சென்னை: தனுஷுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா அவரை கட்டியணைத்தபடி போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் த்ரிஷா, தனுஷ் ஆகியோர் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டனர். அப்போது த்ரிஷாவும், தனுஷும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு எடுத்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
த்ரிஷா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவர் இதுவரை தனுஷுடன் நடித்தது இல்லை. ஆனால் அவருக்கு தனுஷின் மாமனரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் ஆசை உள்ளது.

இதன் மூலம் அவர்கள் சேர்ந்து நடிக்காவிட்டாலும் நல்ல நண்பர்களாக உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தனுஷ் அனேகன் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் ஷமிதாப் படத்தில் நடித்து வருகிறார். ஷமிதாபில் அமிதாப் பச்சன், ரேகா, அக்ஷரா ஹாஸனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா – ஜோதிகாவின் மகள் தெலுங்கு பட ஹீரோயின் ஆனார்
சென்னை: ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா – ஜோதிகாவின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஷ்ரியா ஷர்மா இப்போது குமரியாக வளர்ந்து தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக நடிக்கிறார்.
செப்டம்பர் 1997ல், குளுகுளு இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஷ்ரியா, ரஷ்னா, சன்பீஸ்ட், சென்னை சில்க்ஸ், காம்ப்ளான் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார் ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய ஸ்டார்களுடன் குழந்தை நட்சத்திரமாய் நடித்துள்ளார் ஷ்ரியா.
ஷாருக்கான் கடிதம்
‘My Princess, will miss your smile.’ என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் அனுப்பிய கடிதத்தை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருவதாகச் சொல்கிறார் ஷ்ரியா.

சில்லுன்னு ஒரு காதல்
2006ல் சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில், சூர்யா, ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார் ஷ்ரியா ஷர்மா. அப்போது ஷ்ரியாவுக்கு வயது 9.
2006ல் சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில், சூர்யா, ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார் ஷ்ரியா ஷர்மா. அப்போது ஷ்ரியாவுக்கு வயது 9.
எந்திரன் படத்தில்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரனில் நடித்தபோது அவருக்கு வயது 13.
தமிழுக்கு எப்போ?
விளம்பரங்களின் மூலம் குட்டி தேவதையாய் மனம் கவர்ந்த ஷ்ரியா தமிழ் கூறும் நல் உலகிற்கு எப்போது வருவார் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ரசிக மகாஜனங்கள்.

தேசிய விருது
2004ஆம் ஆண்டு டிவி சீரியலில் நடித்த போதே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றுள்ளார் ஷ்ரியா. 2012 ஆம் ஆண்டு 59 வது தேசிய திரைப்பட விருது விழாவில் சில்லர் பார்ட்டி திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்ற ஷ்ரியா ஷர்மா, தற்போது கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தனது சிறந்த கதாநாயகி விருது பெறுவாரா? பொருத்திருந்து பார்க்கலாம்.