







‘ஐ’ படத்தின் இரகசியங்களை சொல்லும் சங்கர்
விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஐ’ படத்திற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் சங்கர்.
“படத்துக்கு அழகன் அல்லது ஆணழகன் என்று தலைப்பு வைக்கலாம் என யோசித்தேன். ஆனால், இந்த இரண்டு பெயர்களிலும் ஏற்கனவே படங்கள் வந்துவிட்டன.
ரொம்ப நாளாக ஒரு எழுத்தில் தலைப்பு வைத்தால் என்ன? என்ற எண்ணம் நீடித்தது. ‘ஐ’ என்ற எழுத்துக்கு அழகு என்று அர்த்தம் இருப்பதாக சொன்னார்கள். அதையே தலைப்பாக வைத்துவிடலாம் என்று தீர்மானித்தேன். இந்தப் படத்துக்கு ‘ஐ’ தான் பொருத்தமான தலைப்பு என்கிறார் சங்கர்.
‘ஐ’ ரொம்ப க்ரிஸ்ப்பான ரொமான்டிக் த்ரில்லர். இதுவரை நான் தொடாத சப்ஜெக்ட். படத்தில் விக்ரம் உள்பட, நிறைய கேரக்டர்களுக்கு ஸ்பெஷல் மேக்கப் தேவைப்பட்டது.
சர்வதேச அளவில் மேக்கப்ல யார் பெஸ்ட்னு தேடி சலிச்சா, ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ‘ஹாபிட்’ படங்களுக்கு மேக்கப் பண்ணின ‘வேட்டா ஸ்டுடியோஸ்’ பத்திச் சொன்னாங்க.
உடனே நியூஸிலாந்து போய் அவங்ககிட்ட பேசினோம். ‘ரொம்ப வித்தியாசமான கதை. எங்களுக்கு நிறைய சவால் இருக்கு’னு ஆர்வம் காட்டினாங்க. அவங்க ‘எந்திரன்’ படத்தைப் பார்த்திருக்காங்க.
அதோட க்ளைமாக்ஸ் பார்த்து அசந்துட்டாங்க. ‘ஹாலிவுட்ல நிறைய ரோபோ படங்கள் பார்த்திருக்கோம். ஆனா, இந்த க்ளைமாக்ஸ் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு’னு உற்சாகமாகி ‘ஐ’ பட வேலையில் உடனே கமிட் ஆனாங்க.
அதோட, ‘அடுத்தடுத்து இனி என்ன ஸ்கிரிப்ட் பண்ணினாலும் எங்ககிட்ட முதல்ல டிஸ்கஸ் பண்ணுங்க. பிசினஸ் விஷயங்கள்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொல்லிருக்காங்க. ‘ஐ’ ரொம்பக் கச்சிதமா டேக் ஆஃப் ஆகியிருக்கு!”
மேலும் ‘ஐ’ படத்தில் நீங்க எந்த எதிர்பார்ப்போட வந்தாலும், விக்ரம் உங்களை ஆச்சர்யப்படுத்துவார். ஸ்லிம் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒவ்வொண்ணும் பட் படீர் பட்டாசு!
மேக்கப்தான் என் ஐடியா. இவ்ளோ எடை குறைச்சது விக்ரமோட ஐடியா. ‘எல்லாரும் எடையைக் கூட்டிதான் நடிச்சிருக்காங்க. யாரும் எடையைக் குறைச்சது இல்லை. நான் பண்றேனே’னு கேட்டுப் பண்ணார்.
இவ்ளோ ஸ்லிம் ஆக அவர் சரியா சாப்பிடுறது இல்லைனு சொல்றதைவிட, சாப்பிடுறதே இல்லைனு சொல்லலாம். ஸ்பாட்ல மத்தவங்க பிரியாணி சாப்பிடும்போது, அவர் பச்சைக் காய்கறிகள், இலைதழைகள்னு மென்னுட்டு இருப்பார். தமிழ் சினிமாவில் டெடிகேஷன்னா, அது விக்ரம்தான்!”