ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா? என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
இந்த புத்தகத்தை எழுதியுள்ள டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மதுவின் பேட்டி கடந்த இரண்டு இதழ்களாக வெளியாகி உள்ளன. அதன் இறுதிப்பகுதி இது.
ஃபெரோஸ் அஹ்மத் இதுதொடர்பில் தெரிவித்தது யாதெனில்,
”இப்படி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று என்னைத் தூண்டியது தமிழகத்தின் டி.ஜி.பி-யாக இருந்த மோகன்தாஸ். அவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. உண்மையில் அது நிஜக்கதை. ராஜீவ் கொலைக்கான பின்னணி, காரணகர்த்தாக்கள் எல்லாம் இந்த நாவலுக்குள் வருகிறார்கள்.
இந்த நாவலின் பெயர் The Assassination. 1993-ம் ஆண்டு இந்த நாவல் வெளியானது. நாவலில் உள்ள தகவல்களை இந்திய ரோ உளவுத் துறை அதிகாரிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இதை வெளியிட்டது ‘ரோ’ சம்பந்தப்பட்ட பப்ளிகேஷன் [launchers].
இந்தப் புத்தகம் மக்களிடம் சென்று சேராமல் தடுத்துவிட்டனர். அப்போது நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். எனக்குக்கூட இந்தப் புத்தகம் பற்றிய தகவல், சுப்பிரமணியன் சுவாமியின் புத்தகத்தின் மூலம்தான் கிடைத்தது. இந்தப் புத்தகத்தை தேடினேன். எங்கேயும் கிடைக்கவில்லை.
இறுதியில் புலனாய்வுத் துறை நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின்படி அந்தப் புத்தகத்தை வாங்கப்போனேன். அங்கே அந்தப் புத்தகத்தின் ஜெராக்ஸ்தான் எனக்கு கிடைத்தது.
இந்தப் புத்தகம் அப்படியே ராஜீவ் கொலைச் சதியை திட்டமிட்டவர்களை, பலனடைந்தவர்களை கதாபாத்திரங்களாக எடுத்து வைக்கிறது. வில்லன் கேரக்டராக இருப்பவர் பாதர் மூன்சைன். இவர்தான் சந்திரா சாமி. ராஜீவ் காந்தியாக ஜார்வின் என்கிற கேரக்டர் வருகிறது. சுந்தன் என்கிற கேரக்டர் பிரபாகரனை வெளிப்படுத்துகிறது.
ஐரோப்பிய மொழி ஒன்றில் ஒற்றை கண்ணுக்கு சைக்லேப்ஸ் என்று சொல்லப்பட… அந்தப் பெயர் சிவராசனுக்கு. இவர் Delta Force II என்கிற சினிமா படத்தைப் பார்த்து மனித வெடிகுண்டு தணுவை உருவாக்கும் கதை இந்த நாவலில் வருகிறது.
ராஜீவ் கொலையை நேரடியாக எழுதினால் அது அப்போதைய ஆளுங்கட்சியை எதிர்நோக்க வேண்டியது இருக்கும் என்பதை எதிர்பார்த்து ஒரு நாவலாகக் கொடுத்துள்ளார்.
அவருடைய பதவிக்காலத்தின் இறுதியில் எல்.டி.டி.ஈ-க்கும் மோகன்தாஸுக்கு விரோதம் உண்டு. ஆனாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையை சொல்லியுள்ளார். இது கான்ட்ராக்ட் கில்லிங் என்கிறார்.
இந்த நாவலின்படி பாதர் மூன்சைன்னுக்கு (சந்திராசாமி) ஜார்வின் (ராஜீவ் காந்தி) மீது போபர்ஸ் இராணுவ பீரங்கி பேரத்திலிருந்து விரோதம் தொடங்குகிறது. பாதர் மூன்சைன் சுந்தனை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் பேசுகிறார். ஜார்வினை தீர்த்துக்கட்டும் ஒப்பந்தம். சுந்தன் இந்த ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை. நான் இது போன்ற வேலையெல்லாம் செய்வது இல்லை என்கிறார் சுந்தன். இதற்கு சில காரணங்களையும் சுந்தன் சொல்கிறார்.
அரசியல் ரீதியாக ஜார்வின் ஒழிந்து போய்விட்டார். அவர் அதிகாரத்துக்கு திரும்ப வரப்போவதில்லை. அதிலும் எங்கள் இயக்கம் இது போன்ற கான்ட்ராக்டையெல்லாம் எடுத்துச் செயல்படாது.
