ilakkiyainfo

‘காமுகனின்’ பிடியில் சிக்கி சீரழிந்து உயிரிழந்த சீமா! காத்தான்குடியை சோகத்தில் மூழ்கடித்த துயரம்

கடந்த புதன்­கி­ழமை (10.9.2014) அன்று மாலை 7மணி­யி­ருக்கும் காத்­தான் குடி முழு­வதும் பர­ப­ரப்­பான செய்­தி­ யொன்று வேக­மாக அடி­பட்­டது. காத்­தான்­குடி முதலாம் குறிச்­சியைச் சேர்ந்த சிறு­மி­யொ­ருவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார் என்ற செய்­தியே அது. இந்தச் செய்தி அனை­வ­ரையும் சோகப்­பே­ர­லைக்குள் மூழ்­கச்­செய் ­தது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் காத்­தான்­குடி பொலிஸ் பிரி­­விற்­குட்­பட்ட மட்­டக் ­க­ளப்பு, காத்­தான்­குடி எல்­லை­யி­லுள்ள மஞ்­சந்­தொ­டுவாய் ஜின்னா வீதி­யி­லேயே ஈவி­ரக்­க­மற்ற இந்த அகோ­ர­மான கொடூரம் இடம் பெற்­றுள்­ளது.

இந்த வீதியில் வசிக்கும் மீரா­சாஹிப் சகா ப்தீன் என்­ப­வருக்கு வீட்­டோடு சேர்ந்து பல­ச­ரக்கு கடை­யொன்றும் உள்­ளது. அவ­ருக்கு மூன்று பிள்­ளைகள். மூத்த பிள்ளை பெண் பிள்ளை திரு­மணம் செய்து விட்டார். மற்­றை­யவர் ஆண் பிள்ளை அவர் வெளி­நாட் டில் தொழில் புரி­கின்றார்.

மூன்­றா­வது மகள் பெயர் பாத்­திமா சீமா. வயது ஒன்­பது. சகாப்­தீ­னுக்கு இரண்­டா­வது பிள்ளை கிடைத்து 12 வருட இடை­வெ­ளி யின் பின்­னர்தான் இவர் பிறந்தார். இந்த மூன்­றா­வது பிள்­ளை­யான பாத்­திமா சீமா மீது பெற்றோர், சகோ­தரி, சகோ­தரன் என அனை­வரும் மிகுந்த பாசம் வைத்­தி­ருந்­தனர்.

seema-2இந்த மூன்­றா­வது பிள்­ளைக்­காக வீடொன்றை கட்­டு­வ­தற்­கா­கவே சகோ­தரர் வெளி­நாடு சென்­றுள்ளார். பாத்திமா சீமா காத்­தான்­குடி, முதலாம் குறிச்சி ஸாவிய்யா மகளிர் வித்­தி­யா­ல­யத்தில் தரம் மூன்றில் கல்வி கற்­கின்றார். அதே குறிச்சி மீரா­பள்­ளி­வாயல் வீதி­யி­லுள்ள இப்­றா­கி­மிய்யா குர்ஆன் மத­ர­சாவில் குர்ஆன் ஓதி இறு­தி­யாண்டு பரீட்­சைக்­காக காத்­தி­ருக்­கின்றார்.

சம்­பவ தினத்­திற்கு முன்னர் ஓரிரு தினங்­க­ளாக சீமா­வுக்கு பல்வலி­யென்­பதால் பாட­சா­லைக்கோ, அல்­லது ரீயூசன் வகுப்­புக்கோ, குர்ஆன் மத­ர­சா­வுக்கோ செல்­ல­வில்லை. வீட்டிலேயே இருந்தார். அன்று மாலை 4 மணி­யி­ருக்கும் மழை பெய்து கொண்­டி­ருந்­தது.

இந்த நேரம் சீமாவின் தந்தை சகாப்­தீனின் மாமியார் பல­ச­ரக்கு கடையை (சீமாவின் அம்மம்மா) கவ­னித்துக் கொண்­டி­ருந்தார். அதே நேரம் சீமாவின் தந்தை சகாப்தீன் குட்­டித்­தூக்­க­மொன்றில் இருந்தார்.

