ilakkiyainfo

வெடிச் சத்தத்துக்கு மிரளாத குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம் (வீடியோ)

“மூச்” என்ற வார்த்தையை தனது படத்திற்கு பெயரா வச்சிருக்காரு நம்ம பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி. இந்த படம் ஒரு திகில் பேய் படமாக நம்மள பயமுறுத்தும்னு சொல்லியிருக்காறு வினுபாரதி.

 இந்த படத்தில். நிதின், மிஷா கோஷல், சுஹாசினி நடிச்சிருக்காங்க.. இந்த படத்தினுடைய பாடல் வெளியீட்டு விழா கடந்த 11ம் ஆம் திகதி நடந்ததுங்க அப்ப இயக்குனர் வினு பாரதி படப்பிடிப்பை பற்றி சுவாரஸ்யமா பேசினார். அது என்னன்னு கேட்டப்ப ரெம்பவே சிரிப்பா இருந்தது அவர் கூறியதாவது…

மூச் படம் இரண்டு குழந்தைகளுக்காக போராடும் ஒரு தாய் மற்றும் ஒரு பேயின் கதை படத்தின் ஷூட்டிங் கிருஷ்ணகிரி அருகில் ஒரு கிராமத்தில் நடந்தது. ஒரு தென்னமரத் தோப்பில் படப்பிடிப்பு நடத்தினோம்.

கதைப்படி இறந்து பேயாக அலையும் கேரக்டரில் சுஹாசினி நடித்தார். இதற்காக அவரது முகத்தில் பேய் மேக் அப் போட்டு அது காய்வதற்காக தோட்டத்தின் ஒரு பகுயில் வெயில் அடித்த இடத்தில் உட்கார வைத்தோம்.

அப்போது தோட்டத்தில் சுற்றித்திரிந்து சுமார் 50 குரங்குகள் விழுந்தடித்து கூச்சல் போட்டபடியே வெளியே ஓடியது.

சுஹாசியின் மேக்அப்பை பார்த்துதான் அவைகள் மிரண்டு ஓடின. பின்னர் தோட்டக்காரர் வந்து “சார் நான் வெடிகுண்டு வைத்துமே போகாத குரங்குகள் உங்கள் நடிகையை பார்த்து ஓடிவிட்டேதே. இன்னும் நான்கு தோட்டத்தில் விரட்ட வேண்டும். அந்த பொண்ணை கொஞ்சம் அனுப்பி வையுங்க” என்றார்.

நாங்க சினிமா எடுக்க வந்தமா? குரங்கு விரட்ட வந்தமா என்று கேட்டு அவரை விரட்ட வேண்டியதாகிவிட்டது, என்றார்.

நடிகை ரோஜாவுக்கு கத்திக்குத்து. முதல் மரியாதை பிரச்சனையால் நடந்த விபரீதம்
13-2014

203863126004தெலுங்குதேசம் கட்சியினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நடிகையும், தனது கட்சி எம்எல்ஏவுமான ரோஜாவிடம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மேகன் ரெட்டி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

சித்தூர் மாவட்டம், நகரியில் வெள்ளிக்கிழமை கெங்கம்மா கோயில் திருவிழா நடைபெற்றது. இரவு நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியின்போது தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் கடைசி ஆரத்தியை காட்ட நடிகை ரோஜா தயாரானார்.

அப்போது அவர் ஆரத்தி காட்டக்கூடாது என தெலுங்குதேசம் கட்சியினரும் விழாக்குழுத் தலைவர் குமரேச முதலியாரும் ஆட்சேபித்தனர். அதை அங்கிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சேபித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த அமளியில் ரோஜாவின் கைகயிலிருந்து ஆரத்தி தட்டு பறிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ரோஜா தாக்கப்பட்டதால் அவர் காயமடைந்தார்.

இந்நிலையில் ரோஜாவை சனிக்கிழமை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நலம் விசாரித்தார். ரோஜா தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Exit mobile version