எங்கள் இயக்கத்துக்கு தேவைப்பட்டால் செய்வோம். அவருடைய ராணுவம் எங்களைக் கொல்ல திரும்ப வரப்போவதில்லை. இப்படிப்பட்டவரைக் கொல்ல எங்கள் ஆட்களை வீணாக்க நான் விரும்பவில்லை.
ஆனால், பணத்துக்காக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவர்கள் இருக்கிறார். அவர்களைப் பாருங்கள் என்று கூறியது நாவலில் வருகிறது. ஆனால், சுந்தன் தலையிடவில்லை. இரண்டு தடவை சந்திக்க ஏற்பாடு செய்ததோடு சரி என்று நாவல் சொல்கிறது.
எல்.டி.டி.ஈ-க்கு இதில் சம்பந்தம் இல்லை என்பதை ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாள் முதல் ‘ரோ உளவு அமைப்பு சொல்லி வருகிறது. 1991 மே 21-ம் திகதி இரவு ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார். 22-ம் திகதி மத்திய அமைச்சரவைக் கூடுகிறது. அதில் ஐ.பி இயக்குநர், ரோ அமைப்பின் தலைவர் எல்லாம் இருக்கின்றனர்.
ஆனால், கூட்டத்தின் முடிவில் சுப்பிரமணியன் சுவாமி, கொலைக்கான காரணம் எல்.டி.டி.ஈ என்று அறிவிக்கிறார். ரோ தலைவர், இதில் எல்.டி.டி.ஈ இல்லை என்கிறார். அதன் பிறகு தமிழக அரசியல்வாதிகள் இதனைக் கையில் எடுத்து எல்.டி.டி.ஈ-தான் காரணம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
எல்.டி.டி.ஈ-யின் முக்கிய புள்ளிகளிடம் விசாரிக்கவில்லை. அந்த இயக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் திரிந்த கீழ்மட்டத்தைச் சேர்ந்த சிலரைப் பிடித்து வாக்குமூலத்தையும் சில கடிதங்களையும் ஆதாரமாக வைத்து எல்.டி.டி.ஈ-யை சி.பி.ஐ குற்றவாளியாக ஆக்குகிறது.
தணுவும் சாந்தனும் பிரபாகரனுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் கடிதங்களை இரும்பொறை என்பவரிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறியது சி.பி.ஐ. இறந்து போனவர்களின் கடிதங்கள் இவை. கையெழுத்து உண்மையா என்பது இதுவரைத் தெரியாது. ஆனால், சி.பி.ஐ சில சாட்சியங்களை அவர்களே உருவாக்கி எல்.டிடி.ஈ-யைச் சம்பந்தப்படுத்தினர்.
ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் என்கிற அனுபவத்தில் நான் சொல்லுவது, இதில் பல சாட்சியங்கள் உருவாக்கப்பட்டவை. இது ஒரு ஒப்பந்தக் கொலை. பணத்துக்காக நடந்தவை. சிவராசன் ஒரு இரட்டை ஏஜென்ட். இந்திய புள்ளிகள்தான் இந்த ஒப்பந்தக் கொலைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஜெயின் கமிஷன் ரிப்போர்ட்படி பிரபல சவூதி அரேபிய ஆயுத வியாபாரியான அட்னான், அர்னி மில்லர், சந்திராசாமி போன்றவர்களுக்கிடையே ஏராளமான மில்லியன் டொலர் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
ஜெயின் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட பின்னரும் இந்த வெளிநாட்டுத் தொடர்பு தகவலை சி.பி.ஐ-யும் சிறப்புப் புலனாய்வும் ஏன் கவனத்தில் எடுத்துகொண்டு இந்த கோணத்தில் விசாரிக்கவில்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.
சிவராசன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு 1991 மார்ச் மாதம் சிங்கப்பூர், சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இது விசாரணையின் ஒரு பகுதி. ஆனால், இவற்றை ஏன் மூடி மறைத்தனர்? இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளன.
கணவரைக் கொல்லக் காரணமானவர்களை சோனியா ஏன் கண்டுபிடித்துச் சொல்லவில்லை? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி அவர் அதை செய்திருந்தால் அவரது காங்கிரஸ் கட்சியையே குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள். இப்படியொரு சூழ்நிலை உருவாவதைத் தடுக்கத்தான் சோனியா மௌனமானார்” என்று முடித்தார் ஃபெரோஸ் அஹ்மத்.
