Site icon ilakkiyainfo

பெற்ற குழந்தையை கற்பாறையில் அடித்துக்கொன்ற கல்மனம் கொண்ட தந்தை!!

நாட்டில் குழந்­தைகள், பெண்கள் மீதான துஷ் பி­ர­யோ­கங்­களும் அடக்­கு­மு­றை­களும் நாளுக்கு நாள் கட்­டுக்­க­டங்­காமல் எல்­லை­மீ­றிச்­செல்­லும் ­போக்­கையே அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இதில் இளைஞர், யுவ­திகள் மத்­தியில் பிர­பல்யம் பெற்று விளங்கும் சமூக வலைத்­த­ள­மான பேஸ்­புக்­கிற்கும் கணி­ச­மான பங்கு உரித்­தா­கி­வ­ரு­வதை நோக்­கலாம். இதன் தவ­றான உப­யோ­கத்­தினால் பாட­சாலை செல்லும் சிறு­மிகள் சிலர் அநி­யா­ய­மாக தற்­கொலை செய்­து­கொண்­ட­மையை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

அதேபோல், இரண்டு மாதங்­க­ளுக்கு முன் கல­வான பகு­தி­யிலும் கூட யுவ­தி­யொ­ரு­வரின் நிர்­வா­ணப்­ப­ட­மொன்றை வெளி­யி­டப்­போ­வ­தாக மிரட்டல் விடுத்த இளை­ஞ­னொ­ரு­வனை பொலிஸார் கைது­செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இவற்றைத் தடுக்க பொலிஸார் மிகுந்த சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து ­வ­ரு­கின்­ற­மையை நினை­வு­கூ­ர­வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தா­கின்­றது.

அந்­த­வ­கையில் கடந்த இரு­வார காலப்­ப­கு­தியில் இரு பெண் குழந்­தை­களும் ஓர் இளம் யுவ­தியும் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கும் படு­கொ­லை­க­ளுக்கும் ஆளா­கி­யுள்­ள­மையை அவ­தா­னிக்­கத்­தக்­க­தா­க­வுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பேரு­வளை அளுத்­க­மையில் குடும்­பத்­த­க­ராறின் கார­ண­மாக ஒரு வயதும் ஒன்­பது மாதங்­க­ளு­மே­யான பெண் குழந்­தை­யொன்று தனது தந்­தையின் வெறித்­த­ன­மான செயலின் கார­ண­மாக பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தது.

அக்­கு­ழந்­தையை அதன் தாய் வந்து கூட்­டிப்­போக மறுத்­த­மையால் கற்­பா­றையில் அடித்­துக் ­கொன்­றுள்­ள­தாக பொலி­ஸாரால் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதற்கு முன்னர் கடந்த 13 ஆம் திகதி 13 வய­தான சிறு­மி­யொ­ரு­வரால் 6 வய­தான தங்கை ஒன்­பது இடங்­களில் கத்­திக்­குத்­துக்­கி­லக்­காகி மர­ணத்தை தழு­வி­ய­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

எனவே இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள், இவற்­றுக்கு கார­ண­மா­ன­வர்கள் என கண்­ட­றி­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்­கெ­தி­ராக நீதி­மன்­றங்­களும் காவல்­து­றை­யி­னரும் சட்ட ரீதி­யாக தக்க தண்­டனை வழங்­கு­வ­தற்­காக பெரும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொள்­வ­தையும் அவ­தா­னிக்­கக்­ கூ­டி­ய­தா­க­வுள்­ளது..

அந்­த­வ­கையில் குடும்­பத்­த­க­ராறு ஒன் றின் விளை­வாக ஒரு வயதும் ஆறு­மா­த­மு­மான குழந்­தையின் உயிர் காவு­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அச்­சம்­ப­வமே இம்­முறை பதி­வா­கின்­றது.

