ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»தொடர் கட்டுரைகள்»”தேசிய வீரன் பண்­டாரம் வன்னியனாருக்கு சிலை” சிலை (ஒரு ஆய்வு கட்டுரை) -அருணா செல்லத்துரை
    தொடர் கட்டுரைகள்

    ”தேசிய வீரன் பண்­டாரம் வன்னியனாருக்கு சிலை” சிலை (ஒரு ஆய்வு கட்டுரை) -அருணா செல்லத்துரை

    AdminBy AdminSeptember 6, 2014Updated:September 9, 2014No Comments10 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    2014 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்­பாணம் மாந­கர சபை­யினர் ”தேசிய வீரன் பண்­டாரம் வன்­னி­ய­னா­ருக்கு” சிலை அமைத்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.

    இதனால் தற்­போது மக்கள் மத்­தியில் பண்­டாரம் வன்­னி­ய­னாரைப் பற்­றிய உண்­மை­யான வர­லா­று­களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதி­க­ரித்து வரு­கி­றது. வட­புல வர­லாற்றில் ”பண்­டாரம் வன்­னி­யனார்” பற்றி ஒரு விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தற்கு இதனை ஒரு அடை­யா­ள­மா­கவும் கொள்­ளலாம்.

    தேசிய வீரன் ”பண்­டாரம் வன்­னி­ய­னா­ரு­டைய” வர­லாற்றை   ஆரம்­பிப்­ப­தற்கு முன்னர் அவரைக் காட்டிக் கொடுத்த­தாகக்  கூறப்­படும் காக்கை வன்னியனார்­பற்றி  1912 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் வர­லா­று­களில்    உள்­ளதை கடந்த வாரம்  குறிப்­பிட்­டி­ருந்தேன்.

    அதற்கு 33 வரு­டங்­க­ளுக்கு முன்னர் 1879 ஆம் ஆண்டு சி.பி­றிற்றோவினால் வெளி­யி­டப்­பட்ட யாழ்ப்­பாண வைபவ­மாலை ஆங்­கில மொழி­பெ­யர்ப்பில் உள்ள குறிப்­புகள் இந்த வாரம் தரப்­ப­டு­கின்­றன.

    ஏட்டுப் பிர­தி­களில் இருந்த ”யாழ்ப்­பாண வைப­வ­மா­லையை’‘ சி.பிறிற்றோ என்­பவர் ஆங்­கி­லத்தில் மொழி பெயர்த்து 1879 ஜூலை மாதத்தில் நூல் வடிவில் வெளி­யிட்­டி­ருந்தார்.

    பிற்­கா­லத்தில் ”யாழ்ப்­பாண வைப­வ­மா­லையின்” உண்மைப் பிர­திகள் (ஏடுகள்) கிடைக்­காத கார­ணத்­தினால் சி.பிறிற்றோ ஆங்­கி­லத்தில் மொழி­பெயர்த்திருந்த பிர­தியின் பிர­திமைப் படி­வத்­தையும், மலே­சியா போன்ற நாடு­களில் இருந்து பெற்ற வர­லாற்றுக் குறிப்­பு­க­ளையும் வைத்து யாழ்ப்­பாண வைப­வ­மா­லையின் தமிழ் வடி­வங்கள் வெளி­யி­டப்­பட்­டன என்று குல­ச­பா­நாத முத­லியார் தெரி­வித்­துள்ளார்.

    இதனால் யாழ்ப்­பாண வைப­வமா­லையின் தற்­போ­தைய தொன்மை வடி­வத்­திற்கு சி.பிறிற்றோவின் ஆங்­கில மொழி­பெ­யர்ப்பும் முக்­கிய ஆவ­ண­மாகத் திகழ்ந்­துள்­ள­தென்று கூறலாம் (ஆய்­வுக்­கு­ரி­யது).

