Site icon ilakkiyainfo

எனது பிள்­ளையின் உயி­ருக்கு இரு ஆடுகள் பெறு­ம­தி­யா­குமா? முழங்­கா­விலில் தாய் குமுறல்

காண­ாமற்­போன எனது மகனின் உயி­ருக்கு நீங்கள் தரும் இரண்டு ஆடுகள் பெறு­ம­தி­யா­குமா? வளர்த்த மகனை மீட்டுத் தாருங்கள் என உங்­க­ளிடம் வந்தால் ஆடு, மாடு­களை கொண்­டுபோய் வளர்க்­கு­மாறு கூறுகிறீர்கள். உங்கள் உதவிக் கொடுப்­ப­ன­வுகள் எமக்கு வேண்டாம். எனது பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என முழங்­கா­விலில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த தாய் ஒருவர் தெரி­வித்தார்.

காண­ாமற்­போ­னோரைக் கண்­ட­றி­வ­தற்­காக ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் கிளி­நொச்சி மாவட்­டத்­திற்­கான இரண்டாம் கட்ட விசா­ர­ணையின் இரண்டாம் நாள் சாட்­சி­ய­ம­ளிப்பு நேற்று முழங்­காவில் மத்­திய கல்லூரியில் நடை­பெற்­றது. இதில் பலர் கலந்­து­கொண்டு காண­ாமற்­போன

தமது உற­வுகள் பற்றி சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

இதன்­போது சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­க­ளிடம் ஆணைக்­கு­ழு­வினர் இழப்­பீ­டாக நீங்கள் எதனைப் பெற்றுக் கொள்ளப் விரும்­பு­கி­றீர்கள் என வின­வி­யுள்­ளனர். ஆடு, மாடு, கோழி இவற்றில் நீங்கள் இழப்­பீட்டு நிவா­ர­ண­மாக எதனைப் பெற்­றுக்­கொள்ளப் போகி­றீர்கள் என அனை­வ­ரி­டமும் இறு­தியில் வின­வி­யுள்­ளனர்.

இதற்குச் சாட்­சி­ய­ம­ளித்த மக்கள் அனை­வரும் இழப்­பீட்டு நிவா­ர­ணங்கள் எதுவும் எமக்கு வேண்டாம். எங்கள் பிள்­ளை­களைக் கண்­ட­றிந்து தாருங்கள் எனக் கூறி­யுள்­ளனர்.

காணமல் போன­வர்கள் தொடர்­பான தக­வல்கள் கிடைக்கும் அல்­லது அவற்றைப் பதிவு செய்­வார்கள் என்ற நம்­பிக்­கை­யுடன் சென்ற மக்­க­ளுக்கு ஆணைக்­கு­ழு­வி­னரின் இவ்­வா­றான கேள்வி பெரும் ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது.

ஆணைக்­கு­ழுமுன் சாட்­சி­ம­ளித்த யாகப்பர் திரே­சம்மா என்ற தாயார் கூறு­கையில்,

நான் எனது 31 வய­தான மகன் நந்­த­கு­மாரை கடந்த 2009.05.16 அன்று முள்­ளி­வாய்க்­காலில் வைத்து இறு­தி­யாகக் கண்டேன். அதன் பின்னர் நான் அவனைக் காண­வில்லை. மகனைத் தேடித்­த­ரு­மாறு ஐ.சி.ஆர்.சி.யிடமும் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வி­டமும் பதிவு செய்து கேட்­டி­ருந்தேன். அதன்­படி மகன் கூசா முகாமில் இருப்­ப­தாக அறிந்து கொண்டேன்.

அங்கு சென்று கேட்­ட­போது அதி­கா­ரிகள் அவர் இங்கு இல்லை எனத் தெரி­வித்­தார்கள். எனது மகனை மீட்­டுத்­தா­ருங்கள். நான் இறப்­ப­தற்கு முன் அவனைப் பார்க்க வேண்டும். உங்கள் ஆடு, மாடுகள் எமக்கு வேண்டாம். எங்கள் பிள்­ளை­களைத் தாருங்கள் என்றார்.

முழங்­கா­விலைச் சேர்ந்த அந்­தோனி சத்­தி­ய­நாதன் என்ற தந்தை சாட்­சி­ய­ம­ளிக்­கையில், இறுதி யுத்­தத்­தின்­போது நானும் 19 வய­தான எனது மகனும் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்குள் வரி­சை­யாக வந்­து­கொண்­டி­ருந்தோம். அப்­போது செல் தாக்­கு­தலில் எனது மகன் காயப்­பட்டான்.