ஆம். கடந்த திங்­கட்­கி­ழமை பேரு­வளை, புபு­ல­வத்த பிர­தே­சத்­தி­லுள்ள விகா­ரை­யொன்றின் அரு­கா­மையில் பச்­சிளம் குழந்­தையை ஆண் ஒருவர் அங்­கி­ருந்த கற்­பா­றையில் மிகவும் முரட்­டுத்­த­ன­மாக தூக்கி அடிப்­பதை 14 வய­தான சிறு­மி­யொ­ருவர் கண்­ணுற்­றுள்ளார்.

அன்று பகல் ஒரு மணி­ய­ள­வி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இதனைப் பார்த்த மாத்­தி­ரத்தில் அச்­சிறுமி கை, கால்கள் நடு நடுங்க உட­லெங்கும் வியர்த்­துக்­கொட்ட திகைத்­துப்போய் அங்­கி­ருந்து பொலிஸ்­ நி­லை­யத்­திற்கு ஓட்டம் பிடித்­துள்ளார்.

அங்கே சென்ற மாத்­தி­ரத்தில் அச்­சி­றுமி உட­ன­டி­யாக பொலிஸ் ­நி­லை­யத்­துக்குச் செல்­ல­வில்லை. அச்­சி­று­மிக்கு உட­ன­டி­யாக அத்­துணை தைரி­யமும் தெம்பும் பிறக்­க­வில்லை. சிறி­து­நேரம் அங்­கு­மிங்கும் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறையில் அலைந்­து­தி­ரிந்­துள்ளார்.

இதனைக் கண்­ணுற்ற பொலிஸார் அச்­சி­று­மியைப் பிடித்து விசா­ரித்­துள்­ளனர். சற்று திக்­கு­முக்­கா­டிப்­போன அச்­சி­றுமி அந்த சம்­ப­வத்தைப் பார்த்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீண்­டெழ சிறிது நேரம் சென்­றுள்­ளது. அதன் பிறகு சுய­நி­லைக்குத் திரும்­பிய அச்­சி­றுமி, தான் காண நேரிட்ட கொடூ­ரத்தை விலா­வா­ரி­யாக பொலி­ஸா­ரிடம் கூறி­யுள்ளார்.

அதனை பொலிஸார் அச்­சி­று­மியின் முறைப்­பா­டாக ஏற்­றுப் ­ப­தி­வு­ செய்­துள்­ளனர். இக்­காட்­சியை சம்பவ இடத்­தி­லி­ருந்து பார்த்த வயோ­திப பெண்­ணொ­ரு­வரும் அதிர்ச்­சியில் உறைந்து போயுள்ளார்.

இப்­பெண்ணின் அலறல் அங்கு பர­ப­ரப்­பாக இயங்கிக் கொண்­டி­ருந்த பிர­தே­ச­வா­சி­களை சென்­ற­டைந்­துள்­ளது. அந்த சற்­று­ நே­ரத்­திற்­குள் அங்கு கூடிய பிர­தே­ச­வா­சிகள் அந்­ந­பரை அடித்து துவம்சம் செய்­துள்­ளனர்.

அது மட்­டு­மல்­லாமல், அந்தக் கொடூ­ரனின் வெறி­யு­ணர்ச்­சிக்கு ஆட்­பட்டு குற்­று­யி­ராக சாவுக்கும் வாழ்­வுக்­கு­மான போராட்­டத்தில் துடி­து­டித்துக் கொண்­டி­ருந்த அப்­பச்­சி­ளங்­கு­ழந்­தையை களுத்­துறை நாகொடை வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­தித்­துள்­ளனர்.

அங்கு அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலையில், குழந்­தையின் உயிர் சற்­று­நே­ரத்­திற்குள் பிரிந்­துள்­ளது. சந்­தே­க­நபர் பிர­தே­ச­வா­சி­களின் பிடியில் இருந்து பல பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டு தப்­பிக்க எத்­த­னித்த பொழு­திலும், அவ­னது முயற்­சிகள் வீண்­போ­யின. தக­வ­ல­றிந்த பொலிஸார் அங்கு வந்து சந்­தேக நபரை கைது­ செய்­துள்­ளனர்.

