ரஷ்யாவில் சைக்கிளில் சென்ற ஒரு இளைஞர் உலகின் மிக அதிர்ஷ்டசாலி இளைஞர் என்று அழைக்கப்படுகிறார். கார் மற்றும் வேன் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானபோது அவை இரண்டுக்கும் நடுவில் இவர் சிக்கியும் எவ்வித சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்தது உண்மையில் இவருடைய அதிர்ஷ்டமே காரணம் என கூறப்படுகிறது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஒரு இளைஞர் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் சிகப்பு நிற கார் ஒன்று அவருக்கு எதிரே வந்தது. அந்த காருடன் பக்கவாட்டில் வந்த வேன் ஒன்று பயங்கரமாக மோதியதால் இரண்டுமே அவருடைய சைக்கிளின் மீது மோதியது.
அவருடைய சைக்கிள் கடுமையாக சேதமடைந்தாலும், அவருக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில விநாடிகள் மட்டும் எடுத்து உடனே சுதாரித்துக்கொண்ட அவர், விபத்தில் சிக்கிய வேன் டிரைவரை காப்பாற்ற அவர் எடுத்துக்கொண்ட முயற்சி உண்மையில் மிகவும் பாராட்டத்தக்கது என அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இந்த விபத்தின் வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் படம் பிடிக்கப்பட்டு அவை இணையத்தில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. நமது தேடிப்பார் வாசகர்களுக்காக இங்கே அந்த வீடியோவை பதிவு செய்துள்ளோம்.