ilakkiyainfo

முன்னாள் அமைச்சரை தூக்கி குப்பை தொட்டியில் தூக்கி போட்ட எம்.பிக்கள். உக்ரைனில் அதிர்ச்சி சம்பவம். (வீடியோ)

உக்ரைன் பாராளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரை எம்.பிக்கள் அனைவரும் சேர்ந்து குண்டுக்கட்டாக தூக்கி குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்தனர்.

ukraine-1நேற்று காலை உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் என்ற நகரில் உள்ள பாராளுமன்றம் கூடியபோது முன்னாள் அதிபர் Viktor Yanukovich அவர்களின் அமைச்சரவையில் இருந்த Vitaly Zhuravsky, என்பவர் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் குறித்து ஒருசில சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் பாராளுமன்றத்தில் இருந்து அனைத்து எம்பிக்களும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

உடனே அவரை நோக்கி வேகமாக வந்த எம்.பிக்கள் Vitaly Zhuravsky, அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி பாராளுமன்றத்தின் வெளியே கொண்டு வந்து அங்கிருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் வீசியெறிந்தனர்.

அதுமட்டும் இன்றி அங்கிருந்த குப்பைகளை அவர் மேல் போட்டு தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகொண்டனர். ஒருசில எம்.பிக்கள் தங்கள் இடுப்பில் இருந்த பெல்ட்டை கழட்டை அவரை அடிக்க தொடங்கினர்.

இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாரளுமன்ற காவலர்கள் விரைந்து வந்து குப்பைத்தொட்டியில் இருந்த முன்னாள் அமைச்சரை மீட்டு, அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் உக்ரைன் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Exit mobile version