உண்மைக் குற்றவாளிகளை பி.ஜே.பி அரசாவது அடையாளம் காட்டுமா?
முற்றும்
சந்திராசாமி பற்றி ஒரு சுவாரிஸ்யமான கதை..
மார்கரெட் தாட்சரும்,சந்திராசாமியும், நட்வர்சிங்கும்
சந்திராசாமி மார்கரெட் தாட்சரை 9 அல்லது 11அல்லது 13 ஆண்டுகள் இங்கிலாந்து பிரதமர் ஆவார் என 4 வருடங்களுக்கு முன்பே குறிப்பிட்ட போது சாட்சியாக இருந்திருக்கிறேன் நான் என நட்வர்சிங் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது மார்கரெட் தாட்சர் இறந்த மறு நாள் வெளியிடப்பட்டுள்ளது- அது பற்றிய ஒரு பதிவு இது.
நட்வர்சிங்க இங்கிலாந்தில் படித்து வரும்போதே நடவர்சிங் (நல்ல படிப்பாளி,படைப்பாளியும் கூட)இங்கிலாந்தின் இந்திய தூதரகத்தின் வனப்பை பார்த்து வியந்திருக்கிறார். அதன் பின் தமது படிப்பை முடித்தபிறகு இந்திய அரசியல் வானில் பிரகாசித்து ஒரு நாள் அந்த இங்கிலாந்தின் இந்திய தூதரகத்திற்கே துணை உயர் ஆணையர் (டெபுடி ஹை கமிஷனராக) ஆகிறார்.
அப்படி தமது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும்போது நியாயமான பணி கால் பங்கு இருந்தால் முக்கால் வாசி இந்தியாவில் இருந்து வரும் நண்பர்கள் அவர்களை பார்க்கவேண்டும், இவர்களைப் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா என தொல்லை கொடுப்பது வழக்கம் என்றும் அதற்கு தாம் வளைந்து கொடுத்ததில்லை என்றும் கூறுகிறார்.
அப்படி இருக்குமொரு காலக் கட்டம். 1975ல் சந்திராசாமி என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு : நான் இங்கிலாந்து வந்திருக்கிறேன். யஷ்பால்கபூர் உங்களை சந்திக்கச் சொன்னார். வந்து சந்திக்க முடியுமா என்று. நான் எல்லாம் உங்களை வந்து சந்திக்க முடியாது.
நீங்கள் வேண்டுமானால் வந்து என்னை இந்தியத் தூதரக அலுவலகத்தில் அல்லது எமது இருப்பிடத்தில் சந்திக்கவும் என்று சொல்லிவிட அடுத்த நாள் சந்திராசாமி(சுவாமி?) இவரை வந்து சந்தித்தது மட்டுமல்லாது அவரின் இடத்துக்கு விருந்துக்கு அழைத்து பிரமாதமான சுவையான விருந்து அளித்ததுடன் அவர் மனைவிக்கு பக்தி அதிகமாம்.
மிஸஸ் நட்வர்சிங்கை அழைத்து ஒரு வெண்காகிதத்தில் 5 கோடுகளை கிழித்து அதை 5 ஆகப் பிரித்து கிழித்து ஒவ்வொன்றிலும் ஒரு கேள்வி எழுதவைத்து ஒரு சதுரங்க பலகையில் வைத்து அதிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு அந்த சுருட்டப்பட்ட காகிதத்தில் என்ன எழுதியுள்ளார் என பார்க்காமலேயே சொல்லிவிட்டு மிஸஸ் நட்வர்சிங்கை அந்த சுருட்டப்பட்ட காகிதத்தை ப் பிரித்துப் பார்க்கச் சொல்ல அந்த கேள்வி அதில் அப்படியே இருந்தது கண்டு ச்ந்திராசாமி விஷேச சக்தி பெற்றவர் என வியந்தார்களாம் மிஸஸ் நட்வர்சிங்.
ஆனாலும் இதெல்லாம் நட்வர்சிங்குக்கு அறவே பிடிக்கவில்லையாம். ஆனாலும் வேண்டாவெறுப்பாக இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாராம் அவரும் ஒரு இந்தியராயிற்றே என. chandraswami அடுத்து சந்திராசாமி, இங்கிலாந்தில் மௌண்ட்பேட்டன் மற்றும் மார்கரெட் தாட்சரை சந்திக்கவேண்டும் என்றாராம்.
