ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இந்தியா»ஜெ.வுக்கு பரப்பன அக்ரஹாரா.. கருணாநிதி, ஸ்டாலினுக்கு விரைவில் புழல்?.. கைது வதந்தியால் பரபரப்பு!
    இந்தியா

    ஜெ.வுக்கு பரப்பன அக்ரஹாரா.. கருணாநிதி, ஸ்டாலினுக்கு விரைவில் புழல்?.. கைது வதந்தியால் பரபரப்பு!

    adminBy adminOctober 1, 2014Updated:October 2, 2014No Comments6 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் கைது செய்ய தமிழக தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இருவர் மீதும் கொலை மிரட்டல், தாக்குதல் நடத்தத் தூண்டியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் சென்னை ராயப்பேட்டை போலீஸார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ஜெயலலிதா ஜாமீனில் வெளியானதும் இவர்கள் இருவரையும் கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் திமுக தரப்பில் இதை முறியடிக்கத் தேவையான சட்டப்பூர்வமான ஏற்பாடுகளைத் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    01-1412135678-admk-rail-roko-600

    சென்னையில் வன்முறை
    ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது. கடையடைப்பு, பஸ்கள் எரிப்பு, சாலை மறியல் என அதிமுகவினர் இறங்கினர். சென்னையிலும் வன்முறை தலைவிரித்தாடியது.
    01-1412135911-karunanidhi-gopalapuram-house-600
    கோபாலபுரத்திற்கு விரைந்த அதிமுகவினர்
    திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை நோக்கி அதிமுகவினர் படையெடுத்து வந்தனர். இதை எதிர்பார்த்து திமுகவினரும் திரண்டிருந்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் இரு தரப்பிலும் பலர்காயமடைந்தனர்.
    01-1412135885-admk-protest73-600

    அதிமுகவினர் புகார்.. போலீஸ் வழக்கு
    இந்த தாக்குதல் தொடர்பாக காயமடைந்ததாக கூறப்பட்ட அதிமுகவினர் சிலர் ராயப்பேட்டை காவல் நிலயைத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கலவரத்தைத் தூண்டியது. பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட புகார்களை கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் 500 திமுகவினர் மீது போலீஸார் பதிவு செய்தனர்.
    01-1412135737-karunanidhi-stalin4-600
    கைது நடவடிக்கை வருமா
    இந்த வழக்கில் கருணாநிதி,ஸ்டாலின் கைது செய்யப்படுவார்களா என்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் விசாரித்தபோது அப்படியெல்லாம் இருக்காது என்றுதான் முதலில் பதில் வந்தது. ஆனால் தற்போது கைதுக்கான நடவடிக்கைகள் ரகசியமாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
    01-1412135974-jayalalitha-12-600

    ஜெயலலிதா வெளியே வந்ததும்
    குறிப்பாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததும் கருணாநிதி, ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் சட்டப்பூர்வமான ஆலோசனைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
    கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!

    603927_216102968528678_1054022709_n1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.

    2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.

    3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.

    4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.

    5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.

    6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.

    7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.

    8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.

    9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

    10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.

    11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.

    12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.

    13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.

    14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.

    15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.

    16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி” அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.

    17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.

    18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.

    19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.

    20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.

    21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.

    22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.

    23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.

    24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்” மதிப்பு – 48 கோடி.

    25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

    26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.

    27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.

    28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை. 29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை

    30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை

    31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்” மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

    32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை. 33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.

    34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.
    35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்

    36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

    37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.

    38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி. 39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.

    40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

    41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.

    42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.

    43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.

    44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.

    45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.

    46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

    47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

    48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.

    49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

    50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.

    51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ரூ 3 கோடி.

    52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.

    53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.

    54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.

    55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.

    56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்” மதிப்பு – தெரியவில்லை.

    57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்” என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.

    58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

    59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்” என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.

    60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.

    61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

    62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.

    63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை

    64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.

    65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

    66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

    67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை” – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

    68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

    69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    Post Views: 472

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    தந்தையை கொன்று பீப்பாயில் உடலை மறைத்ததாக மகனை தேடும் போலீஸ்

    May 22, 2022

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    தன் மனைவி என்று நினைத்து அடுத்தவர் மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளி

    May 21, 2022

    Leave A Reply Cancel Reply

    October 2014
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Sep   Nov »
    Advertisement
    Latest News

    May 23, 2022

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • (no title)
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version