ilakkiyainfo

காத்தான்குடியில் எட்டுவயது சிறுமி கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை (வீடியோ)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமையன்று (10) 8 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை இன்று வியாழக்கிழமை (11) கைது செய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (10) மாலை மேற்படி சிறுமியின் தந்தையினது பலசரக்கு கடைக்கு சென்றுள்ள சந்தேக நபர் மழை பெய்வதால் குடையொன்றை கேட்டுள்ளார்.

child_abused_002இதன்போது அந்நபருக்கு குடையொன்றை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியையும் கூடவே அனுப்பியதுடன், சந்தேகநபரின் சகோதரியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு, குடையை எடுத்து வருமாறு சிறுமிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு இந்நபருடன் சென்ற சிறுமி வீடு வந்து சேராததால் சிறுமியின் குடும்பத்தினரும் அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமியை காணவில்லையென பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

மாலை 7மணியளவில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். வெதகெதரவின் தலைமையிலான பொலிஸார், குறித்த சந்தேக நபரின் சகோதரியின் வீட்டை உடைத்துப் பார்த்த போது பை ஒன்றினுள் சிறுமியின் கை கால் மற்றும் வாய் கட்டப்பட்டு கட்டிலுக்கு கீழே மயக்கமான நிலையில் போடப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

உடனடியாக சிறுமி காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் வியாழக்கிழமை (11) அதிகாலை செங்கலடி- பதுளை வீதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்திருக்கலாமென சந்தேகிப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையெனவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

கடத்தப்பட்ட சிறுமியை மீட்பதற்கு ஒன்பது பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி விசாரணை கொழும்பிலிருந்து சி.ஐ.டி.விரைவு; மூன்று சம்பவங்கள் குறித்தும் விசேட அவதானம்

11-09-2014
குரு­ணாகல், வெல்­லவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கனே­வத்த, அம்­ப­கொ­ல­வெவ -பன்னவ சந்­திக்கு அருகில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த நாலரை வயது சிறுமி பமாரா கேசனி விஜேகோன் அடை­யாளம் தெரி­யாத ஒரு­வரால் அல்­லது ஒரு குழு­வி­னரால் கடத்­தப்­பட்ட சம்­பவம் குறித்து குருணாகல் பொலிஸ் வல­யத்­துக்கு உட்­பட்ட ஒன்­பது பொலிஸ் நிலை­யங்கள் ஊடாக விஷேட விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் விசா­ரணை மேற்­கொள்ளும் பிர­தான பணி வெல்­லவ பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து கொழும்­பி­லி­ருந்து சென்ற விஷேட குற்றப் புல­னாய்வுப் பிரிவின் குழு­வி­ன­ருக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரிக்கு குறிப்­பிட்டார்.

இந் நிலையில் நேற்று பிற்­பகல் வரையில் சிறுமி தொடர்பில் சரி­யான தகவல் ஒன்றும் கிடைத்­தி­ராத நிலையில் சிறு­மியின் பெற்றோர் உள்­ளிட்ட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­தா­கவும் கேசரியிம் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண சுட்­டிக்­காட்­டினார்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரின் பிர­தான விசா­ர­ணையில் க.டந்த 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை குரு­ணாகல் பொலிஸ் வலை­யத்தின் பொல்­க­ஹ­வெல பொலிஸ் பிரிவில் உள்ள உட­வல தேவா­லய வீதியில் 6வயது, நாலரை வயது சிறு­மிகள் இரு­வரை கடத்தும் முயற்­சி­யொன்று தோல்­வியில் முடி­வடைந்­தி­ருப்­ப­தா­கவும் அந்த சம்­பவத்­துக்கும் வெல்­லவ சம்­பவத்­துக்கும் தொடர்­புகள் உள்­ளதா என புல­னாய்வுப் பிரி­வினர் ஆராய்ந்து வரு­வ­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

கடந்த ஞாயி­றன்று இரவு பொல்­க­ஹ­வெல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட உட­வல தேவா­லய வீதியில் உள்ள கடற்­படை வீரர் ஒரு­வரின் வீட்­டுக்கு சென்­றிருந்த அடையாளம் தெரி­யாத நபர் ஒருவர் அவரது நாலரை வயது பெண் பிள்­ளையை கத்த்த முற்­பட்டு அந்த வீட்டின் கத­வ­ருகே ஒழிந்து இருந்­துள்ளார்.

இந் நிலையில் அந்த நபரை கடற்­படை வீரரின் மனைவி கண்டு சத்த­மி­டவே அங்­கி­ருந்து அந்த நபர் தப்பிச் சென்­றுள்ளார். இதனை தொடர்ந்து அன்­றைய தினமே அப்­ப­கு­தியில் உள்ள மற்­றொரு வீட்­டுக்கு சென்­றுள்ள நபர் அங்கு பெற்­றோ­ருடன் உறங்­கிக்­கொண்­டி­ருந்த 6 வயது பெண் பிள்­ளையை கடத்திச் செறுள்ளார்.

அந்த பிள்ளை சத்­த­மிட்­டதில் வீட்டில் இருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் குறித்த சிறுவனை கைவிட்டு சந்­தேக நபர் தப்பிச் சென்­றுள்ளார்.

