அமெரிக்காவில் உள்ள ஒரு இளைஞனை அவரது தாய் வீடியோ கேம் விளையாடியதை கண்டித்ததால் கோபம் அடைந்த இளைஞன் தன்னுடைய தாயை சுத்தியால் அடித்து கொலை செய்ததோடு, பெற்ற தாயை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையும் நடந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் County Road 61 என்ற பகுதியை சேர்ந்த Kevin Davis என்ற இளைஞன் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடிக்கொண்டே இருப்பாராம். சரியான நேரத்தில் தூங்காமல், சாப்பிடாமல் எந்நேரமும் வீடியோ
கேம் விளையாடிக்கொண்டே இருந்ததால் கோபம் அடைந்த அவருடயை தாய், வீடியோகேமின் ரிமோட்டை உடைத்தார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த மகன், அருகில் இருந்த சுத்தியலால் தாயின் பின்மண்டையில் ஓங்கி பலமுறை அடித்ததாகவும், இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த தாய் சிறிது நேரத்தில் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் Kevin Davis அவர்களை கைது செய்து விசாரணை செய்ததோடு, கொலை செய்த பின்னர் அவர் தன்னுடைய தாயுடன் செக்ஸ் உறவு கொண்டதாகவும் கூறியதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவருடைய வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்த போலீஸார் உடனடியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு அடுத்த வாரம் டெக்ஸாஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Kevin Davis, an 18-year-old who beat his mother to death with a hammer then sexually abused her body smiled at jurors during his murder trial
Kevin Davis, from Corpus Christi, Texas, was found guilty and sentenced to life in prison for the murder of 50-year-old Kimberly Hill (pictured) on Wednesday