புதிய லம்போர்கினி ஹைபிரிட் சூப்பர் கார் கான்செப்ட் அறிமுகம் Lamborghini Asterion Concept: First Look
டிராக்கில் பெர்ஃபார்மென்ஸை காட்டுவதைவிட தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மிகச்சிறந்த சூப்பர் கார் மாடலாக இதனை லம்போர்கினி குறிப்பிடுகிறது.
ஹைபிரிட் சிஸ்டம்
பெட்ரோல் எஞ்சின்- எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்கும் இந்த காரின் ஹைபிரிட் சிஸ்டம் முதல்முதலாக லம்போர்கினி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலான உரஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட உள்ளது.
எஞ்சின் மற்றும் மின் மோட்டார்
ஹூராகென் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 602 பிஎச்பி பவரை அளிக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மூன்று எலக்ட்ரிக் மோட்டார்களும் இணைந்து 296 பிஎச்பி பவரை அளிக்கும். ஹைபிரிட் சிஸ்டத்தில் அதிகபட்சமாக 898 பிஎச்பி பவர் கொண்ட மாடலாக இதனை லம்போர்கினி தெரிவிக்கிறது.
பேட்டரியில் மட்டும் இயங்கும்போது 50 கிமீ தூரம் வரை ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 125 கிமீ வேகத்தில் செல்லும். லித்தியம் அயான் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் உதிரிபாகங்களின் எடை 250 கிலோ மட்டுமே.
பெர்ஃபார்மென்ஸ்
லம்போர்கினி அஸ்டிரியோன் கான்செப்ட் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளில் எட்டும். இது அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லத்தக்க அம்சங்களை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.