ilakkiyainfo

தமன்னா நிர்வாண படம்? / /நடிகர் சிவகுமாரின் திருமணத்தில் உள்ள ரகசியங்கள்.

சினிமாவில் ‘மார்பிங்’ தொழில்நுட்பம் முக்கியத்துவம் உள்ளதாக மாறி உள்ளது. ஆனால் அதை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குடும்ப பெண்களை விஷமிகள் மார்பிங்கில் ஆபாசமாக சித்தரித்து இன்டர்நெட்டில் பரவவிடுகின்றனர். இதனால் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடுகிறது.

 தமன்னா படமும் இதுபோல் மார்பிங்கில் ஆபாசமாக மாற்றி வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமன்னா கூறியதாவது:–

 thamannaமார்பிங்கில் நிறைய பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றி வெளியிடுகின்றனர். இதனால் அந்த பெண்கள் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘மார்பிங்’ படங்களை வைத்து பெண்களை வக்கிர புத்தியுள்ள ஆண்கள் பிளாக்மெயிலும் செய்கின்றனர்.

 எனது படத்தையும் இதுபோல் வெளியிட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். என் ஒரிஜினல் படத்தில் இருந்து எனது தலையை மட்டும் வெட்டி எடுத்து நிர்வாண பெண்ணின் உடம்போடு மார்பிங் மூலம் இணைத்து வெளியிட்டுள்ளனர்.

 நான் இதற்கு எதிராக புகார் செய்யப்போனால் பிரச்சினை பெரிதாகிவிடும். அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக இது போன்ற அநாகரீக செயல்களை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த குற்றங்களை செய்யும் புல்லுருவிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

 இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கும் அக்கா, தங்கை உள்ளனர். அவர்களுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு தமன்னா கூறினார்.

விபூதி அணிந்த நாத்தீக கமல் – நீடிக்கும் மர்மம்

கமலஹாசன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பகுத்தறிவு கருத்துக்களிலும் நாத்திக சிந்தனைகளிலும் ஈடுபாடு உள்ளவர். கோவில்களுக்கு போய் சாமி கும்பிட்டது இல்லை, பொது நிகழ்ச்சிகளில் நாத்திகம் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படிப்பட்ட கமல் இந்து மடாதிபதி ஒருவரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடித்து ஹிட்டான ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் கமல், கவுதமி, நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது.

நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார். அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்.

அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். நாத்திகவாதியான கமல் மடாதிபதியை சந்தித்தது பற்றி நாங்குநேரி முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது. கமல் ஆன்மீகத்துக்கு மாறிவிட்டாரோ? என்று பலர் கேள்வி எழுப்பினர்.

கமல் சந்தித்தது குறித்து வானமாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட்டபோது ‘கமல் நடிக்கும் படத்தின் ஆன்மீக காட்சியொன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் எடுக்கின்றனர். அந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தம் என்னை சந்தித்தார். ஐந்து நிமிடம் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. ஆன்மீகம் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை’ என்றார்.

உங்கள் சந்திப்புக்கு பிறகு கமல் ஆன்மீகத்துக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது கமலின் முகத்தோற்றமும் அதில் குடிகொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும்  என்றார்.

நடிகர் சிவகுமாரின் திருமணத்தில் உள்ள ரகசியங்கள்..
02-09-2014

சிவகுமாருக்கு உறவினர்கள் பெண் பார்க்கப்போனபோது எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்தன. திரைப்பட உலகில் ‘பிசி’யாக இருந்ததால், சிவகுமார் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. உடன் நடிக்கும் யாராவது தன்னை விரும்புவது போல் உணர்ந்தால், “காதலுக்கு என் மனதில் இடம் இல்லை.

என் தாயார் சொல்லும் பெண்ணைத்தான் மணப்பேன்” என்று தெளிவாகக் கூறிவிடுவார். 1973-ல் சிவகுமார் ஹீரோவாக நடித்த “பொண்ணுக்குத் தங்க மனசு” என்ற படம் வெற்றி பெற்றது. `இனி தனியாக நாம் ஹீரோவாக நடித்து வெற்றி பெறமுடியும்’ என்ற நம்பிக்கை சிவகுமாருக்கு உண்டாயிற்று. எனவே, பெண் பார்க்கும்படி தன் தாயாரிடம் சொன்னார்.

சிவகுமாரின் ஒன்றுவிட்ட சகோதரர் குமரேசன், ஆசிரியர் குமாரசாமி ஆகியோர், சிவகுமாருக்கு தகுந்த பெண்ணைப் பார்க்கும் பொறுப்பை ஏற்றார்கள். திருமணத்துக்கு முன்னதாக பெண்ணைப் போய்ப் பார்ப்பதில்லை என்று சிவகுமார் தீர்மானித்திருந்தார்.

பெண்ணைப் பார்த்து, இருவருக்கும் பிடித்துப் போய், பிறகு ஜாதகப் பொருத்தம் இல்லை என்றோ, சினிமா நடிகருக்கு பெண் தர விருப்பம் இல்லை என்றோ பெண் வீட்டார் முடிவு செய்தால், பெண் மனதில் வீணாக ஏமாற்றம் ஏற்படுமே என்பதால் சிவகுமார் இவ்வாறு முடிவு எடுத்திருந்தார். கோவையில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டு, குமாரசாமியும், குமரேசனும் சென்றார்கள்.

பெண்ணின் போட்டோக்களை எல்லாம் பார்த்தார்கள். திருப்தியாக இருந்தது. காபி வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் பெண்ணின் அண்ணன் வந்தான். ஒரு பத்திரிகையை எடுத்துப் புரட்டினான். ஒரு பக்கத்தில் வெளியாகியிருந்த படத்தைக்காட்டி, “இவர்தானே மாப்பிள்ளை?” என்று அதட்டலாகக் கேட்டான்.