இது தொடர்பில் பொல்­க­ஹ­வெல பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்கொண்­டு­வரும் நிலையில் சந்­தேக நபருடை­யது என சந்­தே­கிக்­கப்­படும் பாதணி ஜோடி ஒன்றை மீட்­டுள்­ளனர்.

இந் நிலை­யொ­லேயே வெல்­லவ சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்­வா­றா­யினும் பொல்­க­ஹ­வெல சம்­பவத்­துக்கு மேல­தி­க­மாக மேலும் இரு விட­யங்கள் குறித்தும் விசா­ரணைக் குழு­வி­னரின் கவனம் திரும்­பி­யுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு குறிப்­பிட்டார்.

கடத்­தப்­பட்­டுள்ள நாலரை வயது சிறு­மியின் தாய் திருஷ்டி ஒன்­றினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவ­ருக்கு சிகிச்சை வழங்க நாவ­லப்­பிட்­டி பிரதேசத்திலி­ருந்து மந்­தி­ர­வாதி ஒருவர் அடிக்­கடி வருகை தந்து சென்­ற­தா­கவும் அவர் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது.

அத்­துடன் கடத்தல் சம்­பவம் இடம்­பெற்ற தினத்தின் பகல் பொழுதில் புதி­தாக நபர் ஒருவர் வீட்­டுக்கு வந்­த­தா­கவும் அவர் நபர் ஒ­ரு­வரின் பெயரை குறிப்­பிட்டு அவரை தெரி­யு­மா? என விசா­ரித்­த­தா­கவும் அவ்­வா­றான ஒருவர் தொடர்பில் தமக்கு தெரி­யாது என தான் கூறிய­தா­கவும் கடத்­தப்­பட்ட சிறு­மியின் தந்­தையின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்த விடயம் குறித்து சிறு­மியின் தந்தை வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்தில் வந்த நபர் தன்னை கிரி­பாய பிர­தே­சத்­தவர் என அடி­யா­ளப்­ப­டுத்­தி­ய­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலையில் குறித்த நபரைகண்­ட­றியும் முயற்­சி­யிலும் பொலிஸார் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் கடத்­தலில் ஈடு­பட்ட நபர் ஏதேனும் மான­சீக நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக இருப்­பாரோ என எண்ணும் பொலிஸார் கடத்­த­லுக்­கான கார­ணத்தை அறி­யவும் சிறு­மியை மீட்­கவும் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

வடமேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே­சிரி குண­வர்­தன, குரு­ணாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­சரத் குமார ஆகி­யோரின் நேரடி கண்­கா­ணிப்பின் கீழ் குரு­ணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஜயந்த சம­ரகோன், உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஏ.டப்ளியூ சில்வா ஆகி­யோரின் ஆலோ­ச­னையின் கீழ் வெல்­லவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி அனுர குண­வர்­தன தலை­மை­யிலும், ரம்­ப­ட­கல, மஹவ, பொல்­க­ஹ­வெல, குரு­ணாகல், நாரம்­மல, வாரி­ய­பொல , கொக்­க­ரெல்ல உள்­ளிட்ட பொலிஸ் நிலை­யங்கள் ஊடாக விசா­ர­ணைகள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் விசா­ர­ணை­க­ளுக்­காக குரு­ணாகல் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் ஒன்றும் பயன்­ப­டுத்­தப்­படும் நிலையில் தட­யவியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் லஹிரு கசுன் தலைமை­யி­லான குழு­வினர் தடய ஆய்­வு­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

சிறுமியை கடத்த பொலித்தீன், நுளம்பு வலை என்­ப­வற்றை வெட்ட பயன்­ப­டுத்­திய சிவப்பு நிற கைப்­பி­டியை கொண்ட கத்­தரிக்கோலை மீட்­டுள்ள பொலிஸார் சிறு­மியின் தாயின் இரவு நேர உடை ஒன்று வெட்­டப்­பட்ட நிலையில் இருந்­த­தாக குறிப்­பிட்­டனர்.

அந்த இரவு நேர உடை கடத்­தப்­பட்ட சிறுமி நித்­திரை செய்த கட்­டி­ல­ருகே ஜன்­னலில் போடப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அத­னையே கடத்தல் காரர் வெட்டி இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

சம்­பவ தின­மான நேற்று முன் தினம் அதிகாலை 2.00 மணிக்கே சிறுமி காணாமல் போனமை குறித்து பெற்றோர் அறிந்துள்ளதுடன் அன்றைய தினம் இரவு 9.30 மணியளவிலேயே தாம் நித்திரைக்கு சென்றிருந்ததாக பெற்ரோர் குறிப்பிட்டுள்ளனர்.

 

வீட்டின் படுக்கை அறை சுவர் கறுப்பு நிற பொலித்தீனினால் மறைக்கப்பட்டிருந்த நிலையில் அதனையும் கட்டிலுக்கு போடப்பட்டிருந்த நுளம்பு வலையினையும் வெட்டியே சிறுமி கடத்தப்பட்டிருந்தாள்.

இந் நிலையில் சிறுமி பமாரா கேசனி விஜேகோன் கடத்தப்பட்டு 42 மணித்தியாலங்கள் கடந்த நிலையிலும் அவர் கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version