சீனாவில் சிகரெட் விற்பனையை ஆதரித்து வைக்கப்பட்ட விளம்பரத்தை நீக்க உத்தரவிட்ட சுகாதார அதிகாரியை ஆடு வெட்டும் மிகப்பெரிய கத்தியால் வெட்ட முயன்ற சிகரெட் கடைக்காரரால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
சீனாவில் உள்ள Foshan என்ற பகுதியில் 43 வயது Bo Ni என்ற சுகாதார அதிகாரி, அங்கிருந்த சிகரெட் கடையில் இருந்த சிகரெட் விளம்பரத்தை நீக்க உத்தரவிட்டார்.
ஆனால் அதற்கு கடைக்காரர் மறுப்பு தெரிவிக்கவே, உடனே சுகாதார அதிகாரி தனது அதிகாரிகளிடம் அந்த கடையை இழுத்து மூடி சீல் வைக்க உத்தரவிட்டார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த சிகரெட் கடைக்காரர், கடைக்கு பின்னால் வைத்திருந்த ஆடு வெட்டும் மிகப்பெரிய கத்தியை எடுத்துக்கொண்டு சுகாதார அதிகாரியின் கழுத்தை வெட்ட முயன்றார்.
உடனே அதிர்ச்சி அடைந்த சுகாதார அதிகார் Bo Ni, உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமெடுத்தார். ஆனால் சிகரெட் கடைக்காரர் அவரை கத்தியுடன் விரட்டி சென்றார்.
இந்த அதிர்ச்சி காட்சியை அங்கிருந்த சிலர் புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,
துப்பாக்கியால் மூன்று முறை மேல்நோக்கி சுட்டு, கடைகாரரை கைது செய்தனர். கடைக்காரர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது சிகரெட் கடைக்காரர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.