தாவடிப் பகுதியில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களின் முடியைத் திருடிய கள்வன் கையும் மெய்யுமாக பக்தா்களினால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
நேற்று முன்தினம் கோவில் பூசைகளின் போது கும்பிடுவது போல் பாவனை செய்து அங்கு நின்ற திருடன் பூசைகள் முடிந்தபின் கோவிலில் இருந்த வள்ளி சிலையின் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான முடியை தந்திரமான முறையில் திருடிச் சென்று அதனை 5 ஆயிரம் ரூபாவிற்கு விற்றுள்ளான்.
இதன் பின்னா் அந்த காசின் பெறுமதியில் ஆசைப்பட்டு மீண்டும் தெய்வானையின் முடியைத் திருடுவதற்கு அக்கோவிலுக்கு வந்த போது அங்கு நின்ற பக்தா்கள் அவனைப் பிடித்து கவனிக்கவே தான்தான் வள்ளியிள் முடியைத் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளான்.
இதன் பின்னா் அவனை பொலிசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த போது பொலிசார் நடாத்திய விசாரணைகளில் குறித்த திருடன் நாவாந்துறை 5 சந்திப் பகுதியில் உள்ள இருப்புக்கடை நாடத்திவரும் முகமட் ரசிஸ் என்பவருக்கு விற்றதாக தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து அந்த இருப்புக்கடைக்கு சென்ற பொலிசார் அங்கிருந்த வள்ளியின் முடியையும் மீட்டு முகமட் ரசிஸ்சையும் கைது செய்துள்ளனா். வள்ளியின் முடியைத் திருடிய திருடன் புத்துார் கலைமதி வீதியைச் சோ்ந்த நிரோசன் என்பவனாவான்.