இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ஐ படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓடியோவை வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜகுமார் பெற்றுக்கொண்டார்.
அஸ்கார் விலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வருகிறது ஐ. இப்படத்திற்கு இசையமைத்திருககிறார் ஓஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான்.
ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு சர்வதேச உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான மின்னொளியில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
இவ்விழாவில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், ஹொலிவூட்டின் எக்சன் ஸ்டாருமான அர்னால்ட் ஸ்வசாநாகர் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
அவருடன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார், தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், இயக்குநர் ஷங்கர், படத்தின் நாயகன் விக்ரம், நாயகி எமி ஜேக்சன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பலரும் பங்குபற்றினர்.
எட்டு மணியளவில் தொடஙகிய இவ்விழாவில் முதல் இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை கவர்ச்சிகரமான மின்னொளியில் பாடி அனைவரையும் அசத்தினார். அதனைத் தொடர்ந்து பாடகர்கள் ஹரிசரண், நிகிதா, கார்த்திக், பிரேசில் நாட்டு பாடகி உட்பட பலர் பாடி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் அனுபவங்கள் திரையில் காண்பிக்கப்பட்டன. அதிலும் நாயகன் விக்ரமிற்காக சிறப்பு ஒப்பனையை செய்த நியூஸிலாந்தை சேர்ந்த ஷான் அவர்களின் உழைப்பு காண்போரை வெகுவாக கவர்நத்து.
விக்ரமின் சிறப்பு தோற்றத்திற்காக தினமும் நான்கரை மணித்தியாலம் ஒப்பனை செய்வார்களாம். இதை கேட்கும் போது ஒப்பனை என்பது அழகையும் தாண்டி அதுவும் ஒரு கலை என்பது தெரியவந்தது.
இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான் – ஷங்கர் கூட்டணி ஜெண்டில் மேல் தொடங்கி ஐ வரை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இரகசியத்தை சுப்பர் ஸ்டார் குறிப்பிட்ட போது அரங்கமே கைத்தட்டலால் அதிர்நத்து.
மேடையில் கின்னஸ் சாதனையாளரான சீனாவை சேர்ந்த அனா யங் என்ற பெண்மணியின் சோப்பு நுரை பலூன் ஊதல் நிகழ்ச்சியும் அனைவரையும் வியக்க வைத்தது.
அதற்கு முன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆணழகன்கள் மேடையில் தோன்றி ஒரு பாடலுக்கு நடனமாடியது விழாவிற்கு சிறப்பு அதிதியாக வந்திருந்த அர்னால்ட்டை மிகவும் கவர்ந்தது. தன்னுடைய இருககையிலிருநது எழுந்து அவர்களுட்ன் மேடை ஏறி கௌரவித்தது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது.
அத்துடன் மேடையில் பேசிய அர்னால்ட், ‘சென்னைக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு அழகான, அருமையான மக்கள் மிகுந்த நகருக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன். என் படங்களை இங்கு விநியோகித்த ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்காகத்தான் இங்கு வந்தேன்.
எனக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஷங்கரின் இந்தப் படம் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. இத்தனை பேருக்கு வாய்ப்புக் கொடுத்த ஷங்கர் எனக்கும் ஒரு வாய்ப்பளித்திருக்கலாம். அடுத்த படத்தில் தருவீர்களா ஷங்கர்?” என்று ஷங்கரைப் பார்த்துக் கேட்க, அவரும் நிச்சயமாக என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்.
அதன் பின்னர் பேசிய சுப்பர் ஸ்டர்ர் ரஜினிகாந்த், ஷங்கரின் உயரம் இதுவல்ல. இன்னும் இருக்கிறது. ஹொலிவுட் தரத்தில் இந்தியாவிலுளள கலைஞர்களாலும் படத்தை இயக்க முடியும் என்பதை ஷங்கர் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டேயிருக்கிறார்.
அவரால் நாம் பெருமைப்படுகிறோம்‘ என்று ஷங்கரை மனதார பாராட்டியதுடன் இப்படம் பெரிய வெற்றியைப் பெறவேண்டும் என்றும், ட்ரைலரின் பார்த்தவுடன் இப்படத்தினை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாகவும் தெரிவித்தார். சீயான் விக்ரம் இனி ஐ விக்ரமாக பேசப்படுவார் என்று விக்ரமை பாராட்டினார்.
இசையமைப்பாளர் ஏ ஆ ரஹ்மான் பேசும் போது, இப்படத்தில் புதிதாக ஒலிகளை சேர்க்கவேண்டும் என்று திட்டமிட்டோம். என்னிடம் இருநது ஷங்கர் தனக்கு தேவையானதை பெற்றுக்கொண்டார் என்று தான சொல்லவேண்டும். இசையமைப்பாளர் அனிரூத்தை பாடவைத்தது நானும் இயக்குநர் ஷங்கரும் இணைந்து எடுத்த முடிவு தான் என்றும் குறிப்பிட்டார்.
இயக்குநர் ஷங்கர் பேசும் போது, எனக்கு நீண்ட நாளாக ஒற்றை எழுத்தில் டைட்டில் வைக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அத்துடன் இந்த கதைக்கு அழகன் அல்லது ஆணழகன் என்பது தான் பொருத்தமான டைட்டில். இந்த இரண்டு டைட்டிலுமே ஏற்கனவே வைத்தாகிவிட்டது.
அதனால் புதிய டைட்டிலை தேடும் போது ஐ என்று வைத்தால் என்? என்று யோசித்தோம். ஐ என்றால் அழகு என்று ஒரு பொருளும் இருப்பதாக சொன்னவுடன் இது தான் டைட்டில் என்பது உறுதி செய்துவிட்டேன். என்றார்.
விழாவிற்கு வந்திருநத அனைவரையும் அஸகார் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதர் வரவேற்க, இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்தார்.
விழாவில் அனைவரையும் அரங்க வடிவமைப்பும், மின்னொளி வடிவமைப்பும் வெகுவாக கவர்ந்திருந்தது. அதன் பிரம்மாண்டத்தை பார்த்த பார்வையாளர்கள் பலரும் இது ஷங்கரால் மட்டுமே முடியும் என்று பேசிக்கொண்டதை நாமும் ஆமோதித்தோம்.