சீமாவின் தாய் புனித அஸர் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்தார். அப்­போது சீமாவின் வீட்­டி­லி­ருந்து ஓரிரு வீட்­டுக்கு அப்பால் வசிக்கும் அயல் வீட்டாரின் சகோ­த­ர­ரான 35 வய­து­டைய எம்.ஐ.றமழான் என்­பவர் சீமாவின் வீட்­டோடு இருக்கும் கடைக்கு பீடி வாங்­கு­வ­தற்­காக வந்­து­ ச­காப்­தீனின் மாமியா­ரிடம் பீடியை வாங்கிக் கொண்டு மழை பெய்­ததால் கடையின் ஓர­மாக ஒதுங்கி நின்று கொண்­டி­ருந்தார்.

அப்­போது பாத்­திமா சீமா தனது குடையை வைத்துக் கொண்டு பலசரக்கு கடைக்கு முன்னாள் விளை­யாடிக் கொண்டு நின்றார்.

தன்னை தனது சகோ­த­ரியின் வீட்­டுக்கு சீமாவை குடையில் கொண்டு போய் விடு­மாறு றமழான் கேட்­கவே கடைக்குள் இருந்த சீமாவின் அம்­மம்மா (சகாப்­தீனின் மாமியார்) விளை­யாடிக் கொண்­டி­ருந்த சீமாவை பார்த்து கடைக்கு பீடி வாங்க வந்த இந்த றமழான் என்­ப­வரை குடையில் கொண்டு போய் விட்டு விட்டு வா என்று சொன்­ன­வுடன் எது­வு­ம­றி­யாத அந்த பிஞ்சு மனது குடையை கொடுத்து தானும் அந்தக் குடைக்குள் சென்­றது.

அகோரம் நடக்­கப்­போ­கின்­றது என்­பதை எவரும் சற்றும் அறிந்­தி­ருக்­க­வில்லை. உதவும் மனப்­பாங்­குடன் இந்த மழையில் நிற்கும் அய­ல­வரின் சகோ­தரன் என்­ப­தற்­காக குடை­யுடன் பேத்­தியை அனுப்­பு­கிறார் சீமாவின் அம்­மம்மா.

குடை­யுடன் றம­ழானை விடு­வ­தற்­காக சென்ற சீமா வீடு திரும்­ப­வில்லை. நேரம் செல்ல தொழு­கையை முடித்த சீமாவின் தாய் சீமாவைத் தேட ஆரம்­பிக்­கின்றார்.

சீமா குடை­யுடன் சென்று றம­ழானை விட்டு விட்டு வழ­மை­யாக விளை­யாடும் அயல் வீட்டு பிள்­ளை­க­ளுடன் விளை­யாடிக் கொண்­டி­ருக்­கலாம் என நினைத்து சீமாவின் தாய் அங்கு சென்று சீமாவை தேடினார். ஆனால் சீமா வர­வில்லை சீமாவின் தாய்க்கு பதற்­ற­மா­கின்­றது எங்கு போனாள் சீமா? என்று அங்­கு­மிங்கும் தேடினார். சீமாவைக் காண­வில்லை.

குட்­டித்­தூக்­கத்­தி­லி­ருந்த கண­வரை  (சீமா வின் தந்­தையை) அவ­ச­ர­மாக எழுப்பி ‘சீமா குடையில் றம­ழானை விட்டு விட்டு வரச்­சென்றார். ஆனால் இன்னும் வீடு வர­வில்லை உடனே போய் பாருங்கள்’ என்று சகாப்­தீனை கூற கண­வரும் பிள்­ளையின் தந்­தை­யு­மான சகாப்தீன் தூக்­கத்­தி­லி­ருந்து எழும்பி அவ­சர அவ­ச­ர­மாக அங்­கு­மிங்கும் தேடிச் செல்­கின்றார். சீமா கிடைக்­க­வில்லை நிலை இன்னும் பதற்­ற­மா­கின்­றது.