    சி. பிறிற்றோ ஆங்­கி­லத்தில் மொழி­பெ­யர்த்த ”யாழ்ப்­பாண வைப­வ­மாலை” நூலிலும் ”காக்கை வன்­னியன்’‘ வர­லாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

    சங்­கிலி வர­லாற்றில் எந்­த­வித   நம்­ப­கத்­தன்­மை­யில்­லை­யெனக் கொண்­டாலும் ”காக்கை வன்­னியன்’‘ என்ற கதா­பாத்­தி­ரத்தின் வர­லாறு தொன்மை வாய்ந்­தது என்­ப­தற்கு பிறிற்றோவின் மொழி­பெ­யர்ப்பு சான்று பக­ரு­கின்­றது.

    யாழ்ப்­பாண சரித்­திர மாற்­றமும் இடைச் செரு­கலும் பற்றி 1933ஆம் ஆண்டு செ.இரா­ச­நா­யகம் முத­லியார் எழு­திய யாழ்ப்­பாணச் சரித்­தி­ரத்தில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டுள்ளார்:

    ”ஒல்­லாந்தர் காலத்­தி­லேயே மயில்­வா­கனப் புலவர் தம் வைப­வ­மா­லையை எழு­தி­னா­ரா­னாலும், அந்நாள் ஒல்­லாந்தர்   கால­மு­டி­வையும் பின்­வரும் ஆங்கி­லேயர் காலக் கணக்­கையும் தம் மனோ­பாவ­னையால் எழு­தி­யி­ருக்­க­மாட்­டா­ரா­னாலும், மேற் கண்ட வெண்­பாவின் (திரு­கோ­ண­மலை கோவிற் பிர­காரக் கல்­வெட்டு) ஈற்­ற­டி­யி­லுள்ள  குறிப்­புகள்,  ”வெள்­ளி­யம்­பலத் தம்­பிரான்” செய்த திரு­வி­ளை­யாடல் போல், ஏடெ­ழு­தி­ய­வர்­க­ளிடைச் செரு­க­லாக விருக்­க­லா­மென்­பது துணியக் கிடக்­கின்­றது” என்று எழு­தி­யுள்ளார். (பக்கம் – 82).

    ”யாழ்ப்­பாண வைப­வ­மாலை (ஆங்­கிலம்) – சி.பிறிற்றோ – 1879

    ஆங்­கி­லத்தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்ட ”யாழ்ப்­பாண வைப­வ­மாலை” நூலில் சி.பிறிற்றோவின் முன்­னு­ரை­யிலே எழு­தி­யதை, நேரடி மொழி­பெ­யர்ப்­பில்­லாமல் வர­லாற்­றிற்­காக பின் வரு­மாறு குறிப்­பிட்­டுள்ளேன்.

    *1736 ஆம் ஆண்டு அதி­கா­ரத்­தி­லி­ருந்த டச்சுக் கவர்னர் இயன் மக்­கா­ராவின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க யாழ்ப்­பாண வைப­வ­மா­லையை எழு­தி­ய­தாக மயில்­வா­கனப் புலவர் கூறி­யுள்ளார்.

    அதற்குப் போது­மான ஆதா­ரங்கள் எடுத்துக் காட்­டப்­பட்­டுள்­ளன. ஆனால் அக்­கா­லத்தில் டச்­சுக்­காரர் ஆட்­சி­யி­லி­ருந்­தாலும், அவர்­க­ளு­டைய கொள்கைகளைப் பற்றி கடு­மை­யாக துணி­வுடன் எடுத்­து­ரைத்­தி­ருப்­பதும், ஆங்­கி­லே­ய­ரு­டைய ஆட்­சி­யைப்­பற்றி எதிர்வு கூறி­யி­ருப்­பதும் பிற்­கா­லத்தில் செரு­கப்­பட்­டி­ருக்­கலாம் என நம்பக் கூடி­ய­தாக இருக்­கின்­றது” என்று தெரிவித்­துள்ளார்.

    The Translator’s preface.

