Site icon ilakkiyainfo

கூட்­ட­மைப்பு எம்மைச் சந்­திக்­கா­மை வருத்தமளிக்கிறது: தி.மு.க. தலைவர் கரு­ணா­நிதி ஆதங்கம் (நேர்காணல்).

தமி­ழக தலை­வர்­க­ளா­கட்டும், இலங்­கை­யி­லுள்ள தமிழ்த் தலை­வர்­க­ளா­கட்டும் இலங்கை இனப்­பி­ரச்­சி­னையில் ஒற்­று­மை­யுடன் செயற்­ப­ட­வில்லை என்பது தான் எனது அபிப்­பி­ராயம். ஆதங்­கமும் கூட. அனை­வரும் ஒற்­று­மை­யாக இருந்­தி­ருப்­பார்­க­ளே­யானால், ஒற்­று­மை­யாகக் கூடிப் போராடியிருந்தால் இவ்­வ­ளவு உயி­ரி­ழப்­புக்­களும், நஷ்­டமும் ஏற்­பட்­டி­ருக்­காது.

நம்­மு­டைய உரி­மை­க­ளுக்கும் முட்­டுக்­கட்டை ஏற்­பட்­டி­ருக்­காது என்று தமி­ழக முன்னாள் முதல்­வரும், திரா­விட முன்­னேற்றக் கழகத் தலை­வ­ரு­மான கலைஞர் மு. கரு­ணா­நிதி தெரி­வித்தார்.

தமி­ழ­கத்­திற்கு அண்­மையில் வந்த இரா.சம்­பந்தன் உட்­பட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் தலை­வர்கள் எம்மைச் சந்­திக்­காமை வருத் தம் அளிக்­கி­றது.

நான் பத­வியை பெரி­தாக கரு­து­பவன் அல்ல. எனது இந்த வருத்தம் நியா­ய­மா­னதா? இல்­லையா? என்­பதை நீங்கள் தான் கூற­வேண்டும். ஈழத்து மக்களுக்காகப் பாடு­படும் தமி­ழக அர­சியல் தலை­வர்­க­ளுக்­கு­ரிய மதிப்­ப­ளிக்­கப்­ப­டு­கின்­றதா என்ற ஆதங்கம் என்னுள் உள்­ளது.

நான் கடந்த ஆறு தசாப்த கால­மாக தமிழ் மக்­க­ளுக்­காகக் குரல் கொடுத்து வரு­கிறேன் என்றும் கலைஞர் கரு­ணா­நிதி தெரி­வித்தார்.

தமி­ழி­னத்தின் தலைவர் என்ற குறி­யீட்­டுக்கு பொருத்­த­மா­னவர். தீர்க்­க­மான அர­சியல் ராஜ­தந்­திரி. பரந்த அறி­வாளி. அர­சி­யலில் பழுத்த அனு­ப­வ­சாலி. திராவிட இயக்­கத்தின் நட­மாடும் வர­லாறு.

இப்­படி பல போற்­று­த­லுக்கும் பாராட்­டு­த­லுக்கும் உரி­யவர் கலைஞர்.  அவ­ரு­ட­னான நேர்­காணல் வரு­மாறு,

கேள்வி: தேசிய இனப்­பி­ரச்­சி­னையை இலங்கை அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக தட்­டிக்­க­ழித்துக் கொண்டே வரு­கி­றது என்று கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் தமிழ் தலை­வர்கள் என்ன செய்­யலாம் என்று நினைக்­கி­றீர்கள்?

பதில்: தமிழ் தலை­வர்கள் என்று நீங்கள் குறிப்­பி­டு­வது தமி­ழகத் தலை­வர்­களை மட்­டு­மல்ல என்றும், இலங்­கையில் இருக்­கின்ற தமிழ் தலை­வர்­க­ளையும் சேர்த்­துத்தான் நீங்கள் குறிப்­பி­டு­கின்­றீர்கள் என்றும் எடுத்­துக்­கொள்­கின்றேன்.

