பெண்ணொருவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக 20,000 அமெரிக்க டொலரை செலவிட்டு தனது மார்புப் பகுதியில் மூன்றாவது மேலதிக மார்பகமொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
புளோரிடா மாநிலத்தில் தம்பா நகரைச் சேர்ந்த ஜஸ்மின் திரைடெவில் (21 வயது) என்ற பெண்ணே இவ்வாறு புரட்சிகர அறுவைச் சிகிச்சை மூலம் மூன்றாவது மார்பை பொருத்திக்கொண்டுள்ளார்.
அவருக்கு மூன்றாவது மார்பை அறுவைச் சிகிச்சை செய்து பொருத்துவதற்கு 50க்கு மேற்பட்ட மருத்துவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்த அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளும் பட்சத்தில் ஒழுங்கு முறை விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கு தாம் ஆளாக நேரிடும் என அவர்கள் அஞ்சியமையே இதற்குக் காரணமாகும்.
இந்நிலையில் மனம் தளராது தொடர்ந்து இரு வருட காலம் முயற்சித்த அவருக்கு வழமைக்கு மாறான இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர் ஒருவர் முன்வந்துள்ளார்.
குறிப்பிட்ட மருத்துவரின் வேண்டுகோளின் பேரில் அவரது பெயரை ஜஸ்மின் வெளியிடாமல் இரகசியமாக பேணி வருகிறார்.
அவர் தற்போது மூன்று மார்பகங்களை உள்ளடக்கிய பெண்ணொருவர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆவணப்படமொன்றை எடுக்கும் முகமாக புகைப்பட குழுவொன்றை கட்டணம் செலுத்தி பணியில் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.