அக்­கு­ழந்­தையை அந்­நபர் ஏன் கற்­பா­றையில் கொடூ­ர­மாக தூக்கி அடித்­துக்­கொலை செய்ய வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழு­வது எமக்குப் புரி­கி­றது. அது­மட்­டு­மல்ல, அந்த நப­ருக்கும் அக்­குழந்தைக்குமிடையிலான தொடர்பு என்ன? என்ற வினாவும் அடி­ம­னதில் இருக்­கவே செய்யும்.

இச்­சம்­ப­வத்தில் பலி­யா­ன­தாக பொலி­ஸாரால் தெரி­விக்­கப்­படும் அக்­கு­ழந்தை வேறு­யா­ரு­டை­ய­து­மல்ல.

இவரே அக்­கு­ழந்­தையின் தந்­தை­யாவார். அக்­காட்­சி­யைப்­பார்த்து அல­றிய வயோ­திபப் பெண்­மணி சம்­ப­வத்தில் கொலை­யுண்ட குழந்­தையின் பாட்­டி­யாவார். இச் ­சம்­ப­வத்தை நேரில் கண்ட சாட்­சி­யான அந்த 14 வயது சிறுமி அப்­பி­ர­தே­சத்தில் வசித்து வரு­ப­வ­ராவார்.

இச்­சம்­ப­வத்தில் பலி­யான குழந்­தை யின் பெற்றோர் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் பயா­க­லையில் சந்­தித்­துள்­ளனர். அந்த சந்­திப்பு இவர்கள் இரு­வ­ரையும் திரு­மண பந்­தத்தில் இணைத்­துள்­ளது.

அதன்­பி­றகு ஒரு­வாறு பல்­வேறு தடை கள், இடை­யூ­றுகள் என்­ப­ன­வற்­றுக்கு மத்­தியில் அந்­நபர் சம்­ப­வத்தில் பலி­யான குழந்­தையின் தாயை கரம்­பி­டித்­துள்ளார். ஆரம்­பத்தில்  இவ்­வி­ரு­வரும்  மகி­ழ்ச்­சி­க­ர­மான  இல்­வாழ்க்­கையை நடத்­தி­யுள்­ளனர்.

ஆனால், இவர்­க­ளது குடும்ப வாழ்வின் இன்­பத்தை புரட்டித் தலை­கீ­ழாக கவிழ்த்த சூறா­வ­ளியும் அவ்­வப்­போது வீசத்­ த­வ­ற­வில்லை. அவ்­வப்­போது இரு­வ­ருக்­கி­டையில் எழும் கருத்து முரண்­பா­டு­களும் வாய்த் தக­ரா­று­களும் கைக­லப்பு வரை சென்று நாள­டைவில் இரு­வ­ரையும் இரு துரு­வங்­க­ளாக மாற்­றி­ன.

இதன் விளை­வாக, அந்­ந­பரின் மனைவி அவ­ளது தாய்­ வீட்­டிற்குச் சென்­றுள்ளார். இந்­நபர் அங்கு மிங்கும் கிடைக்கும் கூலி வேலை­களைச் செய்து பிழைப்பு நடத்­தி­ வந்­துள்ளார். மூன்­று­மா­தத்­துக்கு முன்­னர்தான் இரு­வ­ரது உற­விலும் விரிசல் ஏற்­பட்டு பிரிந்­துள்­ளனர்.

ஆனாலும் இவர் சட்ட பூர்­வ­மாக விவா­க­ரத்து பெற­வில்­லை­யென பொலிஸ் பரி­சோ­தகர் துமிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். இதன்படி இரு­வரும் தமது குழந்­தையை வாரத்தில் ஒரு தடவை புபு­ல­வத்­தை­யி­லுள்ள விகா­ரையில் வைத்து பரி­மாறிக்­கொள்­வ­தாக தங்­க­ளுக்­குள்ளே ஒரு உடன்­ப­டிக்­கைக்கு வந்­துள்­ளனர்.