தமி­ழக தலை­வர்­க­ளா­கட்டும், இலங்­கை­யி­லுள்ள தமிழ் தலை­வர்­க­ளா­கட்டும் இப்­பி­ரச்­சி­னையில் ஒற்­று­மை­யுடன் செயற்­ப­ட­வில்லை என்­பது தான் என்னுடைய ஆதங்கம். என்னைப் பொறுத்த வரையில் ஐம்­ப­தாண்­டு­க­ளுக்கும் மேலாக, அறிஞர் அண்ணா அவர்­களின் காலத்­தி­லேயே, ஈழத்­தந்தை செல்வ­நா­ய­கத்தின் காலத்­தி­லேயே இப்­பி­ரச்­சி­னைக்­காக குரல் கொடுத்­தி­ரு­க­கிறேன்.

அந்த வகையில் அந்த காலம் முதல் தம்பி பிர­பா­க­ரனின் இந்த காலம் வரை இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சி­னையை தொடர்ந்து பார்த்து வரு­கின்­றவன் என்ற வகையில் கூறு­கிறேன்.

இவ்­வி­ட­யத்தில் இலங்­கையில் உள்­ள­வர்­க­ளிடம் மட்­டு­மல்ல தமி­ழ­கத்தில் உள்­ள­வர்­க­ளி­டமும் கூட ஒற்­று­மை­யில்லை என்­ப­தையே காண முடிந்­தது. அனை­வரும் ஒற்­று­மை­யாக இருந்­தி­ருப்­பார்­க­ளே­யானால், ஒற்­று­மை­யாக கூடி போரா­டி­யி­ருந்தால் இவ்­வ­ளவு உயி­ரி­ழப்­பு­களும், நஷ்­டமும் ஏற்பட்டிருக்காது. நம்­மு­டைய உரி­மை­க­ளுக்கும் முட்­டுக்­கட்டை ஏற்­பட்­டி­ருக்­காது.

கேள்வி: இலங்கை தமிழர் விவ­கா­ரத்தில் தமி­ழக அரசும் மத்­திய அரசும் எவ்­வா­றான கட­மை­க­ளை­யாற்­ற­வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தமி­ழக அரசும் மத்­திய அரசும் ஒன்­றுக்­கொன்று கலந்து பேசி ஒரு நல்ல முடி­வுக்கு வர­வேண்டும். அர­சியல் வேறு­பா­டு­களை களைந்து இன அழிப்பை தடுக்­க­வேண்டும் என்ற நோக்­கத்தில் மத்­திய அரசும், மாநில அரசும் இணைந்து கட­மை­யாற்­ற­வேண்டும் என்று கரு­து­கிறேன்.

கேள்வி: முந்­தைய காங்­கிரஸ் அர­சிற்கும், தற்­போ­தைய பா.ஜ.க. அர­சிற்கும் ஏதேனும் வேறு­பா­டு­களை அவ­தா­னிக்க முடி­கின்­றதா?

பதில்: அவர்கள் எவ்­வ­ளவு தான் அர­சியல் எதி­ரி­யாக இருந்­தாலும், தமி­ழர்­களின் இன உணர்வைப் பற்றி கவ­லைப்­ப­டாத சூழ்­நி­லையில் முந்­தைய அரசும், தற்­போ­தைய அரசும் ஒன்­றா­கவே எனக்குத் தெரி­கி­றது. அதில் மாறு­பாட்டை நான் காண­வில்லை.

கேள்வி: இலங்கைத் தமிழர் விவ­கா­ரத்தில் தமி­ழக அர­சியல் கட்­சிகள் காட்டி வரும் அக்­கறை அர­சியல் நோக்கம் கொண்­டது என்று சிலர் கூறு­கி­றார்கள். இது குறித்து தங்­களின் கருத்து என்ன?

பதில்: சிலர் கூறு­கி­றார்கள் என்று கூறு­வது தான் அர­சியல் நோக்கம் கொண்­டது.

கேள்வி: அண்­மையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­தி­யா­விற்கு விஜயம் செய்து, பிர­தமர் மோடி­யுடன் பேச்­சு­வார்த்­தையை மேற்­கொண்­டது. ஆனால் தமி­ழக முதல்­வரை சந்­திக்க இய­லாமற் போனது. இது குறித்து தங்­களின் கருத்து என்ன?

பதில்: இதற்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தான் பதி­ல­ளிக்­க­வேண்டும். இப்­பி­ரச்­சி­னைக்கு நான் அந்­நியன்.

கேள்வி: கறுப்பு சட்டை அணியும் போராட்டம் குறித்து…?

