எம்.ஜி.ஆரை போற்றி வணங்கும் வினோத கிராமம்! ஆண்டு தோறும் பாத யாத்திரை சென்று திருவிழா நடத்தும் பக்தர்கள். எம்.ஜி.ஆரை போற்றி வணங்குவதால் பிரச்சனைகள் விலகுவதாக தகவல் .
விலை உயர்ந்த காரில் பசு மாட்டைத் திணித்துக் கடத்திய இரு திருடர்கள்! (video)
திருடர்களில் பல விதம் உள்ளனர். இந்த திருடர்கள் அதில் ஒரு விதம். ஒரு விலை உயர்ந்த காரில் வித்தியாசமான முறையில் வந்த இரு திருடர்களும், ஒரு பசு மாட்டை காரின் பின் பகுதியில் திணித்துக் கடத்தியுள்ளனர். இது சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சென்னையில்தான் அதுவும் அடையாரில் இந்த பசு மாடு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் கார் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள, இன்னொருவர் அப்படியே மெதுவாக மாட்டின் பின்பக்கமாக வந்து, பின்பக்கத்தை அழுத்தி காருக்குள் திணித்து கதவை கஷ்டப்பட்டு மூடுகிறார். பின்னர் காரில் குறித்த மாட்டை ஏற்றிச் செல்லுகின்றனர்.