    * “All that is known of the author is what he says of himself in his preface. The Governor Maccara, of whom he speaks, was Jan Maccara who was Governor of the Dutch possessions of Ceylon in 1736. And there is sufficient internal evidence to show that the author lived about that time, but the bold language in which the policy of the Dutch is described and the prophecies which the work contains, relating to the English, must be regarded as interpolations a later date.

    பிறிற்றோ மொழி­பெ­யர்த்த ஆங்­கில வைப­வ­மா­லை­யிலும் யாழ்ப்­பா­ணத்தில் போர்த்­துக்­கேயர் கோட்டை கட்­டிய விபரம் பின்­வ­ரு­மாறு தரப்­பட்­டுள்­ளது.

    சகாப்தம்  1503 சுப­கி­ருது ஆண்டில் அவர்கள் கோட்டை (யாழ்ப்­பா­ணத்தில்) ஒன்றைக் கட்­டி­னார்கள். (ஆங்­கில ஆண்டு தமிழ் ஆண்டை விட 77 வருட வித்தி­யா­சத்தைக் கொண்­டது. ஆகவே 1580ஆம் ஆண்டு கோட்டை கட்­டப்­பட்ட­தாகக் கொள்­ளலாம். (ஆய்­வுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.) (பக்கம்-38)

    This happened in the year Supakiruthu corresponding with the Sakaptham 1503. They build a fort. (Jaffna) (77 years different. That means 1580.) Page : 38.

    kidaiயாழ்ப்­பா­ணத்தில் ஒல்­லாந்தர் கோட்டை

    போர்த்­துக்­கேயர் கோட்டை கட்­டிய விதம் பற்றி பல விரி­வான ஆய்­வுகள் வெளிவந்­துள்­ளன. அவற்றை ஆய்வு செய்­வது எனது நோக்­க­மல்ல. காக்கை வன்­னியன் என்ற வர­லாற்றுப் பாத்­தி­ரத்­திற்கு தேவை­யான ஆதா­ரங்­களைத் தொகுப்­ப­தையே இந்தக் கட்­டுரை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது.

    1879இல் பிறிற்றோ மொழி­பெ­யர்த்த யாழ்ப்­பாண வைப­வ­மா­லையில் ”காக்கை வன்­னி­யனின்” காட்டிக் கொடுப்­புகள் பற்றி 35ஆம் பக்­கத்­தி­லி­ருந்து 46ஆம் பக்­கம்­வரை எழு­தப்­பட்­டுள்­ளன.

    36 வரு­டங்­களின் பின்னர் 1915ஆம் ஆண்­ட­ளவில் வர­லாற்­றா­சி­ரியர் ஆ. முத்­துத்­தம்­பிப்­பிள்ளை தமது யாழ்ப்­பாணச் சரித்­தி­ரத்தில் ஒப்­பீட்­ட­ளவில் அப்படியே மொழி பெயர்த்­தி­ருப்­பது தெரிய வரு­கி­றது.

    இதனால் ஆங்­கி­லத்­தி­லுள்ள சில பந்­தி­களை மட்டும் தெரிவு செய்து, அவற்றை தமிழில் மொழி­பெ­யர்க்­காமல்  காக்­கை­வன்­னியன் பற்­றிய ஆதாரக் குறிப்புகளை அப்­ப­டியே உங்கள் கவ­னத்­திற்கு தரு­கிறேன்.

    “The Yalpana Vaipava Malai”. Translated by C.Brito-1879. Pages: 35-–46

    Kakkai Vanniyan

    A tumult having arisen among the inhabitants of Vada-miradchi, the king went in person to quell it. On his return route lay through Irupalai, and when he arrived within its limits his musicians silenced their music. On inquiring the cause he was informed that he was within the territories, which belonged to Para-nirupa-singkan, without whose permission the music could not be continued. Sangkili regarded this both as an insult to his dignity and an indication of the influence of Para-nirupa-singkan and desired much to deprive him of his territories and his influence, but found it unsafe to violate a grant publicly inscribed on copper. (Page 35)