இவருக்கு எதற்கு இதெல்லாம்? என நட்வர்சிங் அலட்சியமாக நினைத்து ஏற்பாடு செய்யலாமா வேண்டாமா என எண்ணி வருகையில் இந்தியாவில் இருந்து அப்போதைய அயல் உறவுத் துறை அமைச்சர் ஒய்.பி. சவான் அங்கு வந்திருக்க அவரிடம் இந்த சந்திரா சாமியின் கோரிக்கையை சொன்னாராம்.
ஓ! சதிராசாமியா? அதெற்கென்ன ஏற்பாடு செய்யுங்களேன் என்றாராம். அதை அடுத்து இவர் மௌண்ட் பேட்டனை தொடர்பு கொள்ள உங்கள் இந்திய நண்பரை சந்திக்க ஆவல்தான் எதற்கு என்னைப் பார்க்கவேண்டும் என்கிறார்.
ஆனால் எனக்கு அந்த நாளில் ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்ட மற்றொரு நிகழ்ச்சி வெளியூரில் இருக்கிறதே என்றாராம். அது கேட்ட நட்வர்சிங்க் அப்பாடா, தப்பித்துக் கொண்டோம் என விடுபட்ட உணர்வில் இருந்தாராம்.
ஆனால் மார்கரெட் தாட்சர் (எதிர்கட்சி தலைவர்-கன்சர்வேடிவ் கட்சி) சந்திக்கத் தயார்தான் எதற்கு உங்கள் இந்திய நண்பர் என்னை சந்திக்க வேண்டுமென்கிறார். குறுகிய கால அவகாசம்தான் தருவேன், ஒரு 10 நிமிடம் வந்து எனது அலுவலகத்தில் சந்திக்கலாம் என்றாராம்.
அதுபோலவே இவர்கள் இருவரும் அதாவது, துணை உயர் ஆணையர் -வெளியுறவு இந்தியா – இங்கிலாந்துக்கு என்ற பதவியுடனான நட்வர்சிங், ஆங்கிலமே அறியாத அப்போது இந்தி மட்டுமே தெரிந்த சந்திராசாமியை – மூத்த இருபதுகளில் இருந்த சந்திராசாமியுடன் அந்த மார்கரெட் தாட்சர் அம்மையாரை சந்திக்க அழைத்துச் சென்றாராம்.
அதன் பிந்தைய காலத்தில் சந்திராசாமி ஆங்கிலமும் கற்றுக் கொண்டார் என்பது வேறு விஷியம். ஆனால் இவருக்கு அப்போது நட்வர்சிங் மொழிபெயர்ப்பாளராக சந்திராசாமிக்கும் மார்கரெட் தாட்சருக்கும் இடையில் உதவி செய்தாராம்.
இவர்கள் சென்றடைந்ததும் மிஸஸ் தாட்சரின் அவரின் கட்சியைச் சார்ந்த உதவியாளர் இவர்களை ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்றாராம். எதற்கு என்ன சந்திக்க வேண்டும் என்கிறார் உங்கள் இந்திய நண்பர்? என தாட்சர் கேட்க, சற்று நேரத்தில் தெரிந்து கொள்வார் எனச் சொல்லுங்கள், என்றாராம் சந்திராசாமி.
ஓ.கே. ஐம் வெயிட்டிங்க். என காத்திருந்தாராம் தாட்சர், சில நிமிடங்கள் கழித்து மிஸஸ் நட்வர்சிங்க் அவர்களிடம் செய்தது போலவே ஒரு காகிதம் கொண்டு வரச் செய்து அதை கோடிட்டு 5 பகுதிகளாக்கி நீங்கள் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை எழுதி வையுங்கள் என்றாராம்.
அதே போல தாட்சர் செய்ய, முதல் தாளின் கேள்வி அல்லது எழுதப்பட்டிருந்த விஷியத்தை அப்படியே சொன்னாராம் பார்க்காமலே. பார்க்கலாம் என 2 வது காகிதத்தை தாட்சர் பிரிக்க அதையும் அப்படியே சரியாக சொல்லிவிட்டாராம் சந்திராசாமி- ஆர்வமும் தீவிரமும் அதிகரிக்க அடுத்த 3 கேள்விகளும் மட மட வென ஓடியதாம். அத்தனையும் சரியான பதில். தாட்சர் சரணடைந்துவிட்டாராம். சாமிக்கு.