பதில்: அது எங்­க­ளு­டைய உணர்வை எடு­த­து­ரைப்­ப­தற்­கான போராட்டம்.

கேள்வி: பாரதப் பிர­தமர் மோடி தலை­மை­யி­லான அரசு எதிர்­கா­லத்தில் இப்­பி­ரச்­சி­னையில் சாத்­தி­ய­மான பங்­க­ளிப்பு வழங்கும் என்று கரு­த­லாமா?

பதில்: வழங்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­து­கிறேன்.

கேள்வி: இன்­றைய நிலையில் தமிழ் மக்கள் எதிர்­நோக்­கு­கின்ற நெருக்­க­டி­க­ளுக்கு மத்­திய அர­சாங்கம் முன்­கூட்­டியே தலை­யிட்­டி­ருந்தால், காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தால் உயி­ரி­ழப்­பு­களை ஓர­ளவு குறைத்­தி­ருக்­கலாம் என்று எடுத்­துக்­கொள்­ள­லாமா?

பதில்: குறைத்­தி­ருக்­கலாம். ஆனால், இது விவா­தத்­திற்­கு­ரிய பிரச்­சினை என்­பதே எனது கருத்து.

கேள்வி:  இந்­திய மீனவர் விவ­கா­ரத்தில் தமி­ழக அரசும், இந்­திய அரசும் மாறு­பட்ட கொள்­கையை கடைப்­பி­டித்து வரு­கி­றதே ?

பதில்: கொள்­கைகள் மாறு­பட்­டி­ருக்­கின்­றன என்று நினைக்­க­வில்லை. ஆனால் நடை­மு­றையில் இரு­த­ரப்­பி­ன­ருக்கும் உள்ள வேறு­பா­டு­களை களை­ய­வேண்டும். இதில் அர­சியல் நோக்­க­மில்லை என்றே நினைக்­கிறேன். இதற்கு நிர்­வாகக் குள­று­ப­டிதான் காரணம் என்று எண்­ணு­கிறேன்.

கேள்வி: தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை தீர்ப்­ப­தற்­காக, தமிழ் மக்கள், தமி­ழக அரசு, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆகிய இவற்றின் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்டும் என்று கரு­து­கி­றீர்கள்?

பதில்: இதற்­கான பதில் உங்­க­ளு­டைய கேள்­வி­யி­லேயே இருக்­கி­றது. தமிழ் மக்கள், தமி­ழக அரசு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இம்­மூன்றும் ஒன்றிணைந்து செயற்­பட்டால் மாத்­தி­ரமே தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யலாம்.

கேள்வி: தமி­ழக அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து குரல் கொடுப்­பதன் மூலம் மத்­திய அரசின் கவ­னத்தை கூடு­த­லாக ஈர்க்க இயலும் என்று கரு­து­கி­றீர்­களா?

பதில்: கரு­து­கிறேன். இதி­லென்ன சந்­தேகம். ஒன்­றி­ணைந்து குரல் கொடுக்­கவும், ஒன்­றி­ணைந்து போரா­டவும் தயா­ராக இருக்­கிறோம். இருக்­க­வேண்டும்.

கேள்வி: ஈழத்து மக்­க­ளுக்­காக தங்­களின் அர­சியல் அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து வழங்கும் ஆலோசனை என்ன?

பதில்: ஈழத்து மக்களுக்காகப் பாடுபடுகின்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் அரசியல் செயற்பாட்டிற்கும் அவர்கள் மதிப்பளிக்கிறார்களா? என்ற வினாவிற்கு இன்னும் தெளிவாக விடை கிடைக்கவில்லை.

அங்கே உருவாகின்ற தலைமை, தங்களுக்காக யார் முதலில் பாடுபட்டார்கள் என்பதை அறிந்திருக்கிறார்களா? தங்களுக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்களா? அந்த உணர்வை பெறுகிறார்களா? என்பதைப் பற்றியெல்லாம் முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகிறது.

குறிப்பாக அண்மையில் தமிழகத்திற்கு வருகைத் தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு எம்மை சந்திக்கவில்லை. என்பது வருத்தமளிக்கிறது. இந்த வருத்தம் நியாயமானதா? இல்லையா? என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

கலைஞர் கருணாநிதி வீரகேசரிக்கு   நாழிதலுக்கு அளித்த பேட்டி…

Exit mobile version