    At this juncture of affairs the conduct of Sangili brought about that opportunity, together with a train of events, which ultimately led to the ruin of himself and his kingdom. Having entertained an unlawful passion the beautiful daughter of Appa, who was one of his ministers, Sangili attempted to force the reluctant maid to submit to his wishes. Appa sought protection of Para-nirupa-singkan, which was readily granted. The girl was received into Para-nirupa-singkan’s family and her father was dispatched with a letter to Kakkaivanniyan, a considerable personage, who had recently landed at Urkavat-turai. Appa returned with a reply from Kakkai-vanniyan, which he delivered to Para-nirupa-singkan, and, acting on the advice of the latter, went back to his usual business as if nothing had happened. (Page 38)

    Kakkai-vanniyan, without a moment’s delay, went to Tharangkampadi and assured the Parangkis that he would put Yalpanam into their hands. They hesitated at first, but persuaded by his oaths and entreaties, they fell in with his proposal and soon after landed at Pannaith-thurai disguised as traders. (Page 39)

    The Parankis who fled from the battlefield reached Urkavet-turai and were determined to sacrifice Kakkai-vanniyan to their fury. They believed that he had played them false and they told him they should not have suffered the loss, which they had, of 16000 of their men, in the war with Sangkili. Fortunately for Kakkai-vanniyan a messenger arrived just then with a letter from Para-nirupa-singkan addressed to Kakkai-vanniyan, expressing regret that the strangers had been defeated and that, no open assistance had been given them by the natives. It also pointed out the necessity of joint action and invited the Vanniyan to join his forces to those of Para-nirupa-singkan and openly assist the strangers against the tyrant. Being assured by the tenor of this letter, of the sincerity of the natives, the Parangkis determined to renew the fight on the morrow. The Vanniyan preceded them by night to Nallur and arranged with Para-nirupa-singkan the part which each should act. (Page 43).

    He saw Kakkai-vanniyan already on the spot among his soldiers, and believing him to have come to his aid, he accosted him with these words “ Friend ! you have been slow hitherto but great is your kindness to-day in bringing me this timely aid”. To testify his joy the king fell on the Vanniyan’s neck and embraced him. The traitor pretended to return the compliment but held the king fast on his arms. The Parangkis rushed on the king as he stood struggling for liberty. The king’s soldiers drew their swords, but Para-nirupa-singkan forbade them to use their weapons without the order of their commander. (Page: 44)

    ”காக்கை வன்­னியன், செய்த சேவை­க­ளுக்­கான கௌர­வத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஊர்­கா­வற்­றுறை சென்­ற­டைந்தார்.”

    showImageInStoryஇணை­யத்­த­ளத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட ஊர்­கா­வற்­றுறை வரை­படம்

    “Kakkai-vanniyan received all the marks of honor due to his services and retired to Urkavat-turai”. (Page : 46)

    வைப­வ­மா­லை­யு­டையார் வெற்­றுரை செ.இரா­ச­நா­யகம் முத­லியார் – 1933 :

    ”சங்­கி­லி­யா­கிய செக­ரா­ச­சே­கரன், போர்த்­துக்­கேயர் தங்கள் வியா­பா­ரத்தை விருத்தி செய்­ய­வேனும், மார்க்­கத்தை பரப்­ப­வேனும், ஒரு காலத்­தி­லா­வது உத்­த­ரவு கொடுத்­தா­னல்லன்.

    ஆகையால்  பர­நி­ரு­ப­சிங்கன் தூண்­டு­தலால்   அவர்­க­ளுக்கு வியா­பாரம் செய்ய இடம் கொடுத்தான் என்­பதும், காட்டு நடுவே அவர்கள் கோட்டை கட்டியிருப்பதைச் சங்­கிலி, வேட்டம் போன காலத்திற் கண்டு, கோட்­டையை இடிப்­பித்து அவர்­க­ளையும் வெளிச்­செல்லக் கட்­ட­ளை­யிட்டான் என்­பதும், அப்­போது அவர்கள்  இவ­னுடன் போர் செய்­தார்கள் என்­பதும், ஆதா­ர­மற்ற வெறுங்­கதை.

