ilakkiyainfo

யாழ்.நகரில் விபத்து: மருத்துவர் தலைசிதறிச் சாவு…!!

யாழ்.கே.கே.எஸ்.வீதியில் பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தொன்றில் யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ். காங்கேசன்துறை வீதியில் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்ற விபத்தில் உரும்பிராயை சேர்ந்த மருத்துவரான கோபிநாத் (வயது 30 ) என்பவரே பலியாகியுள்ளார்.

காங்கேசதுறை வீதிவழியாக யாழ் நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மருத்துவரை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்து நேரிட்டதை அடுத்து டிப்பர் சாரதி தலைமறைவாகியுள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவாகியுள்ள டிப்பர் சாரதியையும் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிமீது வல்லுறவு இளைஞன் கைது
27-09-2014

index41வல்வெட்டித்துறை பகுதியினைச் சேர்ந்த பதின்மூன்று வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். குருநகர் பெண்கள் சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 24ஆம் திகதி தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் இழுத்துச் சென்று குடத்தனை பகுதியில் உள்ள பற்றை ஒன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தனர்.

அவர்களிடமிருந்து தப்பித்து வந்த வந்த சிறுமியை வல்வெட்டித்துறை பொலிஸார் நாகர் கோயில் பகுதியில் வைத்து மீட்டனர். இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய சந்தேகநபரை நேற்று முன்தினம் இரவு வல்வெட்டி பகுதியில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரை நேற்றைய தினம் யாழ். குருநகர் பெண்கள் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை வழக்கினை விசாரித்த நீதவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரை விரைவில் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சவப்பெட்டி விற்கும் கடையைக் கூட விட்டு வைக்காத திருடா்கள் – சுன்னாகத்தில் 1.5 லட்சம் கொள்ளை
27-09-2014

சன நடமாட்டம் மிக்க சுன்னாகம் நகரப் பகுதியில் உள்ள பிரேதப் பெட்டி விற்க்கும் கடையில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியா பணம் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வீதி சுன்னாகம் வர்த்தக வங்கிக்கு முன்னாள் உள்ள பிரேதப் பெட்டி விற்பனை செய்யும் கடை உ டைக்கப்’பட்டு இன்று அதிகாலையில் இந்த துணிகரமான திருடடு இடம் பெற்று இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இப் பகதயில் இரவுக் காவலாளிகள் கடமையில்ட ஈடுபட்டு இருப்பதுட சுன்னாகம் பொலிசாரினதும் இராணுவத்தினரினதும் ரோந்து நடவடிக்கைகள் கூட நகரப் பகுதியில் நடை பெறும் நிலையில் இத்தகைய திருட்டு இடம் பெற்றுள்ளமை வர்த்தகாகளுக்கு இடையே பெரும் குழப்பமான நிலமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்.

Exit mobile version