பின்னர் தந்தை சிமா, குடை­யுடன் அழை த்துச் சென்ற றம­ழானின் அய­ல­வரின் வீட்­டு க்கு சென்ற போது அந்த வீடு மூடிக்­கி­டந் துள்ளது.

இந்நிலையில் றம­ழானை அந்த வீட்­டுக்கு முன்னர் சீமாவின் பெற்றோர் கண்ணுற் றனர். உடனே எங்­க­ளது மகள் சீமா எங்கே? எனக் கேட்­டபோது. சீமா ஒரு நீலக் கலர் முச்­சக்­கர வண்டி சார­தி­யுடன் பேசிக் கொண்டு நின்றாள். அதில் போய் இருக்க கூடும் என றமழான் சீமாவின் பெற்­றோ­ரி டம் அலட்சியமாகக் கூறி விட்டு தலை­மறை­வாகி விடு­கிறார்.

நேரம் மாலை 5.30 மணி­யா­கின்­றது. சீமாவை காண­வில்லை என்ற செய்தி முழு குடும்­பத்­திற்கும் பரி­மா­றப்­ப­டு­கின்­றது. சீமாவின் தந்தை காத்­தான்­குடி பொலி­ஸூக்குச் சென்று இரண்டு போக்­கு­வ­ரத்து பொலி­ஸா­ரையும் கூட்டி வந்து விட­யத்தைக் கூறி சீமாவை குடை­யுடன் அழைத்துச் சென்ற அந்த வீட்டைக் காட்­டிய போது அந்த இரண்டு பொலி­ஸாரும் வீட்டை திறக்க முற்­ப­ட­வில்லை.

பின்னர் காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி வெத­கெ­த­ர­வுக்கு தகவல் கிட்­டவே பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஸ்தலத்­திற்கு விரைந்து வந்து குறித்த றம­ழானின் சகோ­த­ரியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பொலிஸார் மற்றும் குடும்­பத்­தினர் பாத்­திமா சீமாவை தேடினர்.

அந்த வீட்­டுக்­குள்ளே இரண்டு கட்­டில்கள் அதில் ஒரு கட்­டி­லுக்கு கீழே உரப்பை ஒன்­றுக்குள் சீமா கட்­டப்­பட்டு கிடப்­பதை கண்ட சீமாவின் சாச்சா (சித்­தப்பா) அந்த பையை  திறந்து பார்த்த போது அழ­கான சீமா, இரத்தம் தோய்ந்த முகத்­தோடு மயக்­க­ம­டைந்த நிலையில் காணப்­ப­டு­கின்றார்.

சீமாவின் தாய், தந்தை, குடும்­பத்­தினர் அழுது புலம்­பு­கின்­றனர். சீமாவின் உடம்­பி­லி­ருந்து இரத்தம் வரு­கின்­றது. சீமாவின் வாய்க்குள் புட­வையை புகுத்தி கை மற்றும் கால்கள் கட்­டப்­பட்ட நிலையில் காணப்­பட்டார்.

உடனே கட்­டுக்­களை அவிழ்த்து சீமாவை காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர். பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்ற போது சீமா உயி­ரி­ழந்து விட்டாள் என்ற செய்­தியே வந்­தது.

காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஐ.பி. வெத­கெ­தர தலை­மையில் விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­து­கின்­றனர். எது­வு­ம­றி­யாத சிறிய குழந்தை சீமாவை  ஈவி­ரக்­க­மின்றி பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்து படு­கொலை செய்து விட்டு தலை­ம­றை­வா­கிய சந்­தேக நப­ரான றம­ழானை தேடி காத்­தான்­குடி பொலிஸார் வலை விரித்­தனர்.

இதன் சந்­தேக நப­ரான எம்.ஐ.றமழான் காத்­தான்­கு­டியை பிறப்­பி­ட­மாக கொண்­டவர், இவர் ப­தி­யத்­த­லாவ பொலிஸ் பிரி வில் ஒரு சிங்­கள பெண்ணை திரு­மணம் செய்து, இரண்டு பிள்­ளை­க­ளுண்டு.

