யாழ். தும்பளை கிழக்கு மூர்க்கம் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் முகத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் இவர் சுமார் 45 வயது மதிக்கப்பத்தக்கவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உடலில் ஆடைகள் எதுவுமற்ற நிலையிலேயே சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை (12) அதிகாலை ஊர்காவற்றுறை மண்கும்பான் பகுதியில் கரையொதுங்கிய சடலம், இந்தியா இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவரான எம்.ஞானப்பிரகாசம் என்பவருடையது என அடையாளங்காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலத்தின் கைகளில் இருந்த பச்சை குத்திய அடையாளம், சடலம் ஆகியவற்றின் புகைப்படங்களை யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னரே, இந்திய மீனவரது சடலம் என உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் வெடிவிபத்து – பத்துவயதுச் சிறுவன் படுகாயம்
13-09-2014
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வெடிப்பு சம்பவத்தில் 10 வயது சிறுவன் காயமடைந்து கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை குறித்த வெடிப்பு சம்பவம் பாரதிபுரம் அரை ஏக்கர்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை குறித்த சிறுவன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றள்ளது. வீட்சின் பின்பகுதியில் குப்பைகளை எரியூட்டிக்கொண்டு இருந்த வேளை வெடிப்பு இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.
சம்பவத்தில் 10 வயதுடைய ராஜ்குமார் டினோசன் எனும் சிறுவன் கழுத்து பகுதியில் காயமடைந்து கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.