    வைப­வ­மா­லையார் கூற்­றின்­படி ஒரு­போது நடந்­தி­ருப்பின் அவர் கூறிய மன்­மத வரு­ட­மா­கிய கி.பி.1536இல் அவர்­களை அகற்­றி­யது மாத்­திரம் நடந்திருக்கலாம்.” (குறிப்­பி­டப்­படும் ஆண்டு 1536 + 77 = 1613 ஆகும்) யா.சரி. முத­லியார் செ.இரா­ச­நா­யகம்-1933 பக்கம் 101.

    மறவர் : ”சங்­கி­லியின் படைத் தலை­வர்­களில் அநேக வன்­னி­யர்­களும் மற­வர்­க­ளு­மி­ருந்­தார்கள். மற­வர்கள் குடி­யே­றி­யி­ருந்­த­விடம் மறாட்சி (மற­வர்-­ – ஆட்சி) யென்­ற­ழைக்­கப்­பட்­டது. இப்­போது அது வட­மராட்சி, தென்­ம­ராட்சி என இரு பிரி­வு­க­ளா­கி­விட்­டது. வீர­மா­ணிக்க தேவன் என்னும் மறவர் படைத்­த­லைவன் ஒருவன் பருத்­தித்­து­றை­யி­லி­ருந்தான்.

    ”வீர­மா­ணிக்கன் வந்­தி­றங்­கி­ய­துறை அவன் பெய­ரா­லே­யின்றும் வழங்­கு­கின்­றது. கரப்­பிட்டி வன்­னியன் கரப்­பிட்­டி­யிலும், காக்­கை­வன்­னியன் ஊராத்­து­றை­யிலு மிருந்­தார்கள்.

    இப்­படைத் தலை­வர்­களின் மெய்க்­காப்­பாளர் பெரும்­பாலும் கத்­தி­கட்­டி­க­ளென்­ற­ழைக்­கப்­பட்ட சாணார்­க­ளாகும்.” (யாழ்ப்­பாணச் சரித்­திரம் இரா­ச­நா­யகம் முத­லியார் -1933 பக்கம் 84.)

    *இதன் பின்னர் இரா­ச­நா­யகம் முத­லி­யா­ரு­டைய யாழ்ப்­பாணச் சரித்­தி­ரத்­திலே காக்­கை­வன்­னியன் பற்­றிய தக­வல்கள் எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. சங்­கிலி மன்­ன­னுக்கும் போர்த்­துக்­கே­ய­ருக்­கு­மி­டையில் நடை­பெற்ற யுத்தம் பற்றிக் குறிப்­பி­டு­கையில் காக்கை வன்­னி­ய­னு­டைய பங்­க­ளிப்பைப் பற்றி எதுவும் எழு­தப்­ப­ட­வில்லை.

    வர­லாற்றுத் தெளி­வுகள் :

    14ஆம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து வந்த வன்­னிய குலத்தை சேர்ந்­த­வர்கள் ”வன்­னி­யனார் ” என்ற தலைமைப் பத­வியை வகித்து நிர்­வாகம் செய்த கார­ணத்­தினால் அடங்­காப்­பற்­று  -­வன்னிப் பிர­தே­சத்தில் வாழ்ந்த பொது­மக்கள் அனை­வரும் தென்­னிந்­திய வன்­னிய குலத்தை சேர்ந்­த­வர்கள் என்று ஆங்­கில வர­லாற்று நூல்­களில் குறிப்­பிட்டு இருப்­பது ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தல்ல.