இவர் ஹோட்­டலில் டீ தயா­ரிப்­பவர். இவ­ரது தாய் தந்தை மற்றும் சகோ­த­ரர்கள் அனை­வ­ருமே காத்­தான்­கு­டி­யி­லேயே வசிக்­கின்­றனர். இந்தக் கோர­மான சம்­பவம் இந்த சந்­தேக நபரின் சகோ­த­ரியின் வீட்­டி­லேயே நடந்­துள்­ளது.

சம்­பவ நேரம் றம­ழானின் சகோ­தரி றம­ழா­னு­டைய பதி­யத்­த­லாவ வீட்டில் இருந்துள்ளார். இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­தியே இந்த கொடூரம் நடந்­துள்­ளது.

துரி­த­மாக இயங்­கிய காத்­தான்­குடி பொலிஸார் சந்­தேக நப­ரான றம­ழானை தேடி அவ­ரது பதி­யத்­த­லாவ வீட்­டுக்கு வியா­ழக்­கி­ழமை அதி­காலை வேளையில் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து எஸ்.ஐ.சந்­தி­ர­சேன எனும் பொலிஸ் அதி­கா­ரியின் தலை­மையில் சென்­ற­போது அங்கு சந்­தேக நபர் தூக்கத்திலி­ருக்­கவே அங்கு வைத்து அவரை கைது செய்து காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்­திற்கு கொண்டு வந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

விசா­ர­ணையின் போது சந்­தேக நப­ரான பாத்­திமா சீமா எனும் சிறு­மியை தான் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தையும், அதன் பின்னர் கொலை செய்­த­தையும் ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

சந்­தேக நப­ரான மேற்­படி றமழான் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் தான் மஹி­யங்­க­னை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்றில் டீ தயா­ரிப்­ப­வ­ராக தொழில் புரிந்­து­வ­ரு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி சந்­தேக நபர் கடந்த 1998ஆம் ஆண்டு சிறுவன் ஒரு­வனை பாலியல் துஸ்­பி­ர­யோகம் செய்­த­தா­கவும் அந்த குற்­றத்­திற்­காக மூன்று மாதங்கள் சிறையில் இருந்­த­தா­கவும் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் தெரி­வித்­துள்ளார்.

இதே பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குள்­ளான பாத்­திமா சீமாவின் சடலம் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து பொலன்­ன­றுவை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்கு சட்ட வைத்­திய நிபு­ண­ரினால் சடலம் பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

சிறு­மி­யான பாத்­திமா சீமா கழுத்து நெரிக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட பின்னர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்ளார் என சட்ட வைத்­திய நிபுணரின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரேத பரி­சோ­த­னையின் பின்னர் சிறு­மியின் ஜனாசா காத்­தான்­கு­டிக்கு கொண்டு வரப்­பட்டு பெருந்­தி­ர­ளான மக்கள் ஜனாசா தொழு­கையை நிறை­வேற்ற பாத்­திமா சீமாவின் ஜனாசா வியா­ழக்­கி­ழமை இஸாத்­தொ­ழு­கையின் பின்னர் காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்­ஆப்­பள்­ளி­வாயல் மைய­வா­டியில் கண்ணீர் மல்க நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. பாத்­திமா சீமா சுவ­னத்து சொந்­தக்­கா­ரி­யாகி விட்டாள்.

தான் பெற்­றெ­டுக்கும் ஒவ்­வொரு பிள்­ளையும் பாது­காப்­பாக வளர்த்து அவர்­களை சிறப்­பாக வளர்த்து அவர்­களை வாழ­வைக்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் ஒவ்­வொரு பெற்­றோ­ருக்கும் உண்டு. இதையே பாத்­திமா சீமாவின் பெற்­றோரும் செய்­தனர். ஆசை­யோடும் பாது­காப்­போடும் கன­வு­க­ளோடும் வளர்த்த சீமாவின் பெற்றோர் சகோ­த­ரர்கள் அழுது துடிக்­கின்­றனர்.