ஏனெனில், சம்­ப­வத்தில் பலி­யான குழந்­தையின் தாய் தனது கண­வரின் வீட்­டிற்குச் செல்ல விரும்­ப­வில்லை. ஆதலால் அவ­ரது வீட்­டிற்குச் செல்லும் வழி­யி­லுள்ள அந்த விகா­ரையில் வைத்து அக்­கு­ழந்தையை தனது கண­வ­னிடம் ஒப்­ப­டைத்­து­விட்­டுச்­செல்ல தீர்­மா­னித்­துள்ளார்.

அதன்­படி ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் காலையில் புபு­ல­வத்­தையில் அவ்­வி­காரை அமைந்­துள்ள இடத்­துக்கு வரும் அக்­கு­ழந்­தையின் தாய் அதனை தனது கண­வ­னிடம் ஒப்­ப­டைத்து விட்­டுச்­செல்­வதை வாடிக்­கை­யாகக் கொண்­டுள்ளார்.

இது கடந்த மூன்று மாத­கா­ல­மாக நடை­பெற்­று­வந்­துள்­ளது. இதன்­போது காலை­யி­லேயே குழந்­தையை வந்து பெற்­றுச்­செல்லும் அந்­நபர் மாலையில் அக்­கு­ழந்­தையை அதன் தாயிடம் அதா­வது தனது மனை­வி­யிடம் திருப்பி ஒப்­ப­டைத்து வரு­வதை வழக்­கப்­ப­டுத்­திக் ­கொண்­டுள்ளார்.

இவ்­வா­றி­ருக்­கையில் கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அக்­கு­ழந்­ தையை அதன் தகப்­ப­னிடம் ஒப்­ப­டைக் கும் நாளாகும். அன்­றைய தினம் வழ­மை­போல காலையில் குழந்­தையை சுமந்து குறித்த விகாரை அமைந்­துள்ள பகு­திக்கு வந்­துள்ளார்.

அச்­ச­மயம் அங்கு வந்­தி­ருந்த அக்­கு­ழந்­தையின் தகப்பன் குழந்­தையை பெற்­றுக் ­கொண்டு தனது வீட்­டுக்குச் சென்­றுள்ளார். அங்கே சென்­றதும் அக்­கு­ழந்­தை­யிடம் அதன் பாட்­டியும் இந்­ந­பரும் கொஞ்சி விளை­யா­டி­யுள்­ளனர். அதன் பிறகு குழந்­தையின் இயல்பில் சற்று மாறுதல் ஏற்­பட ஆரம்­பித்­துள்­ளது.

குழந்தை அழ ஆரம்பித்­துள்­ளது. சிறிது நேரத்­திற்­கெல்லாம் குழந்தை வாந்­தி­யெ­டுத்­துள்­ளது. இதனைக் கண்டு நிலை தடு­மா­றிய அந்­ந­பரும் அவ­ரது தாயும் இயன்­ற­வரை குழந்­தையை இயல்பு நிலைக்குக் கொண்­டு­வர முயற்­சி­களை மேற்­கொண்­டாலும் அவை பல­ன­ளிக்­க­வில்லை.

அத­னை­ய­டுத்து, குழந்­தையை அதன் தாயி­டமே கொண்­டு­சென்று கொடுத்­து­வி­டு­மாறு அந்­ந­பரின் தாய் கூறி­யுள் ளார். அதன் பிறகு இந்­ந­பரும் அக்­கு­ழந்­தையை அவ­சர அவ­ச­ர­மாக. அதன் தாயிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­காகக் கொண்டு சென்­றுள்ளார்.

செல்லும் வழியில் தனது மனை­விக்கு குழந்­தையை எடுத்துச் செல்­லு­மாறு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்திக் கூறி­யுள்ளார்.