    போர்த்­துக்­கேயர் யாழ்ப்­பா­ணத்தில் கோட்டை கட்ட ஆரம்­பித்த கால­மான சுமார் 1580ஆம் ஆண்­டு­களில் ”காக்கை வன்­னியன்” ஊர்­கா­வற்­று­றையில் இருந்­த­தாக வர­லா­று­களில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

    ஆனால் ஒல்­லாந்­த­ரு­டைய கடைசிக் கால­கட்­டத்­திலும் (1786), பின்னர் ஆங்­கி­லே­ய­ரு­டைய ஆரம்­ப­கா­ல­மான 1800ஆம் ஆண்­டு­களில் கரிக்­கட்­டு­மூலை முல்­லைத்­தீவில் பண்­டாரம் வன்­னி­ய­னா­ரு­டைய நிர்­வாகம் ஆரம்­ப­மா­கி­ய­தாக வர­லாற்றில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

    1803ஆம் ஆண்­ட­ளவில் ஆங்­கி­லே­ய­ரு­டைய அதி­கா­ரத்தில் வன்­னி­ய­னா­ராக இருந்த ‘‘பண்­டாரம் வன்­னி­ய­னாரை”, சுமார் 223 வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஊர்­கா­வற்­று­றை­யி­லி­ருந்த (ஊராத்­துறை) ”காக்கை வன்­னி­யனார்” ஆங்­கி­லே­யர்­க­ளுக்குக் காட்டிக் கொடுத்­த­தாகக் கூறு­வது வர­லாற்றை படிக்க முயலும் மாண­வர்­க­ளுக்கு குழப்­பத்­தையும் சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்தும் விட­ய­மாகும்.

    ”பண்­டார வன்­னியன்’‘ வர­லாற்று நாட­கத்தை 1964 களில் எழு­திய எமது ஆசான் முல்­லை­மணி போதிய தக­வல்கள் கிடைக்­காத கார­ணத்­தி­னாலும், மேடை நாட­கத்­திற்கு உணர்­வூட்­டு­வ­தற்­கா­கவும் ”காக்கை வன்­னியன்’‘ என்ற கதா­பாத்­தி­ரத்தை கற்­ப­னையில் உரு­வாக்­கி­ய­தாகக் கூறு­கிறார்.

    ஆனால் 1996 களில் என்னால் எழு­தப்­பட்ட ”நந்தி உடையார்” மற்றும் ”பண்­டா­ர­வன்­னியன் குரு­விச்சி நாச்­சியார்” நாட­கங்­க­ளுக்­கான ஆய்­வுக்­கு­றிப்­பு­க­ளிலும் வன்­னி­பற்­றிய வர­லாற்றுக் குறிப்­பு­களை எழு­தி­யி­ருந்தேன்.

    முல்­லை­மணி 1997 தொடக்கம் 2001 வரை வன்னி வர­லா­று­பற்றி எழு­திய ஆய்­வுக்­கட்­டு­ரை­களில், ஏற்­க­னவே எழு­திய வர­லாற்று நாட­கத்­தி­லுள்ள விட­யங்­களின் உண்மைத் தன்­மையை திருத்திக் கூறி­யுள்ளார். அந்த விட­யங்கள் மக்கள் மத்­தியில் ஓங்கி ஒலிக்­காத கார­ணத்­தினால் இன்று வரை வர­லாற்றில் தெளிவின்­மையே தொடர்­கி­றது.

    showImageInStoryவவு­னி­யாவில் பண்­டாரம் வன்­னி­யனார் சிலை

    பேரா­சி­ரியர் புலோ­க­சிங்கம் ”காகு” என்றால் ”கொன்­னையன்” இத­னா­லேயே ”காக்கை வன்­னியன்” என்ற பெயர் வந்­தது என்­பது பற்றி, தமது விச­னத்தை கட்­டு­ரை­களில் தெரிவித்­தி­ருந்தார்.