எனது மகள் சீமா கல்­வியில் திற­மை­யா­னவர், அவர் மூன்றாம் தரத்தில் கல்வி கற்­றாலும் ஐந்தாம் தரம் புல­மைப்­ப­ரிசில் பரீட்சை எழு­து­வ­தற்கு இப்­போ­தி­ருந்தே தயா­ரா­கினார். அதற்­கான புத்­த­கங்­களை படிப்­பதில் ஆர்வம் காட்­டினார். ஓது­வ­திலும் அப்­ப­டித்தான்.

செல்­ல­மாக வளர்த்தோம், பாது­காப்­புடன் வளர்த்தோம், தேவை­யில்­லாமல் எங்கும் செல்­வது கிடை­யாது. தாயின் கண்­கா­ணிப்பின் கீழே இருந்து வந்தார். ஆனால் இப்­படி நடந்து விட்­டதே என்று கூறி அழு­கின்றார்.

இவ்­வா­றுதான் சீமாவின் தாயும் குடும்­பத்­த­வரும் சீமாவை நினைத்து அழுது புலம்­பு­கின்­றனர்.

சீமா அந்த வீட்டின் அந்த குடும்­பத்தின் ஒரு செல்­லப்­பிள்­ளை­யாக வளர்க்­கப்­பட்­டவள். சீமா­வுக்கு நடந்த இந்த கொடூ­ரத்­திற்­கான தண்­ட­னையை சந்­தேக நப­ரான றம­ழா­னுக்கு மரண தண்­ட­னை­யாக கொடுக்க வேண்டும், சட்டம் நீதி இவரை விடக் கூடாது.

சந்­தேக நபரின் சார்பில் சட்­டத்­த­ர­ணிகள் யாரும் நீதி­மன்றில் ஆஜ­ராக கூடாது என தெரி­வித்து கடந்த வியா­ழக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு நீதி­மன்ற கட்­டி­டத்­திற்கு முன்னாள் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்ட ஆர்ப்­பாட்டம் மற்றும் வெள்­ளிக்­கி­ழமை (12.9.2014)அன்று ஜும் ஆத் தொழு­கையின் பின்னர் காத்­தான்­கு­டியில் ஆர்ப்­பாட்­டங்கள் கண்­ட­னப்­பே­ர­ணிகள் என்­ப­னவும் இடம் பெற்­றன.

இதே வேளை சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் குறித்த சந்­தேக நபரை எதிர்­வரும் 23ஆம் திக­தி­வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்ற நீதி­பதி என்.எம்.அப்­துல்லாஹ் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிஸார் தெரி­வித்­தனர். படு­கொலை செய்­யப்­பட்ட பாத்­திமா சீமாவின் பிரே­தப்­ப­ரி­சோ­தனை அறிக்கை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கைது செய்­யப்­பட்ட இந்த சந்­தேக நபர், வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் பலத்த பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தியில் மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்­றத்­திற்கு கொண்டு வரப்­பட்டு நீதவான் நீதி­மன்ற நீதி­பதி என்.எம்.அப்­துல்லாஹ் முன்­னி­லையில் ஆஜர் படுத்­தப்­பட்­ட­போது குறித்த சந்­தேக நபரை எதிர்­வரும் 23ஆம் திக­தி­வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

இந்த சந்தேக நபருக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதன்போது நீதிமன்றத்திற்கு முன்னாள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் நீதிமன்றத்தின் கச்சேரிப்பக்கமாக இருந்த நீதிமன்ற நுழை வாயிலில் கூடி நிற்க சந்தேக நபரை பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸ் வாகனத்தில் நீதிமன்ற பிரதான நுழைவாயிலின் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

சந்தேக நபருக்கு வெள்ளிக்கிழமையன்று டி.என்.ஏ.பரிசோதனையை மேற் கொண்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. சிறுவர்கள் மீது இவ்வாறு மேற் கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களினால் சமூகத்தில் பெரும் அச்சம் நிலவிவருவதை அவதானிக்க முடிகின்றது.

எதுவுமறியாத அப்பாவிச் சிறுமி இவ்வாறு மோசமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அனைவரையும் அச்சப்பட செய்துள்ளதுடன் பெரும் கவலையையும், வேதனையையும் காத்தான்குடி மட்டுமல்ல இந்த செய்தியை கேள்விப்படும் அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

Exit mobile version