அதற்கு அவர் தனக்கு வர ­மு­டி­யா­துள்­ள­தெனக் கூறி­யுள்ளார். இதனால் இரு­வ­ரி­டையே பரஸ்­பர கருத்து மோதல்கள் ஏற்­பட்­டுள்­ளன. குழந்­தையை எடுத்­துச்­செல்ல தன்னால் வர ­மு­டி­யா­தெ­னவும்   தனது அம்மா அங்கே வந்து குழந்­தையை எடுத்துச் செல்வார் என்றும் கூறி­யுள்ளார்.

இத­னைக்­கேட்டு ஆத்­தி­ரத்­தி­னாலும் எரிச்­ச­லாலும் தனது கையில் இருப்­பது பச்­சிளம் குழந்­தை­யென்றும் பாராமல் அதனை அங்­கி­ருந்த கற்­பா­றையில் அடித்­துள்ளார்.

இக்­காட்­சியை நேரில் கண்­டதால் அதிர்ச்­சியில் உறைந்து போன அக்­கு­ழந்­தையின் பாட்டி வாய்­விட்டு அல­றி­யுள்ளார். அந்த வழியால் சென்­று­கொண்­டி­ருந்த சிறுமி இக்­காட்­சியை நேரில் கண்­டுள்ளார். இது அச்­சி­று­மியை அதிர்ச்­சி­ய­டைய செய்­துள்­ளது.

அங்­கி­ருந்து விறு­வி­று­வென ஓடி அரு­கா­மை­யி­லுள்ள பொலிஸ்­நி­லை­யத்தை அடைந்­துள்ளார். இசம்­ப­வத்தில் கைது­செய்­யப்­பட்ட சந்­தே­க­நபர் பேரு­வளை புபு­ல­வத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்ட 29 வய­து­டை­ய­வ­ராவார். இந்­ந­பரின் மனைவி பயா­க­லையைச் சேர்ந்­த­வ­ராவார்.

இந்­நபர் பொலி­ஸா­ருக்கு அளித்த வாக்கு மூலத்தில், நானும் எனது மனை­வியும் எமக்­கி­டை­யி­லான கருத்து வேறு­பாட்­டினால் பிரிந்­துள்ளோம். அதன்­படி எனது மனைவி அவ­ளது தாயின் வீட்டில் மூன்­று­மா­த­கா­ல­மாக வசித்து வரு­கிறாள்.

குழந்­தையின் மீது தகப்பன் என்ற முறையில் எனக்கு உரி­மை­யி­ருப்­பதால் ஒவ்­வொரு வார இறு­தி­யிலும் ஞாயிற்­றுக்­கி­ழ­மையில் குழந்­தையை சில ­ம­ணித்­தி­யா­லங்கள் வீட்­டுக்கு எடுத்­துச்­சென்று பார்­வை­யி­டு­வ­தென்று உடன்­பா­டொன்­றுக்கு வந்தோம்.

அதற்­க­மை­யவே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் அக்­கு­ழந்­தையை பார்­வை­யி­டு­வ­தற்­காக அதனை எனது வீட்­டுக்கு எடுத்­துச்­சென்றேன். அங்கே நன்­றாக விளை­யாடிக் கொண்­டி­ருந்த குழந்தை சிறிது நேரத்தில் வாந்­தி­யெ­டுத்­தது.

அதனால் எனது மனை­வியை தொலை­பே­சி­வா­யி­லாக தொடர்­பு­கொண்டு குழந் ­தையை எடுத்­துச் ­செல்­லு­மாறு கூறி னேன். ஆனால் அவளோ அதனை தன் தாய் வந்­து­பெற்றுச் செல்வாள் என்று கூறினாள்.

இதனால் எனக்கு ஆத்­திரம் வந்­தது. அதனால் அச்­ச­ம­யத்தில் என் சுய­நி­னை­வையே இழந்து இச்­செ­ய­லை­செய்­து­விட்டேன் என்று கூறி­யுள்ளார்.

சந்­தே­ந­க­நபர் பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை பேரு­வளை பொலிஸ்­நி­லையப் பொறுப்­ப­தி­காரி துமிந்த ராஜபக் ஷ, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரணவீர மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜயந்த ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

-கே.நிரோஷ்குமார்-

Exit mobile version