Site icon ilakkiyainfo

அல்ஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூரம்: பிரான்ஸ் பிணை கைதி தலை துண்டித்து கொலை (வீடியோ )

 

அல்ஜியர்ஸ்: அல்ஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டு பயணி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா பல்வேறு நாடுகள் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராக்கில் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் பிரான்ஸ் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில், அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்வ் கோர்டெல் (55) என்பவரை, ஜந்த் அல் கிலிபா என்ற தீவிரவாத அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணைக் கைதியாக பிடித்து சென்றது.

அல்கய்தாவில் இருந்து பிரிந்த இந்த அமைப்பு, தற்போது ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் அங்கம் வகித்துள்ள பிரான்ஸ், ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் மீது தாக்குதலை 24 மணி நேரத்தில் நிறுத்தாவிட்டால் பிணைக் கைதியை கொலை செய்வோம் என ஜுன்ந் அல் கிலிபா மிரட்டல் விடுத்தது.

ஏற்கனவே, 2 அமெரிக்க பிணை கைதிகள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பிணை கைதி ஐஎஸ் தீவிரவாதிகளால் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிலையில், பிரான்ஸ் பயணி கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அல்ஜீரியாவின் கேபிலி பகுதியில் தான் ஹெர்வ் கடத்தப்பட்டார்.

அங்கு அல்ஜீரிய போலீசாரும் ராணுவத்தினரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், அவரை தீவிரவாதிகள் படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோவில், பிரான்ஸ் பிணை கைதியின் தலையை துண்டித்து கொல்லும் கொடூர காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹெர்வை கொல்வதற்கு முன்பு, ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவர் அபு பார்க் அல் பக்தாதியை ஆதரித்து தீவிரவாதிகள் பேசுவதும், தனது குடும்பத்தை பிரிய போவது பற்றி ஹெர்வ் வேதனையாக பேசுவதும் வீடியோவில் அடங்கி உள்ளது.

பிரான்ஸ் பிணை கைதி படுகொலைக்கு பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மற்றும் ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஹோலண்டே, தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் தொடர்ந்து போராடும் என்றார்.

France: FEMEN unleash their breasts in anti-ISIS protest *EXPLICIT*

FEMEN organised a protest calling on all “infidels” to “rise up” against the self-titled Islamic State (formerly ISIS) in Paris on Wednesday.

The protesters were topless, with the slogan “Infidels Unite” painted on their backs and chests. They also wore the keffiyeh usually associated with Palestinian nationalism, although reasons for this decision were not given.

Carrying toy guys and aiming them at cameras and bystanders, one member addressed the crowd near the Arc de Triomphe through a megaphone. After the speech and a period of chanting the FEMEN members fled the scene.

 

Exit mobile version