ilakkiyainfo

முறிகண்டியில் பஸ் மிதிப் பலகையிலிருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழப்பு (வீடியோ)

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இன்று முற்பகல் 11.45 அளவில் தனியார் பஸ்சின் மிதிப் பலகையில் இருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்சில் பயணித்த 19 வயதான இளைஞனே முறிகண்டி கோயிலுக்கு அருகே தவறிவிழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த இளைஞன் வவுனியா கோவில் புளியங்குளம் பகுதியச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

a

இதேவேளை, மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பஸ்சொன்று, சைக்கிளில் வீதியை கடந்துகொண்டிருந்த ஒருவர் மீது இன்று மாலை 5 மணியளவில் மோதியுள்ளது.

பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கோட்டக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 யாழ். – கொழும்பு தனியார் சொகுசு பஸ்ஸில் 13.5 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது:சாரதி, நடத்துனர் உட்பட மூன்றுபேர் கைது
15-09-2014

kanchaயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்­புக்கு பய­ணிகள் சேவையில் ஈடு­படும் சொகுசு பஸ்­வண்­டிகள் ஊடாக கேரள கஞ்சா கடத்­தப்­படும் வர்த்­தகம் ஒன்­றினை பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் முறி­ய­டித்­துள்­ளனர்.

நேற்று முன்தினம் இரவு யாழி­லி­ருந்து கொழும்பு நோக்கி பய­ணித்த அதி சொகுசு பஸ் வண்டி ஒன்­றி­லி­ருந்து 13.5 கிலோ கிராம் நிறை­யு­டைய கேரள கஞ்­சா­வினை கன­க­ராயன் குளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இடத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் சுற்­றி­வ­ளைத்து சந்­தேக நபர்கள் மூவரையும் கைது செய்­த­தன் மூலம் குறித்த வர்த்­தகம் தொடர்பான தகவல்கள் வெளி­யா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் கடமை நேர சிரேஷ்ட அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை அதி­கா­ரி­யான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஜே.கே.ஆர்.ஏ.பெரே­ரா­வுக்கு நேற்று முன் தினம் இரவு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் குறித்த திடீர் நடவ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

தமக்கு கிடைத்த தகவ்லின் பிர­காரம் ஏ.9 வீதியில் கன­க­ராயம் குளம் பொலிஸ் பிரிவில் தற்­கா­லிக வீதி சோதனை தடை ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டு குறித்த பஸ் வண்டி சோதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன் போதே பஸ் வண்­டி­யி­லி­ருந்து 25 இலட்சம் ரூபா வரை பெறு­மதி கொண்­டது என கணிக்­கப்­படும் 13.5 கிலோ கேரள கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பஸ் வண்­டியின் சாரதி, நடத்­துடன் மற்றும் பிறிதொரு நப­ரையும் கைது செய்த விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் அவர்­க­ளையும் கஞ்­சா­வையும் மேல­திக விசா­ரணை நடவ­டி­கை­களின் பொருட்டு கன­க­ரா­யன்­குளம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இந்­தி­யா­வி­லி­ருந்து கடல் மார்க்­க­மாக கடத்­தப்­படும் கேரள கஞ்சா பய­ணிகள் பிர­யாண பஸ்­வண்­டிகள் ஊடாக கொழும்­புக்கு கடத்­தப்­ப­டு­வது தொடர்பில் ஏற்­க­னவே பொலி­ஸா­ருக்கு தகவல் கிட்­சைத்­தி­ருந்த நிலை­யி­லேயே இந்த நடவ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக நடவ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர்  தெரி­வித்தார். சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை கன­க­ராயன் குளம் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இதே­வேளை பஸ் வண்டி சோத­னைக்கு உட்படுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பஸ் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த பிரயாணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததாக தெரியவருகின்றது.

இந்த பஸ்ஸில் பயணித்த பிரயாணி ஒருவர் கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நான் பயணித்த சொகுசு பஸ்ஸை 100 க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்டையினரும் பொலிஸாரும் கனகராயன் குளப்பகுதியில் மறித்தனர்.

இதில் பயணித்த 45 பயணிகளையும் அவர்கள் இறக்கியதுடன் பஸ்ஸை சோதனையிட்டனர். பஸ்ஸிலிருந்து கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது. பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட பயணிகளை வேறு பஸ்களில் ஏற்றி அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் சில மணி நேரம் காத்திருந்து பின்னால் வந்த பஸ்களில் ஏறி நின்ற வண்ணமே கொழும்பு நோக்கி நாம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

Exit mobile version