காயப்­பட்ட மகனை இரா­ணு­வத்­தினர் எடுத்துச் சென்­றனர். நான் வவு­னியா முகா­மிற்கு வந்­து­விட்டேன் முகா­மி­லி­ருந்து வந்­த­பின்னர் எனது மகனை தேடி அலைந்தேன். அப்­போது வெலிக்­கடை தடுப்பு முகாமில் இருப்­ப­தாக அறிந்து அங்கு சென்றேன்.

மகனின் பெயரைச் சொல்லி அங்கு கேட்­ட­போது, முகா­மி­லி­ருந்து 75பேர் வேறு இடத்­திற்கு மாற்­றப்­பட்­ட­தா­கவும் அதில் அவரும் சென்­றி­ருக்­கலாம் எனவும் தெரி­வித்­தனர். ஆனால் அவர்கள் எங்கு மாற்­றப்­பட்­டார்கள் என அவர்கள் சொல்­ல­வில்லை.  இதனால் எனது மகன் எங்கு இருக்­கிறார் என்று எனக்கு தெரி­ய­வில்லை. எனது மகனைக் கண்­ட­றிந்து தாருங்கள் எனக் கேட்டார்.

கரி­யாலை நாக­ப­டு­வானைச் சேர்ந்த சின்­னையா சண்­மு­க­நாதன் என்ற தந்தை சாட்­சி­ய­ம­ளிக்­கையில், 2003ஆம் ஆண்டு   விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தில் இணைந்த எனது மகள் இறுதி யுத்­தத்­திற்குப் பின்னர் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்தார்.

மகள் பம்­மை­படு தடுப்பு முகாமில் உள்­ள­தாக அறிந்து அங்கு சென்றேன். எனது மகளின் பெயரைப் பதி­வு­செய்து உள்ளே பார்க்கச் சென்­ற­போது அங்கு வந்த பெண் இரா­ணுவச் சிப்பாய் ஒருவர், இங்கு ஏன் நிற்­கி­றீர்கள். அப்­படி ஒரு­வரும் இங்கு இல்லை. வெளி­யேபோ எனத் திருப்பி அனுப்­பி­விட்டார்.

அதன் பின் என்னால் அந்த முகா­மிற்குச் செல்ல முடி­ய­வில்லை. எனது மகளை இன்­று­வரை தேடிக்­கொண்­டி­ருக்­கின்றேன் என்றார்.

முழங்­கா­விலைச் சேர்ந்த பிர­தீபன் ரேணுகா என்ற குடும்பப் பெண் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், இறுதி யுத்­தத்தின் பின்னர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ணைந்த எனது கண­வ­ரான நாக­ராசா பிர­தீபன் என்பர் தொடர்பில் இது­வரை எந்தத் தக­வ­லையும் பெற­மு­டி­யா­த­வ­ராக உள்ளேன் எனத் தெரி­வித்தார்.

முழங்­கா­விலைச் சேர்ந்த வசந்­த­குமார் பரணி என்ற தாய் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், எனது இரு பிள்­ளை­க­ளையும் காண­வில்லை. 2009.05.16 அன்று முல்­லைத்­தீவு வட்­டு­வாகல் ஊடாக வந்த இலக்­கியா என்ற எனது மகள் வவு­னிய நலன்­புரி முகாமில் வலயம் 4 இல் இருப்­ப­தாக உற­வி­னர்கள் மூலம் அறிந்­து­கொண்டேன்.

இறுதி யுத்­தத்தின் போது நானும் எனது கண­வரும் காயப்­பட்­டதால் மகள் எங்­க­ளுடன் இருக்கவில்லை. அவள் உறவினர்களுடன் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டார். அங்கு அவள் இராணுவத்திடம் சரணடைந்தாள். அதன் பின்னர் காணாமற்போயுள்ளார்.

இதேபோல் எனது மகனும் முல்லைத்தீவு வலைஞர்மடத்தில் வைத்து காணாமற்போனான். இன்றுவரை இவர்கள் இருவரையும் நான் தேடிக்கொண்டிருக்கின்றேன். வயதான நிலையில் என்னாலும் கணவனாலும் வாழமுடியாதுள்ளது. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்றார்.

Exit mobile version