிற­குதான் ஆரம்­பித்­தது. பாராளு­மன்­றத்தில் தமிழில் பேசும் வழக்கம் இல்­லா­த­போது அதனை மாற்­றி­யவர் காங்­கிரஸ் கட்­சியைச் சேர்ந்த குமரி அனந்தன்.

இவர் மக்­க­ள­வையில் தொடர்ந்து தமிழில் கேள்வி எழுப்­பி­யதால் அப்­போது மத்­திய அமைச்­ச­ராக இருந்த பாபு ஜக­ஜீ­வன்ராம் தலை­மையில் ஒரு விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட்­டது.

அதன் முடிவில் கும­ரி­ அ­னந்தன் தமிழில் கேள்வி கேட்க அனு­மதி அளிக்­கப்­பட்­டது. அவ­ரது கேள்வி மொழி­பெ­யர்க்­கப்­பட்டு அதற்கு சுர்­ஜித்சிங் பர்­னாலா பதி­ல­ளித்­தி­ருப்­ப­தெல்லாம் பழங்­கதை. இப்­போது அது­போன்று மற்­ற­வர்கள் பின்­பற்றும் உதா­ர­ணத்தை நிகழ்த்­தி­யி­ருக்­கிறார் நிர்­மலா சீதா­ராமன்.

இவ­ரது பூர்­வீகம் தமிழ்­நா­டாக இருந்­தாலும் இவ­ரது குடும்பம் ஆந்­தி­ராவில் வசித்­து­வ­ரு­கி­றது. சமீ­பத்தில் ஆந்­திர மாநி­லத்தின் ராஜ்­ய­சபா எம்.பி.யாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டவர் நிர்­மலா என்பது குறிப் பிடத்தக்கது.

அவரது தமிழ்மொழி பதில் மட்டும் தமிழ்நாட்டுக்குப் போதாது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் அவரது பணி இன்றியமையாதது.

நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக வேண்டும் என்பது உள்ளிட்ட எத்தனையோ கோரிக்கைகள் வெறும் செய்தி களாகவே இருக்கின்றன. இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் புரட்சிகரமான தமிழ்ப் பேச்சு பாராளுமன்றத்தில் ஒரு ஆரம்பத்தைத் தந்திருக்கிறது என்றே தோன்றுகிறது!

Exit mobile version