அந்தப்பக்கத்தில், “பெண்ணை நம்புங்கள்” படத்தில் சிவகுமாரும், ஜெயசித்ராவும் காதல் காட்சியில் நடிக்கும் படம் பிரசுரமாகி இருந்தது! பெண் வீட்டாரின் மன நிலையைப் புரிந்து கொண்ட குமாரசாமியும், குமரேசனும் காபியைக் கூட குடிக்காமல் கீழே வைத்து விட்டு, அங்கிருந்து வெளியேறினார்கள். திருப்பூரில் பெண் பார்க்க அவர்கள் சென்றபோது, வேறு மாதிரியான அனுபவத்தைப் பெற்றார்கள்.

மாப்பிள்ளை சினிமா நடிகர் என்பதை அறிந்த பெண்ணின் தந்தை கூறினார்: “மாப்பிள்ளை சினிமாவிலே இருப்பதால், உடன் நடித்த நடிகைகளுடன் `அப்படியும் இப்படியுமாக’ இருந்திருக்கலாம். அது போகட்டும். ஆனால் இனிமேல் அவர் நடிக்கக்கூடாது. எங்களுக்கு கொஞ்சம் வயக்காடு இருக்கு. மாப்பிள்ளை அதைப் பார்த்துக்கட்டும்.

அப்படி சினிமாவிலே ஆசை இருந்தா, நம்மளுக்கு ஒரு தியேட்டர் இருக்கு. அதன் நிர்வாகத்தை வேண்டுமானாலும் கவனித்துக் கொள்ளட்டும். ஆனால், நடிக்கிற பேச்செல்லாம் உதவாது.” இப்படி ஒரு வெடிகுண்டை தூக்கிப்போடுவார் என்று எதிர்பார்க்காத குமாரசாமியும், குமரேசனும் பெண் வீட்டாருக்கு “வணக்கம்” போட்டுவிட்டு, ஊரைப் பார்க்க கிளம்பினார்கள்.

இதற்கிடையே, சிவாஜிகணேசனும் சிவகுமாருக்குப் பெண் பார்த்தார். சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மையாரின் படத்தை சிவகுமார் வரைந்து, சிவாஜியிடம் கொண்டுபோய் கொடுத்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த சிவாஜி, “கவுண்டரே! உன் கையில் வித்தை இருக்கு. சினிமா இல்லாவிட்டாலும் இதை வைத்துப் பிழைத்துக் கொள்வாய்” என்றார்.

அதைத்தொடர்ந்து, ஒரு சமஸ்தான மன்னரின் பெயரைக் குறிப்பிட்டு, “அவர் என் நண்பர். அவர் வகையில் ஒரு பெண் இருக்கு. கட்டிக்கிறீயா?” என்று சிவகுமாரிடம் கேட்டார். பதில் சொல்லாமல் சிவகுமார் மவுனமாக இருந்தார். “ஏலே! நான் கேட்பதற்கு பதில் சொல்லு.

அந்த ராஜா என் நண்பர். நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லச் சொன்னார். உடனே உன் நினைவுதான் வந்தது. ஒண்ணு `சரி’ன்னு சொல்லு. இல்லை, வேண்டாம்னு சொல்லு!” என்று வற்புறுத்தினார்,

சிவாஜி. “அண்ணே! அந்த அரண்மனையில் இருக்கிற டவாலிகள் போதாதா? இன்னொரு டவாலி வேணுமா!” என்ற சிவகுமார், “நமக்கு பெரிய இடத்துப் பெண்ணுங்க எல்லாம் சரிப்படாது. அம்மா பார்த்து சரி என்று சொல்கிற பெண்ணுக்குத்தான் தாலி கட்டுவேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

“சரி. உன் விருப்பப்படியே செய்” என்று கூறிவிட்டார், சிவாஜி. இந்த சமயத்தில் நடிகை பானுமதி, “இப்படியும் ஒரு பெண்” என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் சிவகுமார்தான் `ஹீரோ’. கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், பாடும் ஆற்றல்… இப்படி பல திறமைகள் கொண்ட பானுமதி, ஜாதகம் பார்ப்பதிலும் வல்லவர். அவர் சிவகுமாரின் ஜாதகத்தைப் பார்த்தார். “உனக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் திருமணம் நடக்கும்.

அப்படி நடக்காமல் போனால், பிறகு எப்போதுமே நடக்காது. நீ நித்திய பிரம்மச்சாரிதான்!” என்று `பளிச்’சென்று கூறினார். சிவகுமார் அசந்து போனார். இந்த சமயத்தில் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்து வந்த “வெள்ளிக்கிழமை விரதம்” படத்தில் சிவகுமார் நடித்து வந்தார். படம் முடியும்வரை, தேவரிடம் அட்வான்ஸ் பணத்தைக்கூட சிவகுமார் வாங்கவில்லை.

“யாராவது எனக்கு பெண் கொடுக்க முன்வந்தால், தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து நீங்கள் திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும்” என்று தேவரிடம் கேட்டுக்கொண்டார். அதுமுதல், படப்பிடிப்பு சமயத்தில் சிவகுமாரைப் பார்க்கும்போதெல்லாம், “என்ன சிவா! பொண்ணு ஏதாவது தட்டுப்பட்டதா?” என்று தேவர் கேட்டு வந்தார்.

“சிவகுமாருக்கு எப்போது திருமணம்?” என்று எல்லோரும் ஆவலோடு காத்திருந்தனர். “பெண் பார்த்து முடிவாகிவிட்டது” என்று சிவகுமாருக்கு குமாரசாமியும், குமரேசனும் தகவல் அனுப்பினார்கள்.

Exit mobile version