மேலும் சில கேள்விகள் கேட்கட்டுமா? என கேட்க நட்வர்சிங்க் மொழி பெயர்த்து சந்திராசாமியிடம் சொல்ல கேட்கலாம் என அடுத்து 2 கேள்விகள் இவர் கேட்க அதற்கும் சரியான பதில் வர அம்மா மேலும் முயற்சி செய்து மேன் மேலும் முன்னேறிச் செல்ல நேரம் ஆவதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட கேள்வியுடன் சன் செட். (சூரிய மறைவு) கேள்வி போதும் இனி வேண்டாம் என சந்திராசாமி முடித்துக்கொண்டாராம்.
10 நிமிடம்தான் தருவேன் என்றவர் நேரம் காலம் பற்றி எல்லாம் நினைக்கும் நிலையில் இல்லையாம். நட்வர்சிங்க்குக்கு ஒன்றும் புரியவில்லையாம். நாம் சந்திராவை மிகச் சிறியவராக எடைபோட இந்த தாட்சரை பெரியவர் என எண்ண இங்கு இந்த தாட்சரே இவருக்கு கீழ் படிந்து விட்டாரே இரும்புப் பெண்மணி என்றவரை சந்திரா என்ற காந்தம் கவர்ந்துவிட்டதே என மலைப்பு எய்த , தாட்சர் மறுபடியும் உங்க்ளை சந்திக்கமுடியுமா? எனக் கேட்க மொழிபெயர்ப்பு செய்வதற்குள் சந்திராவே ட்யூஸ்டே ஈவ்னிங் 5ஓ கிலாக், என்று செவ்வாய் மாலை 5 மணிக்கு அட் நட்வர்சிங் ரெசிடன்ஸ் எனச் சொல்லி விட்டாராம்.
அதை விட ஆச்சரியாமான ஒன்று சந்திராசாமி அலுவலகம் வரும்போதே கையில் இருந்த திருநீறை இறைத்தபடி தெளித்தபடி வந்தாராம் ஏய், இங்கெல்லாம், இதெல்லாம் இப்படி செய்யக் கூடாது என எச்சரித்தாராம். கையில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை இப்படி இருந்த சந்திராசாமி ஒரு தாயத்தை எடுத்து அந்த அம்மாளின் இடதுகையில் கட்டிக் கொள்ளச் சொன்னாராம்.
அதை நட்வர் சிங்க் மொழிபெயர்க்க மறுக்க அந்த அம்மாவே என்ன இது என விளக்கம் கேட்டு வாங்கி கட்டிக் கொண்டாராம். அடுத்து அதிர்ச்சியூட்ட , இவர் செவ்வாய் கிழமை வரும்போது சிவப்பு வண்ண ஆடை அணிந்து வரச் சொல்க என்றாராம்.
நட்வர்சிங்க் கோபம் அடைந்தாராம் அது கேட்டு இங்கிலாந்தின் இரும்பு பெண்மணி என புகழப்பட்ட எதிர்கட்சித் தலைவராய் இருக்கும் ஒருவரிடம் நாம் எப்படி சிவப்பு ஆடை அணிய வேண்டும் எனச் சொல்வது , இதெல்லாம் அதிகமாகத் தெரியலையா உனக்கு என சந்திராவை திட்ட ஆரம்பிக்கும்போது அது என்ன என தாட்சரே நட்வர்சிங்கிடம் கேட்டு தெரிந்து கொண்டாராம் அப்படியே ஆகட்டும் என்றாராம்.
natwar_singh
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சிவப்பு ஆடையுடன் கையில் கட்டிய தாயத்துடன் மார்கரெட் தாட்சர் சரியாக நட்வர்சிங்க் இல்லம் வந்து விட அங்கிருந்த சந்திரா சாமியிடம், நான் பிரதமர் ஆவேனா? என இவர் கேட்க, 9,11,அல்லது 13 ஆண்டுகள் நீங்கள் இந்த இங்கிலாந்தை ஆள்வீர் பிரதமராக என்றாராம், (13 என்பது அதிகம் என்கிறார் நட்வர்) எப்போது ஆவேன் என்ற கேள்விக்கு 3அல்லது 4 ஆண்டுகளில் என்றாராம் சந்திரா சாமி.
இது நடந்தது 1975ல் அதன்பிறகு 1979ல் நட்வர்சிங் ஜாம்பியாவில் காமன்வெல்த் சம்மிட் நடைபெறும்போது மார்கரெட் தாட்சரை வரவேற்கும் பொறுப்பில் நட்வர்சிங்க் இருந்தாராம்.