    இது­வரை காலமும், பண்­டாரம் வன்­னி­ய­னாரின் வர­லாற்றை சுய­மாக ஆய்வு செய்­யாமல், (பல்­கலைக் கழக வர­லாற்­றுத்­து­றைகள் உட்­பட) பண்­டா­ர­வன்னியன் சம்­பந்­த­மான பல கட்­டு­ரைகள், கவி­தைகள், நாட­கங்கள் எழுதிய அறி­ஞர்கள் கலை­ஞர்கள் உட்­பட பலரும், பண்­டார வன்­னி­யனைக் காட்­டிக்­கொ­டுத்­தவர் ”காக்கை வன்­னியன்” என்றே பதிந்­துள்­ளமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

    தென்­னிந்­திய டாக்டர் கலைஞர் அறிஞர் கரு­ணா­நிதி ”பண்­டா­ரக வன்­னிய” என்ற தலைப்பில் வர­லாற்று நாவலை எழு­தி­ய­போது ”காக்கை வன்­னியன்” என்­பவர் வன்னிப் பிர­தே­சத்தில் வாழ்ந்­தவர் எனக் கூறு­கின்றார். பண்­டா­ரக வன்­னியன் வர­லாற்று நாவலை காவி­ய­மாகத் தந்த கவிஞர் ஜின்­னாவும் ”காக்கை வன்­னி­யனை” உண்மைக் கதா­பாத்­தி­ர­மா­கவே படைத்­துள்ளார்.

    காவி­யத்­திற்கு முன்­னுரை எழு­தி­யுள்ள காரை. சுந்­த­ரம்­பிள்ளை மேலும் ஒரு படி முன்­னேறி, 1803ஆம் ஆண்டில் இடம்­பெற்ற போராட்­டத்தில் பதவி இழந்­தி­ருந்த பண்­டாரம் பின்னர் நடத்­திய தாக்­கு­தல்­கள் ­பற்றி ஆங்­கி­லே­ய­ருக்கு தகவல் தெரிவித்­தி­ருந்த கதிர்­காம நாயக முத­லி­யாரை ”காக்கை வன்­னியன் ” என்ற பட்டப் பெயரால் அழைக்­கலாம் என்று நியா­யப்­ப­டுத்­தி­யி­ருப்­பது விச­னத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

    பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான பாட­நூலில் பண்­டார வன்­னி­யனைக் காட்டிக் கொடுத்­தவர் காக்கை வன்­னியன் என்றே குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. தற்­போது தேசிய வீரன் பண்­டாரம் வன்­னி­ய­னா­ரு­டைய வர­லாறு பாட­நூலில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு, வர­லாற்றின் உண்­மைத்­தன்மை ஒரு கார­ண­மா­கவும் இருக்­கலாம்.

    1964 தொடக்கம் இன்று வரை, வட­புலத்தில் இடம்­பெற்ற பண்­டா­ர­வன்­னியன் விழாக்­க­ளிலும், தேர்தல் பிர­சா­ரங்­களின் போதும், பல தமிழ் அர­சி­யல்­வா­திகள் ”அடங்­காப்­பற்று – வன்னிப் பிர­தே­சத்தில் காட்டிக் கொடுக்கும் காக்கை வன்­னி­யர்கள் இருக்­கும்­வரை தமி­ழர்­க­ளுக்­கான உண்மை அர­சி­யலை செய்ய முடி­யாமல் இருக்­கி­றது” என்று சாடி வரு­வதை காதாரக் கேட்­டி­ருக்­கின்றேன். அதற்­காக அவர்கள், நீலிக்­கண்ணீர் வடிப்­ப­தையும் நேரில் பார்த்து மனம் நொந்­து­மி­ருக்­கிறேன்.

    தற்­போது யாழ்ப்­பாணம், வன்னி என்ற இரண்டு பிரி­வுகள் இருக்­கின்ற கார­ணத்­தினால் ”காக்கை வன்­னியன்” என்ற பெயரை அடங்­காப்­பற்று -– வன்­னி­யோடு தொடர்­பு­ப­டுத்தி எழு­து­வதும் பேசு­வதும் பொருத்­த­மா­ன­தல்ல.

