ilakkiyainfo

சிறுவனின் கண்களை கரண்டியால் தோண்டியெடுத்த தாய்க்கும் உறவினர்களுக்கும் 30 வருட சிறை: மெக்ஸிக்கோ நீதிமன்றம் தீர்ப்பு

உலகம் அழி­வ­டை­வது தொடர்­பில் சாத்­தா­னை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மதச்­ச­டங்­கொன்றின் போது, தனது 5 வயது மகனின் கண்­களை கரண்­டி­யொன்றால் தோண்­டி­யெ­டுத்த தாயொ­ரு­வ­ருக்கும் அவ­ரது 5 உற­வி­னர்­க­ளுக்கும் மெக்­ஸிக்கோ நீதி­மன்­ற­மொன்று தலா 30 வருட சிறைத்­தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நெஸ­ஹுவல்­கொ­யொடல் நகரைச் சேர்ந்த பெர்­னாண்டோ கலெப் அல்­வ­ரடோ றியொஸ் என்ற சிறு­வனே தனது சொந்த தாயா­ரான மரி­யோடல் கார்மென் கார்­சியா றியொஸ்ஸால் கண்­களை இழந்­துள்ளான்.

showImageInStoryசிறு­வனின் கண்­களை தோண்டி எடுப்­ப­தற்கு அவ­னது தாய்க்கு அவனது இரு மாமன்மார், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் உத­வி­யுள்­ளனர்.

இச்­ச­டங்­கா­னது சாத்­தானை தமக்கு நெருக்கமாக்கி தம்மை பாரிய பூமி­ய­திர்ச்­சி­யொன்­றி­லி­ருந்து பாது­காக்கும் என சிறு­வனின் குடும்­பத்­தினர் நம்­பி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது.

சிறு­வனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அய­ல­வர்கள், சிறுவனின் தாயையும் உறவினர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்ளும் முகமாக 11ஆவது மாடியிலிருந்து குதித்த பெண் – அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைப்பு
12-09-2014

 
தற்­கொலை செய்து கொள்ளும் முக­மாக மருத்­து­வ­ம­னை­யொன்றின் 11 ஆவது மாடி ஜன்­னலால் குதித்த பெண்­ணொ­ருவர் கீழே நிறுத்­தப்­பட்­டி­ருந்த வேனொன்றின் மீது விழுந்­ததால் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர்­தப்­பிய சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஸெஜியாங் மாகா­ணத்தில் தெய்­ஸொயு நக­ரி­லுள்ள மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெறு­வ­தற்­காக விஜயம் செய்த பெண்ணே இவ்­வாறு மாடி­யி­லி­ருந்து குதித்து உயிர் தப்­பி­யுள்ளார்.

வேனின் மீது விழுந்த அவ­ருக்கு எலும்பு முறி­வுகள் ஏற்­பட்­டி­ருந்த போதும் அவ­ரது உயி­ருக்கு எது­வித ஆபத்­து­மில்லை என கூறப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்ட வேனின் உரி­மை­யா­ள­ரான யாங் விப­ரிக்­கையில், மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தாயாரை பார்ப்­ப­தற்­காக வேனை மருத்துவமனையின் அருகில் நிறுத்தி விட்டு சென்ற போதே இந்த சம்­பவம் இடம்­பெற்­ற­தா­கவும் அந்தப் பெண் குதித்த போது தாம் வேனில் இருக்காமல் தப்பியுள்ளதை தமது அதிர்ஷ்டமாக உணர்வதாகவும் கூறினார்.

வாயை தைத்து கைகளை சிலுவையில் அறைந்து விநோத உண்ணாவிரத போராட்டம்
12-09-2014

பரா­கு­வேயை சேர்ந்த 3 பஸ் சார­திகள் தாம் நீதி­யற்ற முறையில் தமது வேலை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தமது வாயை தைத்தும் தமது கைகளை சிலு­வையில் ஆணி­களால் அறைந்தும் விநோத உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அஸன்­சியன் நகரின் புற­ந­கரப் பகு­தி­யான சான் லொரென்­ஸோவைச் சேர்ந்த எல்­வியோ கிறிஸ்­டல்டோ (39 வயது), எலி­ஜியோ மார்­ரினெஸ், கிளென்­மென்ட் ­லொ­வெரா ஆகி­யோரே குறைந்த மணித்­தி­யால நேரத்­துக்கு பணி­யாற்ற மறுத்­த­மைக்­காக தாம் பணி­நீக்கம் செய்­யப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இவ்­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

எல்­வி­யோவும் எலி­ஜி­யோவும் தமது கைகளை சிலு­வை­களில் அறைந்த அதே­ச­மயம் கிளென்மென்ட் தனது வாயை தைத்­துக்­கொண்­டுள்ளார்.

அவர்­க­ளுக்கு வலியை உணராமல் இருக்க வலிநீக்கி மருந்துகள் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Exit mobile version