ஏன் எனில் ஜாம்பியாவுக்கு இந்திய தூதராக 1977ல் நடவர் சிங்க் அனுப்பப்பட்டு அதுமுதல் பொறுப்பில் இருந்தாராம். நட்வர்சிங் மற்றும் மிஸச் நட்வர்சிங்கும் இங்கிலாந்தின் பிரதமர் மார்கரெட் தாட்சரை விமானத்தில் இருந்து இறங்கும்போது வரவேற்க நிற்கும்போது அவர் இறங்கி வர, சந்திராசாமி சொன்னது அப்படியே பலித்துவிட்டது போலிருக்கிறதே, என மனைவியிடம் மெதுவாக சொன்னதை கேட்ட மார்கரெட் தாட்சர்
-இங்கிலாந்தின் 11 ஆண்டுகள் 6 மாதங்கள் பிரதமராக இருந்த அதே தாட்சர் நட்வரை தனியாக அழைத்து , அதைப்பற்றி எல்லாம் சொல்லிக் வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள், என்றாராம் அதற்கு இந்த நட்வர்சிங்கும் , சொல்ல மாட்டேன், ஒருபோதும் சொல்ல மாட்டேன் என்றாராம்.
இந்த சம்பவம் குறித்து தாம் எழுதிய” வாக்கிங் வித் லைன்ஸ்” டேல்ஸ் பிரம் தி பாஸ்ட்( சிங்கங்களுடன் நடை) என்ற தமது புத்தகத்தில் எழுதி உள்ளதை மார்கரெட் தாட்சர் இறந்த மறு நாள் தி இந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது ஏப்ரல்.9- 2013ல் இது குறித்து நாம் சொல்லவந்தது என்ன வென்றால் இதே சந்திராசாமி இந்திய அரசியல் வானில் இந்திரா காலத்தில், நிறைய சர்ச்சைக்குள்ளான பெயராக பிரபலமாக விளங்கினார்.
இங்கிலாந்து முதுபெரும் வரலாறு உள்ள நாட்டின் பிரதமராக பதினொன்றரை ஆண்டுகள் இருந்த தாட்சரையே இவர் கவர்ந்திருக்கிறார் காந்தம்போல. இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்ப முடிகிறதா? இந்த நாட்டின் அயல் நாட்டின் தூதுவராக இருந்த நட்வர்சிங்க் போன்ற அறிவும் ஆற்றலும் பெற்றவர் தமது அனுபவமாக எழுதியுள்ளதை நம்பாமல் இருக்க முடியுமா?
தியான ஆற்றலில் நல்ல அனுபவம் பெற்றவர்க்கு, முக்காலமுணர்தல் , தூர தேசத்தில் நடப்பன அறிதல், பிறர் கருத்தறிதல் என்ற பக்கவிளைவு ஆற்றல்கள் எல்லாம் உண்டு. அவ்வளவு ஏன் அதன் பாதிப்புகள் எம்மிடம் கூட உண்டு. யாம் 29ஆம் ஆண்டில் தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால். குரான் கூட வஹி என்ற வாசகங்கள் முகமது நபிக்கு அப்படித்தான் இறங்கியது எனச் சொல்கிறது.
எனவே இந்த சந்திராசாமி இந்தக் கலையில் கைதேர்ந்தவராக நிறைய பயிற்சி பெற்றவராக இருந்திருக்கக் கூடும் எம்மால் இதை ஏற்க முடிகிறது. எவ்வளவோ புதிர்கள் வாழ்வில் உலகில் உண்டு. ஒரு முன்னேறிய நாட்டின் தலைவிதியை முன்கூட்டியே இந்தியாவில் பிறந்த ஒரு கடவுள் நம்பிக்கையாளர் சொல்லி இருக்கிறார் என்பதில் எமக்கு சந்தேகமில்லை.
பல நேரங்களில் இந்த ஒலியற்ற வார்த்தைகள் வருவது துளியும் பிசகாமல் நடந்தேறிவிடுகிறதை கண்கூடாக பார்க்க முடிகிறது. எனவே இதெல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது , எப்படி வருகிறது, என ஆய்வில் செய்யும்போது மனித ஆற்றல் பிரமிப்புக்குள்ளான சக்திகளுடன் தொடர்புடையதாயிருக்கிறது.
இதற்கு விவரணம், காரணம், நிரூபணம் என்ற செயல் விளக்கங்களோ, அறிவியல் கூறுகளுடன் ஆய்ந்து விளக்கங்கள் ஆதாரப்பூர்வமாக தருவதற்கோ சாத்தியம் இல்லாததாக இருக்கிறது ஆனால் இவை உண்மையில் நடப்ப்வை, நடந்தவை, நடக்கும்.