    அது அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட  ஒரு தமிழ்த் தேசிய வீர­னையும், அவர் வாழ்ந்த பிர­தே­சத்தின் கௌர­வத்­தையும் திட்­ட­மிட்டு இழி­வு­படுத்தும் ஒரு செய­லாகும் என்ற கருத்து மேலோங்கி நிற்­பதை தமிழ் வர­லாற்­றா­சி­ரி­யர்­களும் தமிழ்ச்­ச­மூ­கமும் ஏற்றுக் கொள்ளும் என்­பது எனது நம்­பிக்கை. அடங்காப்பற்று – வன்னிப்  பிரதேசத்தில் வாழ்ந்த  தமிழர்களின் வரலாறுகள் முறையான ஆய்வுகளின்றி திரிபுபட்டு சிதைவடைந்து வருவதும் கண்கூடு.

    ஒல்­லாந்தர் மற்றும் ஆங்­கி­லேயர் காலத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் மற்றும் வழங்­கப்­பட்ட நிய­ம­னங்கள் பற்­றிய பல தக­வல்கள் அந்­தந்த மொழி­களில் எழுத்தில் உள்­ளன.

    அவை இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளியி­டப்­பட்டு வரு­கின்­றன. பூர­ண­மான ஆங்­கில அறி­வோடு வளர்ந்து வரும் எதிர்­காலச் சந்­த­தி­யினர், இணை­யத்­த­ளங்கள் மற்றும் மின்­னியல் ஊட­கங்கள் மூலம் வர­லா­று­களைத் தெரிந்து கொள்ள பல வாய்ப்­புகள் உண்டு.

    ஆதா­ரங்கள் எதுவும் இல்­லாமல் திரி­பு­பட்ட வர­லா­று­களை, வர­லாற்றுத் தொகுப்­பு­க­ளா­கவோ, நாட­கங்­க­ளா­கவோ, நாவல்­க­ளா­கவோ, காவி­யங்­க­ளா­கவோ, கட்­டு­ரை­க­ளா­கவோ, கவி­தை­க­ளா­கவோ தமிழில் எழு­து­ப­வர்கள், தாங்கள் எழு­து­வதை எதிர்­காலச் சமூகம் நிரா­க­ரிக்கப் போகி­றது என்­ப­தையும், அவற்றை கற்­பனைக் கதை­க­ளாக மட்­டுமே ஏற்றுக் கொள்ளும் என்­ப­தையும், மன­தி­லிருத்திக் கொள்­வது அவ­சியம்.

    இலங்­கா­பு­ரத்தில் ஆட்சி செய்த சக்­க­ர­வர்த்தி இரா­வ­ணேஸ்­வ­ர­னு­டைய வர­லாறு, தற்­போது கற்­ப­னைகள் நிறைந்த புராணக் கதை­யாக மட்­டுமே ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருப்­பது இதற்கு நல்ல உதா­ர­ண­மாகும்.

    21ஆம் நூற்­றாண்­டி­லா­வது, வட­புலத் தமி­ழர்­க­ளு­டைய பூர்­வீக வர­லாற்றில் உள்ள உண்மைத் தன்­மையை ஆதா­ர­பூர்­வ­மாக அடுத்த கட்­டத்­திற்கு எடுத்துச் செல்வதற்கு ஆவன செய்­வது ஒவ்­வொரு ஆய்வாள­ரு­டைய கட­மை­யாகும். அடுத்த வாரத்தில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் வெளிப்பாடாக தேசிய வீரன் பண்டாரம் வன்னியனாருடைய வரலாறு ஆரம்பமாகும்.

    வரலாறு தொடரும்..

    அருணா செல்லத்துரை

    பண்டாரம் வன்னியகளும் – காக்கைவன்னியர்களும் ! (வராலாற்று கட்டுரை)

    Post Views: 122

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    “சனாதன தர்மம் – 1”- ( Sanathana Dharma – 1)

    September 23, 2023

    மார்பில் ரவைகள் பாய இரத்த வெள்ளத்தில் விழுந்தார் யாழ்.மேயர் துரையப்பா!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 3)

    September 22, 2023

    முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: நேச நாடுகளின் உதவிகளைப் பெறுவதில் ரஷ்யா சந்தித்த சிக்கலும் தீர்வும்!

    September 20, 2023

    Leave A Reply Cancel Reply

    September 2014
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Aug   Oct »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version