ஏதோ ஒரு ஹோட்டல் போல காணப்படும் அந்த இடத்தில் இருபுறமும் அறைகள் இருக்க நடுவே கார்பெட் விரிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு மூலையில் ஒரு ஆணும் பெண்ணும், நின்றபடி உதத்தோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.
சில விநாடிகள் ஓடும், இந்த வீடியோ, ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகி, அந்த வீடியோ காட்சிகளை யாரோ செல்போனில் எடுத்து இணையத்தில் பரவவிட்டுள்ளதை போல உள்ளது.
சிசிடி திரையில் ஓடும் காட்சிகளில், வீடியோ எடுக்கப்பட்டது இம்மாதம் 13 என்று தேதி காண்பிக்கிறது. அந்த காட்சியில் உள்ளது விரல் வித்தை இளம் நடிகரும், மூன்றெழுத்து மூத்த ஹீரோயினும் என்று ஒரே பேச்சாக உள்ளது. அந்த நடிகர் ஏற்கனவே பல ஹீரோயின்களுடன் கிசுகிசுக்கப்படுபவர்.
அந்த ஹீரோயினோ ஏற்கனவே ஒரு ‘பப்பி ஷேம்’ வீடியோ லீக்கால் பாதிக்கப்பட்டவர். இருப்பினும், இப்போது பரவி வரும் அந்த வீடியோவில் இருப்பது உண்மையிலேயே அந்த இருவரும்தானா என்பதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
நாடறிந்த ஹீரோ, ஹீரோயினான அவர்கள் இருவரும் ஹோட்டலில் சிசிடிவி இருக்கும் என்று தெரிந்திருந்தும், வெளியே நின்று முத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே முத்தம் கொடுக்க விரும்பினாலும், ஏன் வெளியே நின்று அரக்க பறக்க அதை தர வேண்டும்? என்பது போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.
மேலும், வீடியோவும் தெளிவாக இல்லாத காரணத்தால், அது குறிப்பிட்ட அந்த நடிகரும், நடிகையும்தானா என்பதில் சந்தேகம் உள்ளது. ஹீரோ அல்லது ஹீரோயின் பெயரை கெடுக்க விரும்பும் விஷமிகள் யாராவது இதை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
கிம் நிர்வாணமாக போஸ் கொடுத்தது தங்கைக்கு ஒரே அவமானமாம்