
ஒருமுறை காரிலும், மற்றொரு முறை பள்ளியின் ஸ்டோர் ரூமிலும் மற்றொரு முறை தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பள்ளி அறையிலும் வைத்து மாணவனுடன் உடலுறவு வைத்துள்ளார் இந்த ஆசிரியை.
இத்தகவல் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பள்ளியில் இருந்து ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரிட்ஜெட் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். ஏற்கனவே 4 வயதில் மகன் உள்ள நிலையில் தற்போது பிரிட்ஜெட் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
சிறுவனுடன் உறவு வைத்த புகார் கிடைக்க பெற்றதும் பிரிட்ஜெட்டை போலீசார் கைது செய்து மாவட்ட நீதிபதி ரெஜினா முன்பு ஆஜர்படுத்தினர். பிரிட்ஜெட் கருவுற்றிருப்பதை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பு வக்கீல் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து 5 லட்சம் டாலர் பிணைத் தொகை செலுத்திவிட்டு ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். தனது மகனை தவிர்த்த பிற சிறுவர்கள், பள்ளியில் உடன் வேலை பார்த்தவர்கள், படித்தவர்கள் யாருடனும் பிரிட்ஜெட் சந்திக்க கூடாது என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.